வா வரலாம் வா திரை விமர்சனம்

மாசானி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளைச் சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வா வரலாம் வா.இப்படத்தைத் தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்.எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கிறார்.
இப்படம் ஒரு கமர்சியல் ஆன வெற்றிபெறும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் இளைஞர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் இயக்குனர் கதை எழுதி இயக்கி உள்ளார் இப்படத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தி இருக்கிறது தேவாவின் இசை உயிரோட்டமாக இருக்கிறது இதன் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கருமேகங்கள் கலைகின்றன பட நாயகி மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இருவருக்கும் செம பொருத்தம் பாடல்களில் நெருக்கம் காட்டி நன்றாக இருவரும் நடித்திருத்திருக்கிறார்கள்

வில்லனாக “மைம்” கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில்
தோட்டா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்யும் கோபி இனி வில்லனாக அதிக படங்களில் பார்க்கலாம் ஒவ்வொரு முறையும் அவர் கெட்டப் மாற்றிக் கொண்டு அவர் செய்யும் கொலைகள் நெஞ்சை பதற வைக்கும் பொருத்தமான தேர்வு

ரெடின் கிங்ஸ்லீ நடிக்க காயத்ரி
ரேமா,
இருவரும் இந்த படத்தில் காமெடி ஜோடிகள் நன்றாக கலக்கியிருக்கிறார்கள் இருவரும் வரும் இடமெல்லாம் கலகலப்பு

சரவண சுப்பையா,
காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வந்து போகிறார் அவர் அந்த பஸ்ஸை கண்டுபிடிக்கவும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு அவர் போடும் நாடகம் பலே கிளைமாக்ஸ் காட்சியில் அவர் ஒவ்வொன்றாக சொல்லும் பொழுது கைதட்ட வைக்கிறது புத்திசாலித்தனமான போலீஸ் ஆபீஸர்

தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது தங்கள் பணியை நன்றாக செய்துள்ளனர் தீபா செய்யும் துப்பாக்கி காமெடி ரசிக்க வைக்கிறது மீசை ராஜேந்திரன் யார் என்ற கேள்விக்கு கிளைமாக்ஸ்ல் பதில் இருக்கிறது

மேலும், இப்படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.

கதை களம்

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்குச் சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகரச் செயல்களையும் சாதாரணமாகச் செய்யத் தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர்.

இதனிடையே காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல் வயப்படுகிறார்கள். இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு இளம் பெண்கள் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள் அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள், வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் எண்ணம் எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? கொடூரச் செயல்களைச் செய்த வில்லன் என்ன ஆனார்?
ஆகிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் விடை சொல்வதே “வா வரலாம் வா”படத்தின் கதை.

இப்படத்துக்காக, ஜிலுஜிலுன்னு ஏத்துறியே ஜிகர்தாண்டா போல -அந்த புயலப் போல பாயுறியே கபீலுன்னு என் மேல…எனும் கானா எட்வின் எழுதிய பாடலை தேவா பாடியுள்ளார்.

பாடல் எல்லாம் ரசிக்க வைக்கிறது தேவாவுக்கு ஹை பீட்ச் குரல் இறைவன் தந்த வரப்பிரசாதம் அவர் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட்டு அதேபோல் இந்த படத்திலும் அவர் பாடிய பாடலும் அவர் போட்ட மெட்டும் ஹிட்டு

இயக்குனர் பற்றி

இயக்குனர் ரவிச்சந்திரன் இதற்கு முன் நான் அவளை சந்தித்தபோது என்ற அருமையான படத்தை அவரின் சொந்த கதையை படமாக்கி இருந்தார் பரபரப்பாக அப்போதே பேசப்பட்டது இந்த படத்தில் கமர்சியலாக கதை சொல்ல வேண்டும் என்று பரபரப்பாக சொல்லி இருக்கிறார் எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை விறுவிறுப்பு குறையவில்லை படத்தின் ஆரம்பத்தில் கிரைம் செல்வராஜ் கதை சொல்வது போல காட்டி இருப்பது சிறப்பு தயாரிப்பாளர் அதை கேட்பது போலவும் படத்தை துவங்கி வைக்கிறார் தயாரிப்பாளரின் நல்ல மனதிற்காக இந்த படம் வெற்றி அடையும் பாலாஜியின் முதல் படம் அவருக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கிறது நடித்த நடிகர்கள் அனைவரும் பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள்
பிளாஷ்பேக் காட்சியில் பசியை வெல்ல முடியாமல் காமத்திற்கு பலியாக இருந்த மனைவியை கண்டு கதறும் கணவர் இதை பார்த்துக் கொண்டிருந்த மகன் பிச்சை எடுப்பது போன்ற காட்சிகள் மனதை கலங்க செய்கிறது ஃபிளாஷ் பேக் காட்சி
படத்தின் ஹைலைட் ஆரம்பத்தில் இருந்து சில காட்சிகள் லாஜிக் மீறலாக இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர் சண்டை பயிற்சியாளர் கலர் கரெக்ஷன் டி யை காஸ்ட்யூமர் எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள் வா வரலாம் வா படம் ரசிகர்களை நிச்சயம் தியேட்டருக்கு வா வரலாம் வா என்று அழைக்கும்

Comments (0)
Add Comment