🧶விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்தத் தொடர் ஜூன் 26 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
🧶இயக்குனர் லக்ஷ்மி சரவணகுமார் எழுதி இயக்கிய தமிழ் க்ரைம் த்ரில்லர் வெப் தொடர் ஆகும். இத்தொடர் ஜியோ சினிமா (JioCinema) அல்லது ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) தளத்தில் வெளியாகியுள்ளது.
:கதைக்களம்
🧶இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையில் நடக்கும் குற்றப் பின்னணி மற்றும் பழிவாங்கும் கதையாகும்.கௌரவம் மற்றும் சீருடை அணியும் கனவோடு தொடங்கும் லிங்கத்தின் பயணம், எதிர்பாராத கொலைக் குற்றச்சாட்டால் வன்முறைப் பாதையாக மாறுகிறது.ஒரு தலைமுறையின் மனநிலை மற்றும் அன்றைய அரசியல் சூழலையும் இத்தொடர் தெளிவாகப் பேசுகிறது
கதாபாத்திரங்கள்நடிகர்கள்:
🧶கதிர், திவ்யா பாரதி, சத்யா மற்றும் பூர்ணிமா ரவி
ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
.🧶இயக்குநர்: லக்ஷ்மி சரவணகுமார்.
ஷோ ரன்னர்: ‘விலங்கு’ வெப் தொடரின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.
🧶விமர்சனம் மற்றும் சிறப்பம்சங்கள்இது வெறும் தனிமனிதனின் கதை மட்டுமல்ல, வன்முறையை ஆதரிக்காமல், சந்தர்ப்ப சூழலால் இளைஞர்கள் எப்படி ரௌடியிசத்திற்குச் செல்கிறார்கள் என்பதைச் சொல்கிறது.’
🧶கபடி மைதானத்திலிருந்து கேங்ஸ்டர் உலகம் வரை… ‘லிங்கம்’
எப்படி நுழைகிறார் என்பதை சொல்லி இருக்கிறது.
🧶நா.கதிர்வேலன்
திருமணப் பாடல், காதல் பாடல் என கொண்டாட்டமாகப் பாடல்கள் அமைந்து உள்ளது.
🧶 தினேஷ் புருஷோத்தமன்
கேமரா. ‘மகாராஜா’, ‘லவ் டுடே’, ‘லப்பர் பந்து’ என அவரது வெற்றி வரிசையில் ‘லிங்க’மும் சேர்ந்துள்ளது.
🧶‘லிங்கம்’ வெப் சீரீஸ் அதிகாரத்துக்குப் பலியாகும் அவலம் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டி அசத்திய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்தான் இந்த ‘லிங்கம்’ சீரீஸின் ஷோ ரன்னர்.
சிறப்பான படைப்பை கொடுத்து இருக்கிறார்.
🧶‘‘இந்த சீரீஸின் இயக்குநர் லக்ஷ்மி சரவணகுமார் மிகச்சிறந்த எழுத்தாளர். இயக்குநராக அவருக்கு ‘லிங்கம்’ முதல் படைப்பு. ஹாட்ஸ்டாருக்காகவும், லக்ஷ்மியின் நட்புக்காகவும், விகடனுக்காகவும்தான் இதன் உள்ளே வந்து ஒரு வெற்றிப் படைப்பை கொடுத்திருக்கிறார்.
.🧶‘லிங்கம்’ ஒரு தனிப்பட்ட மனிதனின் கதை மட்டும் கிடையாது. அவர் மாதிரியான இளைஞர்கள் சந்தர்ப்ப சூழலில் வழிதவறி ரௌடியிசத்துக்குப் போவது பற்றியதுதான் இந்தக் கதை.
அதை எந்த இடத்திலும் வன்முறையை ஆதரிக்கும் தொடராக இல்லாமல் இயக்குனர் கொடுத்திருப்பது சிறப்பு
🧶அன்றைக்கு இருந்த அரசியல் சூழல், மக்களின் மனநிலை, இளைஞர்களின் சிந்தனை என எல்லாவற்றையும் ‘லிங்கம்’ தெளிவாகப் பேசுகிறது.
‘லிங்கம்’ நம் மனதுக்கு எப்படி நெருக்கமாக இருக்கிறது என்றால்
🧶, ஒரு தமிழ்நாட்டு கபடி வீரர், கேரளா தொடங்கி மும்பை வரைக்கும் ரசிகர் மன்றங்கள் கொண்டவர். அவர் விளையாடினால் நூற்றுக்கணக்கில் திரள்கிறார்கள். பெரிய போலீஸ் ஆபீஸராக ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, அவர் வாழ்க்கை திசைமாறி எப்படி எப்படியோ போய் 34 வயதுக்குள் இறந்துவிடுகிறார். இந்த 85-90 காலகட்டத்தைப் பார்க்கும்போது நாம் பார்த்த விளையாட்டு வீரர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
இந்த காட்சிகளை நம் மனதுக்கு நெருக்கமாக அமைகிறது.
🧶 இன்றைக்கு மாதிரியான தொழில் வாய்ப்புகள் அன்று இல்லை. தென்தமிழ்நாட்டில் அப்போது வளர்ச்சி குறைவுதான். இந்த விளையாட்டு வீரர்கள் ரயில்வே, கஸ்டம்ஸ், காவல்துறையில் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை மாறிவிடும். அப்படி ஒரு தலைமுறை இருந்தது. லிங்கத்தின் கதையை அந்தத் தலைமுறையின் கதையாகப் சொல்லி இருக்கிறார்கள்.. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி நல்ல வேலைக்குப் போனவர்களை பார்த்த கையோடு, திசைமாறிப் போனவர்களையும் பார்த்து இருக்கிறோம் அப்படியொருவரின் கதையே ‘லிங்கம்.’ பா.ராஜநாராயணன் எழுதிய ‘லிங்கம்’ புத்தகத்தின் இன்ஸ்பிரேஷனும் இதில் இருக்கிறது.
மொத்தத்தில் இந்த லிங்கம் வெற்றிப்பாதையில் பயணிக்கிறான் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா
🧶மக்கள் தொடர்பாளர்
ரேகா