ராக்கதன் விமர்சனம்

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஆக்சன் கிரைம் திரில்லர் படமாக வெளிவந்துள்ள ராக்கதன் படத்தின் திரைவிமர்சனத்தை பார்க்கலாம் வாங்க வம்சி கிருஷ்ணா இந்தப் படத்தின் நாயகனாக ஸ்பெஷல் போலீசாக அண்டர் கிரௌண்டில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கும் இஸ்லாமியபோலீசாக நடித்திருக்கிறார். அவர் ஒவ்வொரு குற்றங்களையும் கண்டுபிடிக்கும் பொழுது அவ்வளவு விறுவிறுப்பு படத்திற்கு பலமே வம்சிகிருஷ்ணா தான் சேவிங் செய்யாத தாடியும் துருதுரு கண்களும் அவர் நடிப்பும் படத்திற்கு பலம் விக்னேஷ் பாஸ்கர்.தினேஷ்கலைசெல்வன் நடித்திருக்கிறார்கள் சரி படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம் நடிகை காயத்ரி நாயகன் விக்னேஷ் பாஸ்கர் மற்றும் தினேஷ் கலை செல்வன் மூவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் நாயகனுக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது அவன் வீட்டில் ஏழ்மை இருந்த போதும் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போதும் அதற்கு பணம் தேவைப்படும் போதும் அந்த மாடலிங் துறையை விட்டு விலகி ஒரு கம்பெனியில் வேலைக்கு செல்கிறார் அங்கு அவனால் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் அந்த வேலையை விட்டு வெளி வருகிறார் அவனது காதலி காயத்ரி மாடலிங் துறையில் சென்னையில் வாய்ப்பு இருப்பதைக் கண்டு திருச்சியிலிருந்து நாயகனை சென்னைக்கு அனுப்புகிறார் சென்னை வந்த நாயகன் கொலை செய்யப்படுகிறார் அந்த கொலை செய்தது யார் என்ன நடந்தது மாடலிங் காக தயார் செய்யப்படும் அந்த அலுவலகத்தில் நாயகனை கொன்றது யார் இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறான் இந்த ராக்கதன்.

நாயகி காயத்ரி ரெமோ நாயகனை தேடி அலைகிறார் கூடவே வரும் அலெக்ஸ் அவரும் மாயமாக மாறுகிறார் என்ன நடந்தது படத்தின் இயக்குனர் கதையை நன்றாக கொண்டு சென்றுள்ளார் ஆண் விபச்சாரம் பற்றியும் இந்த படம் பேசுகிறது மாடலிங் துறையில் நடக்கும் இல்லீகல் ச***** பற்றியும் இந்த படம் பேசுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக படமாக்கப்பட்டு இருக்கிறது முடிவு சரியாக இருக்கிறது

ரியாஸ்கான் நடிப்பு சரியான வில்லத்தனம் திருநங்கை போல அவர் நலினம் காட்டி நடிப்பதாகட்டும் மாடலிங் துறையில் இதெல்லாம் சகஜம் என்று நாயகனை தாஜா செய்யும் போதும் நடிப்பு கைதட்ட சொல்கிறது படத்தில் ஹைலைட்டே அவர் தான் ஸ்டைலாக வருகிறார் நன்றாக நடித்திருக்கிறார்.

தினேஷ் கலைச்செல்வன் ஒரு நல்லவனா வில்லனா எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று படத்தில் புரியாத இருந்தாலும் நண்பனுக்காக கடைசி காட்சியில் உயிர் விடும் போது நட்பே பெரிது என்று காட்டும் கதாபாத்திரமாக பிரகாசிக்கிறார்.

காயத்ரி ரமா இவர் காதலனுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் சதை போட்டால் நன்றாக இருக்கும்
போலீசாக வரும் சாம்ஸ் சில காட்சிகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறார் வம்சியுடன் படம் முழுக்கவே வந்து துப்பு துலக்குகிறார கவர்ச்சி காட்சிக்கு கொஞ்சம் கூட வஞ்சம் வைக்காமல் சஞ்சனா சிங் கச்சிதமாக வந்து போகிறார் விக்னேஷ் பாஸ்கரை அடைய நினைக்கும் அவரின் காம பார்வை இளைஞர்களுக்கு சூடு
படத்தை தயாரித்திருக்கும் ராணி ஹென்றி சாமுவேல் அவர்களுக்கும் பாஸ்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லலாம் நல்ல ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்ததற்கு. இயக்குனருக்கு பாராட்டுக்கள்

Comments (0)
Add Comment