ஐமா.’ திரை பட விமர்சனம்

சர்வைவல் திரில்லர்’ சப்ஜெக்டில், எளிமையான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் ‘ஐமா.’ திரை பட விமர்சனம் பார்க்கலாம் வாங்க படத்தில் நாயகன் யூனூஸ் தளபதி விஜய் நகல் போல் இருக்கிறார்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
அன்பான அண்ணன் தம்பி அண்ணன் அலெக்ஸ் மர்மமான முறையில் இறந்து போக தங்கை அனாதை ஆகிறார் அதே போல் நாயகன் யூனிஸ் அப்பா ஹார்ட் அட்டாக் இறந்து போக அம்மா நோய்வாய்ப்பட அம்மாவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மகனுக்கு அதனால் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானம் செய்து பணம் சம்பாதித்து அம்மாவை காப்பாற்ற நினைக்கிறான் நாயகன் அப்போது திடீரென இருவரும் கடத்தப்படுகிறார்கள் அது ஏன்

நாயகனும் நாயகியும்
கடத்தப்பட்டு கட்டடமொன்றின் அறைக்குள் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் ஏதோவொரு மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அந்த அறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை மிரட்டுகிறது

அவர்கள் என்னென்ன செய்தால் அங்கிருந்து தப்பிக்கலாம் என ஒரு குரல் அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதன்படி நடக்கிறார்கள். அடுத்தடுத்த அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டு அதற்குள் நுழைகிறார்கள். ஆனாலும் தப்பிப்பது சவாலாகவே இருக்கிறது.
இருவரும் தப்பிப்பதற்கு லக்கி கேம் விளையாட சொல்கிறது அந்த குரல் அவர்கள் அப்படி விளையாடும்போது பல புதுமையான எண்களை சொல்கிறார்கள் ஆனால் எதுவும் ஒர்க் ஆகவில்லை

திடுதிப்பென ஒரு தாடிக்கார கிழவர் தோன்றி ஏதேதோ பேசி அவர்களைப் பயமுறுத்தி, மனதைக் குழப்பிவிட்டு மறைந்து போகிறார்.
அவர் யார் அவர் ஏன் அங்கு தோன்றினார் அந்த மாய மனிதன் யார் போன்ற பல கேள்விகள் எழுகிறது

‘தப்பிக்கும் முயற்சியில் வெற்றி பெறவே முடியாது’ என்கிற அளவுக்கு சூழ்நிலை சிக்கலாகிறது.
அப்போது இருவரும் அந்த சூழ்நிலையை எதிர்த்து போராட தயாராகிறார்கள் அந்த போராட்டத்தில் வெற்றி கொண்டார்களா அவர்கள் தப்பித்தார்களா அங்கு என்ன நடந்தது

அந்த இளம்ஜோடியின் பின்னணி என்ன? அவர்களைக் கடத்தியது யார்? கடத்தலின் நோக்கம் என்ன? அவர்களுக்குள் செலுத்தப்பட்ட மருந்து எதற்கானது? அவர்களால் தப்பித்து வெளியில் வர முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு சற்றே பரபரப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா.

நாயகன் யூனுஸுக்கு குழந்தைத்தனமும் புன்னகையும் போட்டி போட்டுக் குடியிருக்கும் முகம். அதைத் தாண்டி இக்கட்டில் சிக்கிய மன உளைச்சலை, இயலாமையை, ஆவேசத்தை முடிந்தவரை வெளிப்படுத்தி தான் ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகி எல்வின் ஜூலியட் நெகுநெகு உயரம், வளவள தேகம், பளபள புன்னகை என இளைஞர்களைக் கவரும் இளமையோடிருக்கிறார். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்தில் மனம் படும் அவஸ்தைகளை முகத்தில் பிரதிபலிப்பதும், இக்கட்டான சுழலில் தன்னை முத்தமிட்ட நாயகன் மீது எரிச்சலடைந்து பின் தானே அவனது இதழோடு இதழ் இணைவதுமாய் துடிப்பான நடிப்பால் ஈர்க்கிறார்.
இருவரும் மனம் விட்டு பேசி தங்கள் பிரச்சினைகளை சொல்லி அங்கிருந்து தப்பிக்க நினைப்பது எதிர்பாராத திருப்பம் வில்லனாக வரும் சண்முகம் ராமசாமி திடுக்கிட வைக்கிறார் கதையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார் அவரை எதிர்த்து நாயகனும் நாயகியும் போராடும்போது படம் செம விறுவிறுப்பாக போகிறது

படத்தை தயாரித்திருக்கும் சண்முகம் ராமசாமி வில்லனாக வந்து அளவாக மிரட்டியிருக்கிறார். அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா பாலு, மனோகரன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்போரும் கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்க, கே.ஆர்.ராகுலின் பின்னணி இசை, விஷ்ணு கண்ணனின் ஒளிப்பதிவு என மற்ற துறைகளின் பங்களிப்பும் நேர்த்தி!

பாடல்கள் ஏராளமாக தாராளமாக கடந்துபோகிறது

கடத்தப்படும் இளைஞனும் இளம்பெண்ணும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பவர்கள் என்பதும், நெருக்கடிக்குள் சிக்கியபின் உயிர் பிழைக்க போராடுவதுமாய் கதையோட்டம் நகர்வது,

படத்தின் சில காட்சிகள், பார்த்துக் கொண்டிருப்பது பேய்ப்படமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி, பின்னர் ‘மெடிக்கல் கிரைம்’ ஜானரில் வேகமெடுத்தோடுவது படத்திலிருக்கும் தனித்துவம். இயக்குநர் அடுத்தடுத்த படங்களை இன்னும் தரமாய் தருவார் என்பது ‘ஐமா’விலிருந்து கிடைக்கும் நம்பிக்கை.
அவர்கள் கடத்தப்பட்ட விதமும் வில்லனின் நோக்கமும் சரியாகப் புரிந்து போகுதால் படம் அழுத்தமாக படம் பார்ப்பவர்களுக்கு வருகிறது படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது நாயகி அண்ணனை நினைத்து பாடும் பாடல் நாயகன் அம்மாவை நினைத்து பாடும் பாடல் போராட்டமே வாழ்க்கை என்று பாடல் இப்படி ஒவ்வொரு பாடலும் ரிஸ்க் வைக்கிறது ஒரு திரில்லர் படத்துக்கு தேவையான கதை இந்த ஐமா என்றால் தெய்வீக சக்தி பலம் வாய்ந்தவன் என்று பொருள் மொத்தத்தில் இந்த படம் குறைவான பட்ஜெட் என்றாலும் தரமான திர்லர் படமாக வந்திருக்கிறது அனைவரும் காண வேண்டிய படம்குழு வுக்கு வாழ்த்துக்கள்

Comments (0)
Add Comment