லவ் ஓ லவ்’ (Love *Oh Love) திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

🧶இயக்குநர் லக்ஷ்மண், சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோரிடம் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படம்
இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களையும் காதல் கதையுடன் இணைத்து சொல்லி இருக்கிறது இந்த
லவ் ஓ லவ்”வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

கதை களம்

🧶மிடில் கிளாஸ் சார்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர்
ஹீரோ பவிஷ்,
இவர் மாதம் 40,000 சம்பளம் வாங்கி, தன் குடும்பம் உண்டு, தான் உண்டு என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே
நாயகி அவந்திகாவை பார்க்கிறார்.பார்த்ததும், காதலிக்கிறார்.
ஆனால் அந்த காதல் ஏடாகூடமாக மாறிப் போக,
காதலியிடம் இருந்து தப்பித்து,
துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்கு வந்த மாதர் சங்கத்தை சேர்ந்த வனிதா, பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.

நாயகன் ரகுவரன்
அவந்திகாவை பார்த்துவுடன் காதல்
கொண்டு அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலிக்கிறார்
நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார்.பதினைந்து லட்சம் கடன்காரராக ஆகிறார்.

ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.
அதே சமயம் காதலிக்காக ,
இஎம்ஐ, மூலமும் கிரெடிட் கார்டு மூலமாகவும், கடன் வாங்கிய பவிஷ் பைக்கை, கடன் கொடுத்தவர்கள் பறிமுதல் செய்ய, நடுரோட்டில் அவமானப்படுகிறார்கள் .பவிசும் அவர்அப்பா கே .எஸ் ரவிக்குமாரும் ,
இதனால் மனமுடைந்து
கே. எஸ். ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, ?என்பதை செல்வராகவன் இடம் பவிஷ் சொல்லுகிறார்.
சரி இருவரும் பிரிந்து விடுங்கள் என்று சொல்லும் பொழுது, நாயகி இல்லை எனக்கு பவிஸ் வேண்டும் என்கிறார்.
அதற்கு பவீஸ் போடும் கண்டிஷன்
என்ன? இருவரும் அதன் பிறகு ஒன்று சேர்ந்தார்களா? என்பதே விருவிருப்பான திரைக்கதை ….
படம் முழுக்க இளமை கொண்டாட்டமாக, இன்றைய டீன் ஏஜ் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர்.

நடிகர் & நடிகைகள்

🧶 பவிஷ் நாராயண்
ரகுவரன் என்ற, கதாபாத்திரத்தில் மிடில் கிளாஸ் இளைஞனாக, அப்பா, அம்மாவுக்கு தங்கை கவிதாவுக்கு, ஏற்ற அண்ணனாக இருக்கும் பொழுதும் சரி, அவர் அவந்திகாவை காதலித்து அவஸ்தைப்படும் பொழுதும் சரி.
கடன் காரர்களிடம் சிக்கி தவிக்கும் போதும் சரி, நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
பாடல் காட்சிகளில், நடனத்தில், சண்டைக் காட்சிகளில், வெளுத்து வாங்கி இருக்கிறார்.
குட்டி தனுசு பார்ப்பது போலவே காதல் கொண்டேன் படத்தில் பார்த்தது போலவே இருந்தது.
நாயகன் இன்ஜினீயரிங் முடிச்சவர்.
அதை வச்சு அப்பா, அம்மா, தங்கச்சியை காப்பாத்தணும்னு நினைக்கிறார்.
அந்த காட்சிகள் பவிஷ்க்கு பாந்தமாக பொருந்தி இருந்தது.

🌸நாயகி, அவந்திகா என்ற கதாபாத்திரத்தில்,
நாகா துர்கா நடித்திருக்கிறார்.
இல்லை வாழ்ந்திருக்கிறார். தன் காதலன் மீது அன்பு பொழியும் பொழுதும், கடன்காரனிடம் சிக்கி அவதிபடும் பொழுதும், அலுவலகத்தில் தன்னை ஒருவன் ஈ.சி.ஆர் பங்களாவுக்கு வர சொல்லும் பொழுதும் ,பொங்கி எழுகிறார். அம்மாவுக்கு தெரியாமல் கடன் வாங்கிக் கொண்டு அவஸ்தைப்படும் கதாபாத்திரத்தில் அழகான நாயகி அவஸ்தையான நாயகியாக நடித்திருக்கிறார். நல்ல வரவு நல்ல நடிப்பு.

தெலுங்குல நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடும் பிரபலமான யூடியூபரானா
நாகதுர்கா, ஏராளமான பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார். அவரை தமிழ்ல அறிமுகப்படுத்தி ,. இந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

🧶இயக்குனர்
செல்வராகவன்
அரிச்சந்திரன், என்னும் காவல்துறை அதிகாரியாக வந்து நாயகனுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.
செல்வராகவன்,
வழக்கமா இதுவரை பார்த்த செல்வராகவனா இல்லை .அவர் தோற்றத்தை மாத்தி காதல் பிரச்சினையை கேட்டுட்டு அவர் தீர்வு சொல்ற கேரக்டர்
கச்சிதமாக இருக்கிறது.

🧶இயக்குனர்
கே. எஸ். ரவிக்குமார்,
மிடில் கிளாஸ் குடும்பத் தலைவராக நாயகனின் அப்பாவாக வந்து நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.

🧶மாதர் சங்கத் தலைவியாக லேகா என்ற கதாபாத்திரத்தில்
வனிதா விஜயகுமார் அலப்பறையோடு அசத்தி இருக்கிறார்.
அவர் வரும் காட்சிகளில் தியேட்டர் அதிருகிறது.

🧶ரம்யா, இளமையான அம்மாவாக, நாயகியின் அம்மாவாக வருகிறார் .சில காட்சிகள் வந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அவந்திகாவை, நான் நன்றாக வளர்க்கவில்லை, என்று அவர் அழும் காட்சிகள் உருக வைத்திருக்கிறது.

🧶ஆதித்யா கதிர்
ஒரே காட்சியில் வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்துகிறார் பிளாக்கில் டாஸ்மார்க் வாங்கும் அந்த ஒரு சீன் தியேட்டரில் கைதட்டலுடன் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.

🧶அனு ஸ்ரீ வேலன் என்கிற திருநங்கை
மெர்லின் என்ற முக்கியமான வேடத்தில்
ஆணும் பெண்ணும் என்னவாக இருக்கணும்னு அவங்க பேசற விஷயம் சூப்பர்.
என்று அவர் பேசும் வசனம் மனதில் இடம் பிடிக்கிறது. கதையின் மையத்தில் அவரும் பங்கு வகிக்கிறார்.

🧶இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள
இந்த படம்
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட இளைஞனோட வாழ்க்கைல நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும்
இயக்குனர் அருமையாக இயக்கியிருக்கிறார்.

ஒரு நடுத்தர வர்க்கப் பையனுக்கும் கொஞ்சம் வசதியான பொண்ணுக்கும் காதல் வந்தால். அவங்க ரெண்டு பேருக்குமான உலகம் வேற எப்படி இருக்கும். அவங்க பயணம் என்னவாகும்
,எங்க போயி முடியும்
என்று சமூக அக்கறையோடு படத்தை இயக்கி இருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.

.பெற்றோர்கள் மகனை கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறாங்க. அவன் படிப்புக்காக வீட்டை விற்கிறாங்க; இல்லைனா சேர்த்து வச்ச பணத்தை மொத்தமா செலவழிக்கிறாங்க.
படிச்சு முடிச்சதும், ஒரு தொழில் தொடங்கலாம்னு வங்கிகள்ல லோன் கேட்டா தர மாட்டாங்க. அதனால அவன் ஏதோ ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போயி மாசம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கியாச் சுன்னா, எல்லா வங்கியும் லோன் கொடுக்க ஓடி வரும். அவன் கேட்ட லோன் கிடைக்காது, ஆனா, செலவு பண்றதுக்கும் காஸ்ட்லியா வாழறதுக்கும் வங்கிகள் லோன் கொடுக்கும். இப்படியான உலகத்துக்குள்ளதான் நாம வாழ வேண்டியிருக்கு.
என்ற வசனங்களும் அதை காட்சிப்படுத்தி சொல்லியிருக்கும் திரைக்கதையும், தொழில்நுட்பம் பாராட்ட வைக்கிறது.
இன்றைய காலத்துக்கு ஏற்ற படமாக வந்துள்ளது. நல்ல காதலுக்கு தடையாக இருப்பது பணமா? அன்பா? என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு ஒரு நல்ல கதையை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்.
இந்த அருமையான கதையை தேர்வு செய்த கதை
விவாதத்தில் பங்கேற்ற
எஸ். தேவராஜ்,
ராஜேஷ், சுந்தரமூர்த்தி,
ஜெய்ஸீ,
ஜெயபிரகாஷ் இளம் பிரதி,
கோமதி ராமலிங்கம்,
வேல்முருகன்சுப்ரமணி , ஜாஸ்மின்,
ஹரீஸ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் அந்த உழைப்பு வீண் போகாது.

🧶 பிரதீப் பி.ஜே. வேய்ன் பேவி இசை அமைச்சிருக்காங்க.
பாடல்கள் குத்துப்பாடலாகவும், ரசிக்கும் படியும் இளைஞர்களுக்கு ஏற்ற பாடலாக அமைந்திருக்கிறது.

🧶பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு
காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. நடனக் காட்சிகளில், சண்டை காட்சிகளில், கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அருமையான ஒளிப்பதிவு

🔥 என் .பி .ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு
கச்சிதமாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.

🔥பா .மகேந்திரன் ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்
அரங்க அமைப்புகள் படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட லொகேஷன்கள் பாராட்ட வைக்கிறது

🔥அபிஷேக் சீனிவாஸ், சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார் .
முதல் சண்டை காட்சி காமெடியாக இருந்தாலும், இரண்டாவது சண்டை காட்சி அனல் தெரிக்கிறது.

🔥காஸ்டியூம் டிசைனராக
ஹரிஷ் கா. ரமேஷ் .
ஐடி பெண்ணாக வரும் அவந்திகாவுக்கு, ஆடைகள் தேர்வு கச்சிதமாக இருக்கிறது.
மிடில் கிளாஸ் இளைஞர் ரகுவரனுக்கு, ஆடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது.
மற்ற எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஆடை தேர்வு சிறப்பு.

🧶Co-Directors : Mutharasan Shanmugam, Suriya Thavamani Pandian
Associate Directors : V. Ramachandar, N. Yuvaraj, S.K. Vikram, Vimal, Santhosh Balaji

🧶Dubbing : K. Jagan – Le Magic Lantern Studio

🧶VFX : D NOTE – Murthy

🧶DI : Vels – D Studio

🧶Colorist : KS.

🧶 Rajasekaran D.F. Tech

🧶Mixing : S.P. Narayanan

🧶Sound Design : Shreyas Bhat

🧶Publicity Designer : Sathish TP

🧶Production Executive : Rajesh Kanna
Production Manager : Saravana Kumar. V
Accounts : K Chellan

🧶Stills : Mahesh Jayachandran

🧶Promotions : N S Jegadeesan (DIGITALLY)

🧶மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்கள்.

🧶மொத்தத்தில் இந்தப் படம் இளைஞர்களை திரையரங்குக்கு அழைத்து வரும்.
யூத் ,வித் லவ் யூ,
போன்ற படங்களின் வரிசையில் ,இந்த படமும் வெற்றி படமாக அமையும்.

Comments (0)
Add Comment