🎬 படத்தின் கதைக்களம்
சூரி (பகத் பாசில்) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். பணத்தின் மீது அதிக பேராசை கொண்டவர். பணம் இருந்தால் மட்டுமே பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் சாத்தியம் என்று நம்பும் அவர், அதற்காக ஏமாற்றவும் பொய் சொல்லவும் தயங்காதவர். ஒரு கட்டத்தில் ஒரு டானை ஏமாற்ற முயன்று மாட்டிக் கொள்கிறார். உயிருடன் தப்பிக்க 2 நாட்களில் அவருக்கு ₹25 லட்சம் பணம் தேவைப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சூப்பர்நேச்சுரல் சக்திகள் கொண்ட திவ்யா (சாரா பாலேகர்) என்ற சிறுமியை அவர் கடத்துகிறார். ஆனால், அந்தச் சிறுமியோ சூரியை தன் பெற்றோருடன் சேர்த்து வைக்க வந்த ஒரு ‘மேஜிக் நிபுணர்’ (Magician) என்று தவறாக நம்புகிறாள். இவர்களுக்கு இடையே உருவாகும் பாசப் பிணைப்பும், அதைத் தொடர்ந்த மாயாஜாலம் கலந்த fantasy + comedy + adventure + emotion கலந்த படம். இயக்கம் ஷஷாங்க் யெலெட்டி; ஃபகத் ஃபாசிலுடன் குழந்தை நட்சத்திரம் ஸ்ஸாரா பாலேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஃபகத் சூரி என்ற பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காத கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு சூழ்நிலையில் திவ்யாவுக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பது சூரிக்குத் தெரிய வருகிறது.
அதன் பிறகு சூரி–திவ்யா இருவருக்கும் இடையே உருவாகும் உறவையும், அந்த மாயாஜால உலகத்தையும் மையமாக வைத்து கதை செல்கிறது
⭐ ஃபகத் ஃபாசில்
படத்தின் முக்கிய பலமே ஃபகத். குறிப்பாக( சூரி) எதிர்பாராத மாயாஜால சம்பவங்களைப் பார்த்து குழம்புவது, எரிச்சலடைவது, பின்னர் அதில் ஈர்க்கப்படுவது போன்ற காட்சிகளில் அவருடைய இயல்பான நடிப்பு நன்றாக வேலை செய்கிறது. தெலுங்கில் நேரடியாக சோலோ ஹீரோவாக களம் இறங்கியுள்ள பகத் பாசில், தன் வழக்கமான எதார்த்த நடிப்பு மற்றும் மேனரிசங்கள் மூலம் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். அவரது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு இந்த நடிப்பு நிச்சயம் பிடிக்கும்.
⭐
,திவ்யா கதாபாத்திரத்தில் நடித்த Ssara Palekar-ன் நடிப்பு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
குழந்தை என்பதால் அதிகப்படியான “cute” நடிப்பைத் திணிக்காமல், அமைதியான மற்றும் இயல்பான body language மூலம் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார்
குறிப்பாக பகத் ஃபாசிலுடன் வரும் காட்சிகளில் அவர்களுடைய chemistry நன்றாக வேலை செய்கிறது.
திவ்யாவுக்கு இருக்கும் அமானுஷ்ய சக்திகளை வெளிப்படுத்தும்போதும் overacting செய்யாமல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, பெரும்பாலான காட்சிகளில் பகத் ஃபாசில் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகருடன் திரையைப் பகிர்ந்துகொண்டு அவருக்கு இணையாக காட்சியைத் தாக்குகிறார்
இந்தப் படத்தில் பெரியவர்களின் கதையைவிட சூரி–திவ்யா உறவு உருவாகும் விதம்தான் மனதில் நிற்கும் பகுதி. முதல் பாதியில் அந்த உறவு நன்றாக கட்டமைக்கப்படுகிறது; இரண்டாம் பாதியில் ஆக்ஷன்/குண்டர்களை நோக்கி கதை செல்லும்போது அந்த அழகு சற்று குறைகிறது
பகத் ஃபாசிலின் நடிப்பும், Ssara Palekar-ன் திவ்யா கதாபாத்திர நடிப்பும் படத்தைத் தாங்கும் முக்கிய அம்சங்கள்.
: முதல் பாதி: படத்தின் ஆரம்பக் காட்சிகளும், ஃபேண்டஸி உலகத்தை அறிமுகப்படுத்தும் விதமும், முதல் பாதியும் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் நகர்கிறது
‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’ ஒரு நல்ல டிஸ்னி பாணி ஃபேண்டஸி படமாக வந்துள்ளது ஜோரான திரைக்கதையால் ரசிக்க வைக்கிறது லாஜிக் பார்க்காமல், பகத் பாசிலின் நடிப்புக்காகவும், சில அழகான எமோஷனல் காட்சிகளுக்காகவும் இந்தத் திரைப்படத்தை பார்க்கலாம்
🔥வில்லன் கதாபாத்திரம்: நகைசுவை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் ரசிக்க வைக்கிறது.
🔥பகத் பாஸில் நண்பனாக வரும் கார்த்திகேயா, நடிப்பு நன்றாக இருக்கிறது. நண்பனுக்காக தன் சொத்தை விற்று 20 லட்சம் கொண்டு வரும் போது நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
🔥போலீஸ் அதிகாரி
கிரண் நடிப்பு ,
திவ்யாவின் மாமாவாக வரும் பிரதாப், மற்றும் திவ்யாவின் உற்ற நண்பனாக வரும் அந்த நாய் குட்டி நடிப்பு அருமை.
🔥 தொழில்நுட்ப கலைஞர்கள்
🔥பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவும், தயாரிப்பு வடிவமைப்பும் ஹைதராபாத் நகரத்தை மிகவும் அழகாகக் காட்டியுள்ளன
திரைக்கதை: இயக்குனர் ஷஷாங்க் யெலெட்டி ஒரு நல்ல ஃபேண்டஸி ஐடியாவை எடுத்திருக்கிறார், அதை சுவாரசியமாகக் கொண்டு சென்று ள்ளார்.
🔥எடிட்டிங் மற்றும் வேகம் படத்திற்கு மிகப்பெரிய பலம்
கிளைமாக்ஸ் காட்சியில் எடிட்டிங் அற்புதமாக இருக்கிறது.
🔥: கால பைரவாவின் பின்னணி இசை ஓகே ரகம் ஒட்டுமொத்தப் படத்திற்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது இசை.
.!
: 🎬 தொழில்நுட்பக் குழு
இயக்கம் & திரைக்கதை: ஷஷாங்க் யெலெட்டி (Shashank Yeleti)
கதை/திரைக்கதை: ஷஷாங்க் யெலெட்டி, ஹம்சா அலி
வசனம்: K.G.R. அசோக்
ஒளிப்பதிவு: பிராட் பிரான்சிஸ் (Brad Francis ACS)
படத்தொகுப்பு: பிரவீண் ஆண்டனி (Praveen Antony)
இசை: காலா பைரவா (Kaala Bhairava)
தயாரிப்பு வடிவமைப்பு: சந்தீப் சுவர்ணா (Sandeep Suvarna)
ஆடை வடிவமைப்பு: ரமா ராஜமௌலி
ஒலி வடிவமைப்பு: மனோஜ் எம். கோஸ்வாமி
VFX மேற்பார்வை: ஃபானி விஹாரி காந்தலா, ஷிகர் ஸ்ரீவாஸ்தவா
ஒளிப்பதிவு உதவி/கேமரா குழு: Fareed Shaik, Sharath Yerra
⭐ தயாரிப்பாளர்கள்
S.S. கார்த்திகேயா, ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் தயாரித்துள்ளனர்; S.S. ராஜமௌலி படத்தை வழங்கியுள்ளார்.
🎥 தொழில்நுட்பத்தில் கவனிக்க வேண்டியது
படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று Brad Francis-ன் ஒளிப்பதிவு. குறிப்பாக Divya சம்பந்தப்பட்ட fantasy/supernatural காட்சிகளில் VFX முக்கிய பங்கு வகிக்கிறது. Hyderabad-ன் உண்மையான locations-லும் படம் படமாக்கப்பட்டிருப்பதால், fantasy கதைக்குள் ஒரு இயல்பான visual feel கிடைக்கிறது
குழந்தைகளுடன் பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் ,இந்த படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. குடும்பத்தோடு பார்க்கலாம். கொண்டாட வேண்டிய படைப்பு இந்த படம்.
🔥மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்