ரங்கோலி படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

அரசு பள்ளியா தனியார் பள்ளியா என்று விவாதம் நடத்தும் அளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்துள்ளது கல்வியின் முக்கியத்துவம் இந்த இரண்டு பள்ளியிலும் இருக்கிறது ஆனால் யாருக்கு எது பொருந்துமோ அதுதான் சரியென இயக்குனர் சொல்லி உள்ளார்
இப்படத்தின் நாயகன் சத்யா கடலில் நீந்தும் மீன் அவரை கொண்டு போய் கிணற்றில் போட்டால் என்ன செய்வது என்று அந்த ஒரு வசனம் தான் படத்தின் முக்கியத்துவமான டிவிஸ்ட்டாக அமைந்துள்ளது.

உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி’.
இன்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் அப்பா அம்மா கஷ்டப்பட்டு கடன் மேல் கடன் வாங்கி வட்டிக்கு வட்டி கட்டி படிக்க வைக்கிறார்கள்
அதை உணர்ந்து அந்த நடுத்தர குடும்பத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பொறுப்போடு நடக்கிறார்களா பொறுப்போடு படிக்கிறார்களா அவர்களின் நிலை என்ன அதையும் இந்த படம் சொல்கிறது.

கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’.

அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை என்ன

அரசு பள்ளியில் மகிழ்ச்சியாக படிக்கும் சத்யா என்ற மாணவன் குடும்ப வற்புறுத்தலினால் தனியார் பள்ளிக்கு மாற்றப்படுகிறான். விருப்பமில்லாமல் செல்லும் சத்யா அந்த புதிய பள்ளியின் சூழலை எவ்வாறு எதிர்கொண்டான். அந்த தனியார் பள்ளிக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்த குடும்பம் எவ்வாறு அந்த பிரச்சனையை எதிர்கொண்டது என்பதையும் குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக இப்படம் பேசுகிறது.
படம் முழுக்க எதார்த்தம் வறுமைக் கோட்டில் வாழும் ஆடுகளம் முருகதாஸ் அவரது மனைவி சத்யாவின் அக்கா என்ற அந்த பாச கூட்டுக்குள் தீராத வறுமை மகன் அரசு பள்ளியில் சேர்க்கை சரியில்லை என்று அடிதடி எல்லாம் பண்ணுகிறான் என்று அவனை தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள் தனியார் பள்ளிக்கு சென்ற பின்னும் அங்கும் சத்யாவுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு
சண்டை

நாயகி பார்வதி நாயகன் சத்யா இருவரையும் தவறாக டாய்லெட்டில் எழுதி வைத்து இருக்கிறது அந்த கும்பல் இதனால் தனியார் பள்ளியில் இருந்தும் சத்யாவுக்கு டி சி கொடுப்பேன் என்று மிரட்டல் அங்கும் சென்று ஆடுகளம் முருகதாஸ் மகனுக்காக கெஞ்சுகிறார் அழுகிறார்

சத்யா தன் அம்மா தன் அக்கா தன் அப்பா எல்லோரும் நாம் படிப்புக்காக கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து மனம் வருந்துகிறார்கள்

பார்வதியின் காதலை ஏற்க மறுக்கிறான் விரக்தியாக வாழ்கிறான் அதன் பின் முடிவு என்ன ஆனது அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு சென்ற சத்யா தனியார் பள்ளியில் படித்து வெற்றி பெற்றாரா
தன் காதலி பார்வதியை கரம் பிடித்தானா தன்னை லோக்கல் என்று ஒதுக்கும் அந்த தனியார் பள்ளி மாணவர்களின் எலும்புகளை உடைத்தானா
என்ற எதிர்பார்ப்பு

அந்த குடும்பமே சத்யாவின் உயர்வுக்காக பாடுபடுகிறது அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆனது இப்படி குடும்ப உறவுகளோடு தனியார் பள்ளி அரசு பள்ளி யில் இருக்கும் கல்வி தரத்தையும் வைத்து ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்

அவரும் அரசு பள்ளியில் தான் படித்தேன் என்று சொல்கிறார் அரசு பள்ளி மாணவர்களின் பெருமை படுத்தி தனியார் பள்ளி மாணவர்களையும் பெருமைப்படுத்தி யாருக்கும் மன நோகாமல் ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

சத்யாவாக நடித்திருக்கும் ஹம்ரேஷ்நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் தன் தாத்தா இயக்குனர்களான மாமா இவர்களின் கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறார்.

குடும்பத்தை நினைத்து உருகும் போதும் சரி சக மாணவர்களிடம் போட்டி போட்டு ஆக்ரோஷமாக சட்டையை பிடிக்கும் போதும் சரி, பார்வதி மீது காதல் கொள்ளும் போதும் சரி தனியார் பள்ளி எச் எம் இடம் காலில் விழுந்து அழும்போதும் சரி அம்ரேஷ் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் அவருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது தமிழ் சினிமாவுக்கு ஒரு புது வரவு இளமையான வரவு இனி பல படங்களில் ஹீரோவாக அவரை நாம் பார்க்கலாம் பின்னி பெடல் எடுப்பார் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் காதல் காட்சியிலும் ரொமான்டிக்கில் நம்மை மகிழ்விப்பார் என்று பல காட்சிகளில் தெரியப்படுத்துகிறார் விழிகளில் என்ன ஏக்கம் என்ன உருக்கம் .

தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியரிடம் அவர் மனம் உடைந்து தோளில் சாய்ந்து அழும் போது நம்மை உருக வைத்து விடுகிறார் வண்ணாரப்பேட்டை ராயப்பேட்டை என்றாலே பலதரப்பட்ட மக்களும் வாழுகிறார்கள் பல சாதிக்காரர்களும் வாழ்கிறார்கள் என்பதை இயக்குனர் இப்படத்தில் நிரூபித்திருக்கிறார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் காட்டாமல் மற்ற சமூகத்தினரும் சிரமப்படுகிறார்கள் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டி இருக்கிறார் வட்டிக்கு பணம் கொடுக்கும் அந்த ஆசாமி முதலில் மிரட்டினாலும் முருகதாஸின் நல்ல மனத்தை புரிந்து கொண்டு அவரின் மகன் தனியார் பள்ளியில் படிக்க கஷ்டப்படுகிறான் என்று தெரிந்து கொண்டு அவருக்கு ஓட்டலில் துணி துவைக்கும் வேலையை வாங்கி கொடுக்கிறார் அந்த இடம் மனம் நெகிழ வைக்கிறது படத்தின் உயிர் நாடி ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது இசை சுந்தரமூர்த்தி மென்மையான இசையில் மிரட்டி இருக்கிறார் படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் 10 நிமிடம் தான் கச்சிதமாக இருக்கிறது இளமையான நாயகியாக மாறுகின்ற கேரக்டில் வரும் நாயகியும் இளமையாக இருக்கும் இளமையான அம்மா சத்யாவின் அம்மாவாக முருகதாஸ் மனைவியாக நடிப்பு நன்றாக இருக்கிறது மொத்தத்தில் இந்த ரங்கோலி வண்ணமயமான பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடியது கடனை வாங்கி தனியார் பள்ளிக்கு அனுப்புவதை விட அரசு பள்ளியை மேல் என்று சொல்லி இருக்கும் எதார்த்தம் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு உதாரணம்

தெய்வதிருமகள், மாநகரம், நிமிர் மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு நடிப்பு பிரகாசமாக இருக்கிறது

மற்றும்
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய்ஸ்ரீ, அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனைவரின் நடிப்பும் இயல்பாகவும் கதாபாத்திரத்துக்கு ஏற்றல் போல் கட்சி அதிகமாகவும் இருக்கிறது அதுவும் முருகதாஸ் அவர் தனியார் பள்ளியில் மகனை சேர்க்கும்போது வேகமாக நடந்து மகனை வா வா என்று அழைக்கும் அந்த பெருமிதம் கண்களில் பளிச்சிடுகிறது ஒவ்வொரு தடவையும் மகன் பள்ளியில் பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டு வரும் பொழுது கலக்கம் அவர் கண்களில் தெரிகிறது மனைவியிடம் கொஞ்சும் போதும் சரி மகனுக்காக கெஞ்சும் போதும் சரி நடிப்பில் மிரட்டி இருக்கிறார் மனுஷன்

சென்னை சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பாக ராயபுரம், காசிமேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என பல பகுதிகளில் படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர். எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமுர்த்தி K.S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு I.மருதநாயகம், படத்தொகுப்பு R.சத்யநாராயணன் மற்றும் கலை இயக்கம் ஆனந்த்மணி செய்துள்ளனர். அனைவரும் பங்கும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது ரங்கோலி போன்ற தரமான படம் வெற்றியடையும் போது தமிழ் சினிமாவின் தரம் உயரும் தரமான படங்கள் மீண்டும் வரலாம்

Comments (0)
Add Comment