🎥 கதை களம்
“பருந்து” ஒரு கிராமப்புறப் பின்னணியில் உருவாக்கப்பட்ட திரைப்படம்.
படத்தின் ஆரம்பத்தில், மன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சென்ராயன், கல்லூரியில் படிக்கும் உமாவையும், அவரது வீட்டில் ஓட்டுநராக வேலை செய்யும் மூர்த்தியையும் ஊரை விட்டு ஓடிப்போக ஐடியா கொடுத்து, பேருந்தில் அனுப்பி வைக்கிறார்.
ஓடிப்போன உமாவின் அப்பா கணேசன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். தன்னுடைய மூத்த மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்திருக்கும் நிலையில், மகள் ஓடிப்போனது தெரியவந்தால் திருமணம் நின்றுவிடும் என்று அஞ்சுகிறார். இதனால், ஊர்த் தலைவர் சுப்பையா என்ற அழகுமலையிடம் சென்று அழுது புலம்புகிறார்.
அழகுமலை, மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி, “நான் தேடிக்கொண்டு வந்து உன் மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று நண்பனுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
தன்னுடைய தம்பி விநாயக், ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவரை அழைத்துக்கொண்டு, ஓடிப்போன காதலர்கள் எங்கே சென்றார்கள் என்று தேட ஆரம்பிக்கிறார்.
ஓடிப்போன காதலர்கள் கிடைத்தார்களா? அவர்களைக் கண்டுபிடித்து ஆணவக் கொலை செய்தார்களா? அல்லது புத்திமதி சொல்லித் திருத்தினார்களா? என்பதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறது படம்.
சாதி மறுப்புத் திருமணம் செய்யும் காதலர்களை இப்படியும் திருத்தலாம் என்று வித்தியாசமான முறையில் சொல்லியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆணவக் கொலைகளுக்கு மாற்றாகச் சிந்தித்திருக்கிறார் தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குநருமான அழகுமலை. அவருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்; வாழ்த்தலாம்.
⭐ நடிகர் – நடிகைகள்
ஆர். அழகுமலை
ஊர்த் தலைவராக நடித்திருக்கும் அழகுமலை, காதலர்களைத் தேடும் பரபரப்பையும் நண்பனுக்கு புத்திமதி சொல்லும் ஆலோசனைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நேர்மையான மனிதராக அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
வி.ஆர். விநாயக்
அழகுமலையின் தம்பி ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விநாயக், அடிதடி மற்றும் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.
சென்ராயன்
ஆட்டோ ஓட்டுநராக வரும் சென்ராயன், காதலிக்கும் இளைஞர்களை உசுப்பேற்றி பணம் சம்பாதிக்கும் குறுக்கு புத்தி கொண்ட மனிதராக நடித்திருக்கிறார். அழகுமலையிடமும் மன்சூர் அலிகானிடமும் மாட்டிக்கொண்டு அடி, உதை வாங்கும் காட்சிகளில் கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
மன்சூர் அலிகான்
மாரிமுத்துவின் மைத்துனராகவும், ஓடிப்போன உமாவின் தாய்மாமனாகவும் நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான். இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக அமைந்துள்ளன. சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தில் ஷர்மிஸா, பேரரசு, அப்புக்குட்டி, அமர் மாரிமுத்து, எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
🎥 தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம் மற்றும் தயாரிப்பு – ஆர். அழகுமலை
கதை மற்றும் வசனம் சிறப்பாக அமைந்துள்ளன. ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
காதலிக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் பெற்றோர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அருமையாகக் காட்டியிருக்கிறார். மதுரையில் கதை நடப்பதுபோல உருவாக்கி, மாட்டுத்தாவணி, கூமாபட்டி போன்ற இடங்களை கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் விறுவிறுப்பு எந்த இடத்திலும் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக மன்சூர் அலிகான், அப்புக்குட்டி, சென்ராயன், விநாயக் போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, படத்தை கலகலப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
இசை – ஜோன்ஸ் ரூபர்ட்
ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக அமைந்துள்ளன. கங்கை அமரன் எழுதிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பாடல் வரிகளும் சிறப்பாக உள்ளன.
ஒளிப்பதிவு – காசி விஸ்வநாதன்
காசி விஸ்வநாதன் தனது ஒளிப்பதிவின் மூலம் மதுரையை அழகாகக் காட்டியிருக்கிறார். மாட்டுத்தாவணி, கூமாபட்டி எனப் பல இடங்களிலும் கேமரா சிறப்பாகச் சுழன்று விளையாடியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக அமைந்துள்ளது. பாடல் காட்சிகளும் குளுமையாக உள்ளன.
படத்தொகுப்பு – ஜெய் கிருஷ்ணா
ஜெய் கிருஷ்ணாவின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
நடனம் – அசோக் ராஜா
அசோக் ராஜாவின் நடனப் பயிற்சி ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இரண்டு மெலடி பாடல்களும் இனிமையாக அமைந்துள்ளன.
பாடல்கள் – கங்கை அமரன்
கங்கை அமரன் எழுதிய பாடல்களின் வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளன.
மேலாளர்: நரசிம்மா
மக்கள் தொடர்பாளர்: விஜய் முரளி
🎯 மொத்தத்தில் “பருந்து” திரைப்படம் சொல்வது என்ன?
காதல் திருமணத்தை எதிர்க்கும் சாதிய மனநிலையும், அதனால் உருவாகும் ஆணவக் கொலைகளும் சமூகத்தில் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.
இயக்குநர் இந்தக் கதையை வெறும் காதல் கதையாக மட்டும் சொல்லாமல், ஆணவக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகளையும் பேச முயன்றுள்ளார்.
குறிப்பாக, இயக்குநர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையான அணுகுமுறை கவனிக்க வைக்கிறது. பிள்ளைகளின் காதல் மற்றும் திருமண முடிவுகளால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மனநிலையையும் எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
🔥 இயக்குநரின் அணுகுமுறையில் சிறப்பு
இளம் ஜோடிகளை மட்டும் மையப்படுத்தாமல், அவர்களின் காதலுக்குப் பின்னால் இருக்கும் சாதி, குடும்பக் கவுரவம், காதல் திருமணம் மற்றும் சமூக அழுத்தம் போன்ற காரணிகளைச் சினிமா வழியாகப் பேச முயன்றிருப்பதே இப்படத்தின் வலிமையான அம்சம்.
இத்தகைய அணுகுமுறை, குறிப்பாகத் தமிழகச் சூழலுக்குப் பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.
இயக்குநர் அழகுமலை, தனது முதல் முயற்சியிலேயே இயக்குநராகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆணவக் கொலைகளுக்கு மாற்றாகச் சிந்திக்கத் தூண்டும் கதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
அவருடைய இந்த முயற்சி வெற்றி பெற, கிளாசிக் சினிமா சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்! 🙏