ஆளவந்தான் திரை விமர்சனம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள கவனிக்க வேண்டிய படம் “ஆளவந்தான்”. நிச்சயம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அந்த பொக்கிஷம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கூட புதிய பட்டியலை பார்க்க முடிகிறது.

குடும்பத்தில் இருக்கும் தந்தை தவறு செய்தால் குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் திரைக்கதையை கொண்ட படம் ஆளவந்தான். . இரண்டு கமலில் ஒருவர் கமேண்டோ, மற்றொருவர் சைக்கோ. நந்து என்கிற நந்த குமாரன் மிரட்டுகிறார்.

1984ல் தான் எழுதிய “தாயம்” என்ற கதையை மையமாக கொண்டு தான், ஆளவந்தான் திரைக்கதை உருவாக்கினார் கமல்ஹாசன். என்ன ஒரு மிரட்டல. படத்தை தாணு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருப்பார். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் மூன்றுமே கமல் தான். 14 நவம்பர் 2001ல் 178 நிமிடங்களுக்கு வெளியானது ஆளவந்தான்.அன்றே 20கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், இந்தியில் இப்படம் உருவானது. இந்தி படத்துக்காக மேக்கிங். நாயகியாக ரவீணா டாண்டன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மனிஷா கொய்ராலா நடித்தார்கள். சன்டை காட்சிகள் கூட இந்தி படத்தில் பார்ப்பது போல ஞாபகம்

“சிலந்திகள் பெண்கள், கவிதைகள் என படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது

ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை பயன்படுத்தியது ஆளவந்தான் (2001) திரைப்படத்தில் தான். லைவ் சவுண்ட், மாறுபட்ட திரைக்கதை என்று ஒவ்வொரு காட்சிகளிலும் வித்தியாசம் மட்டுமே நீங்கள் உணரமுடிந்திருக்கும். தவிர, இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், இரண்டு கமலும் சண்டைப்போடுவதை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில், அன்றைய காலத்திலேயே எடுத்து மிரட்டியிருப்பார்கள்.கமலுடன் கமல் ஹாசன் மோதல் நம்ப முடியாத அதிசயங்கள்

“ தனிமை, என் தப்பு?
பூ விழாம தலை விழுந்திருந்தா? யோசிச்சிப்பாரு தப்பெல்லாம் உன் தப்பாயிருக்கும், நான் கம்பிக்கு அந்தப் பக்கம், நீ இந்தப் பக்கம்” என்ற காட்சியில் கேமிரா, கம்பிக்கு அந்தப் பக்கத்திலிருந்து, இந்தப் பக்கத்திற்கு நகரும் காட்சி ஒன்றே படத்தின் ஒளிப்பதிவுக்கு சான்று. அருமை யான ஒளிப்பதிவு திரு.வுக்கு வாழ்த்துக்கள்

சிறு வயதில் யார் எந்தப் பக்கம் செல்லவேண்டும் என்று, நந்துவும், விஜய்யும் நாணயம் சுண்டி முடிவெடுப்பார்கள். அதில் பூ விழுந்தால் கடவுள், தலை விழுந்தால் மிருகம் என்பதையே குறியீடாக சொல்லியிருப்பார் கமல்ஹாசன். படத்தின் முடிவு அதையே பிரதிபலிக்கும்
முதன்முறையாக ஆளவந்தான் 610 பிரிண்ட் போடப்பட்டது. இந்திய திரையுலகிலேயே அதிகப் பிரெண்ட் போடப்பட்டது இப்படத்திற்கு தான்.

ஆளவந்தான்
இந்த வகையில் தொழில்நுட்பம், நூதனம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது ஆரம்பம் முதலே. கனமான கதை, மாறுபட்ட திரைக்கதை, புதிய உத்திகள், நவீன தொழில் நுட்பம், புதுப்புது தோற்றங்கள் என்று தமது படங்களின் ‘இமேஜையே தமது இமேஜாக ஆக்கிக் கொண்டார்.கமல் அவரது இமேஜுக்குத் தகுந்தாற்போல வடிவம் பெறுகிறது. மொத்தத்தில் ஆளவந்தான் அருமை யான ஒளிப்பதிவு அருமை யான இசை அருமை யான நடிப்பு என மிரட்டுகிறார் கமல்

Comments (0)
Add Comment