இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பொம்மை’. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்., பொம்மை படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
கதையின் கரு
மன நல பிரச்சினைகளால் அவதிப்படும் நிலையில் பொம்மைகள் செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் ராஜூவுக்கு (எஸ். ஜே.சூர்யா) ஒரு குறிப்பிட்ட பொம்மை மேல் காதல் உள்ளது. அதனை சிறு வயது காதலி நந்தினியாக (பிரியா பவானி ஷங்கர் ) நினைத்துக் கொள்கிறார். அதனை யாரிடமும் விற்று விட வேண்டாம் என தனது கம்பெனி சூப்பர்வைசரிடம் தெரிவிக்கிறார். இதனிடையே குடும்ப நிகழ்வுக்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் பொம்மை விற்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனால் கோபத்தில் சுப்ரவைசரை கொலை செய்கிறார்.
எஸ்.ஜே. சூர்யா ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. இருந்தும் அவர் இன்னும் யாருக்குத் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்க இம்மாதிரியான படங்களைத் தேர்வு செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக ஒன்றும் இல்லாத இப்படத்தில் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும்
எஸ்.ஜே. சூர்யா நண்பராக நடித்திருக்கும் டவுட்டு செந்தில் கடமைக்கு வந்து சென்று இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவின் முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் ஜானகிராமன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாளம் கலந்து தமிழ் பேசும் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி அவரது வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்றிருக்கிறார். இவர்களுடன் நடித்த இன்ன பிற இதர நடிகர்களும் அவரவர் வேலையை செய்திருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் எஸ்.ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதை காட்டிலும் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் கெமிஸ்ட்ரி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பை மட்டும் ரசிப்பவர்களுக்கு பொம்மை ரசிக்க வைக்கும். பொம்மை நிச்சயம் காலம் காலமாக பேசப்படும் எப்படி அவள் அப்படித்தான். குணா பேசப்படுகிறதோ அது போல இப்படமும் பேசப்படும் வாழ்த்துக்கள் சூர்யா சார் இப்படி பட்ட படம் பண்ண செம தில் வேண்டும்