ஃ படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃ’. இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

பிரஜின் கதாநாயகனாக நடிக்க. கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார். இருவருக்கும் செம மேட்ச்

இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள்

இப்படத்தில் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்
ஒரு கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு இசை என்ன தேவையோ அதை நன்றாகவே கொடுத்திருக்கிறார் பாடல் காட்சிகளிலும் இசை ரசிக்க வைக்கிறது

ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவு படத்திற்கு பல மாக இருக்கிறது இரவு நேர காட்சிகளிலும் காட்சிகளிலும் திகில் காட்சிகளிலும கேமரா கேமரா புகுந்து விளையாடி உள்ளது

நாயகன் போலீசுக்கு பயந்து ஓடும் போதும் போலீஸ் துரத்தும் போதும் கேமரா மேன் நன்றாக உழைத்து இருக்கிறார்

அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்துள்ளார் மழையில் போடும் சண்டைக் காட்சி விறுவிறுப்பாக இருக்கிறது சித்தர் படம் வரைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் மோதிக் கொள்வது யார் கடைசியில் கொல்லப்படுவார்கள் என்ற விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

கர்மா ஒருபோதும் மன்னிக்காது என்கிற இந்த படத்தின் ஒன் லைனே படத்தின் கதை

யார் ஒருவரும் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு நல்லது கெட்டது என எது செய்திருந்தாலும் அதற்கான கர்மாவை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். நாயகன் இப்படத்தில் எடிட்டராக வருகிறார் அவரது நண்பர்கள் பிரபலமான இயக்குனர் ருத்ர னிடம உதவி இயக்குனர்களாக இருக்கிறார்கள் நாயகனின் காதலி சினிமா வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்

இதனால் நாயகன் தன் நண்பர்களான நண்பர்களான உதவி இயக்குனர்களிடம் சொல்லி ருத்திரனிடம். சான்ஸ் வாங்கி தரச் சொல்கிறார்

இயக்குனரோ மது போதையில் பெண் பித்தனாக இருக்கிறார் அவரிடம் வாய்ப்பு தேடிச் சென்ற காயத்ரி ரெமோ மர்மமான முறையில் இறந்து போகிறார் அவரைக் கொன்றது யார். அதே சமயம் ருத்ரன் இயக்குனரிடம் உதவி இயக்குனர் களாக இருந்த நாலு பேரும் தலைமறைவாகிறார்கள் .

அதில் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறந்து போக அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது நாயகன் அதிலிருந்து தப்பித்தானா தன் காதலியை கொன்றவனை கண்டுபிடித்தானா..?

நாயகனை போலீஸ் என்ன செய்தது இதுதான் படத்தின் கதை

நாயகன் பிரிஜின்நன்றாக நடித்திருக்கிறார் நன்றாக ரொமான்ஸ் செய்கிறார் நன்றாக ஆக்ஷன் காட்சியில் நடித்திருக்கிறார் காதலியின் நிலை கண்டு அழும்போது நம் மனதை தொடுகிறார்

நாயகி காயத்ரி ரமா அழகாக காதல் காட்சிகள் வந்து போகிறார் வாய்ப்பு தேடும் போது பட்டுப் புடவையில் அழகாகவும் இருக்கிறார “இந்தப்படத்தின் மூன்று புள்ளிகளாக பிரஜின், பருத்திவீரன் வெங்கடேஷ் மற்றும் நான் என மூவரும் நடித்துள்ளார்கள்

ஒரு சைக்கோ ஓவியர் கதாபாத்திரத்தில் வடக்கு வாசல் ரமேஷ் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் திகிலூட்டு கிறது.

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு ஏற்ப கர்மா நமக்கு திருப்பிக் கொடுக்கும். நாம் இளம் வயதில் நம்மை அறியாமலேயே செய்த தவறுகளுக்கு கூட கர்மா நிச்சயம் பதில் சொல்லும். அதனால் கெடுதல் செய்தால் கர்மா மன்னிக்காது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது”

எனவே தப்பு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த படம் சொல்கிறது

“சென்னை தரமணியில் போலீஸ் உடன் நாயகன் பிரஜினும் மோதும் சண்டைக்காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டு ள்ளது. இந்த படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்

*இப்படத்தின் தயாரிப்பு ; பொன்.செல்வராஜ்

இணை தயாரிப்பு ; C.நளினகுமாரி இயக்கம்; ஸ்டாலின் V இன்றைய சமூகத்திற்கு தேவையான கதையை திரைக்கதையாக எழுதி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சினிமாவுக்குள் சினிமா வாய்ப்பை தேடி செல்லும் பெண்களின் கதி என்ன என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் படத்தை இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் கிளைமாக்ஸ் காட்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் முடித்திருப்பது சிறப்பு

மொத்தத்தில் இந்த ஃபடம் அனைவரும் காண வேண்டிய ஒரு தரமான கமர்சியல் திரைப்படம்

கிரைம் திரில்லர் 80 சதவீதம்

ஹாரர் 20 சதவீதம் என கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் வித்தியாசமான படைப்பு

Comments (0)
Add Comment