பூமர் அங்கிள் திரை விமர்சனம்

ஓவியாஆவியா? எனபழைய ஜோக்ஸ் தங்கத்துரை, ஹரிணி ஐலவ்யூ என மறைந்த நடிகர் சேசு, நாட்டாமை வேம்புலி யாக ரோபோ சங்கர், ஜொள்ளு விட்டு சமையல் செய்யும் பாலா, இவர்கள் உடன் யோகி பாபு. அவர் மனதில் இடம்பிடித்து கணவனாக்கிக் கொள் ளும் ரஷ்யப் பெண். இவர்களை சுற்றி நடக்கும் காமெடி கலாட்டா தான் பூமர்அங்கிள் யோகிபாபு வும் அந்த ரஷ்யா பெண் இருவருக்கும் திருமணம் முடிந்து அவளிடமிருந்து யோகி பாபு டைவர்ஸ் கேட்க, அதற்கு சம்மதிக்கும் அவள்; ஊரிலுள்ள யோகிபாபுவின் வீட்டில் ஒரு நாள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறாள். அதன்படி அவளுடன் தனது அரண்மனை போன்ற பிரமாண்ட வீட்டுக்கு போய்ச் சேர்கிறார். போனபின் அங்கு அமானுஷ்யமாக நடக்கும் சிலபல விஷயங்கள் யோகிபாபுவின் மூளையைக் குழப்பிவிட, அறிவியல் ஆராய்ச்சி அதுஇதுவென இன்னொரு பக்கம் அந்த ரஷ்யப் பெண் ஏதேதோ செய்கிறார். அந்த வீட்டுக்குள் யோகி பாபு, கே பி ஒய் பாலா ,தங்கதுரை, ரோபோ சங்கர், சேசு நாயகன் நாயகி ஓவியா, எல்லோரும் உள்ளே வந்தது எதற்காக எதை கண்டு பிடிக்க உள்ளே வருகிறார்கள் என்பதை இரண்டு மணி நேரம் சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்

குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்களை தமிழில் கொண்டுவந்து குழந்தைகளை ரசிக்க வைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம் இந்த படம் வெளியாகும் முன்பே டிரெய்லரை பார்த்து குழந்தைகள் படம் பார்க்கும்போது ஒவ்வொரு கேரக்டரையும் சொல்லும் போது குழந்தைகள் எவ்வளவு அட்வான்ஸ் ஆக இருக்கிறார்கள் என்பது புரிகிறது இந்த சம்மர் சீசனில் குழந்தைகளுக்கு ஏற்ற குதூகளிக்க வைக்கும் படமாக இந்த படம் வந்துள்ளது

உண்மையில் அந்த ரஷ்யப் பெண் யார்? எதற்காக யோகிபாபுவுக்கு மனைவியானாள்? அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சங்கதிகளின் பின்னணி என்ன? அங்கு நடக்கும் அறிவியல் ஆராய்ச்சி எந்தவிதமான விளைவுகளை உருவாக்கக்கூடியது? இப்படியான பல கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இருக்கிறது… இயக்கம் ஸ்வதேஷ் புத்திசாலித்தனமான கதை திரைக்கதை அமைத்து அறிவியலையும் அமானுஷ்யம் ஒன்றாக இணைத்து இன்றைய ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகர்களை நடிக்க வைத்து கவர்ச்சிக்கு ஓவியாவையும் கொண்டு வந்து கலகலப்பாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

யோகிபாபு தன் பாணியில் ஓரளவு கேலி கிண்டல் கேலி வசனம் பேசி நடித்துள்ளார் ஓவியா பேய் போலவும் தொழில்நுட்பத்தில் உருவான மாயத்தோற்றத்திலும் வருவது கவனிக்க வைக்கிறது. பாடல் காட்சியொன்றில் கணிசமான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அவ்வளவு ரசிக்க வைக்கிறது படப்பிடிப்பில் இருந்து இங்கு வந்தேன் என்று சொல்லி அந்த அரண்மனையில் நுழையும் போது சேசு ஓவியா இடுப்பில் கை வைக்க இடுப்பே இல்லை என்று சொல்ல அதற்கு பழைய ஜோக் தங்கதுரை ஓவியா இடுப்பு பற்றி தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று சொல்லும் இடம் செம கலகலப்பு

(சில தினங்கள் முன் மறைந்த) சேஷு கோமாளிபோல் முகம் முழுக்க வர்ணம் பூசிக் கொண்டு பளபளப்பான பெண்ணைக் காதலிக்க வட்டமிட்டு திட்டமிடுவது சிரிப்பூட்டுகிறது. அவர் ஹரிணி ஹரிணி என்று சொள்ளு விட்டுக் கொண்டு அங்கிள் என்று சொல்லிவிட்டாலே என்று புலம்புவது அவர் மீது பரிதாப பட வைக்கிறது இப்படி ஒரு நல்ல நடிகர் மறைந்து விட்டார் என்று அனுதாபப்பட வைக்கிறது

ஊர் நாட்டாமையான ரோபோ சங்கர் ஹல்க் போல் உருமாறி வில்லன் போல் அதகளப்படுத்துகிறார் கண் தெரியாமல் அவதிப்படும்போது ஹல்க் ஆக வந்து பல்க்காக அட்டகாசம் செய்யும் போதும் ரோபோ சங்கர் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார்

பழைய ஜோக் தங்கதுரையும் கே பி ஒய் பாலாவையும் சேசுவையும் யோகி பாபுவையும் அவர் புரட்டி புரட்டி அடிக்கும் போது தியேட்டரில் குழந்தைகள் கரவொலி சக்திமான் போல் சில நிமிடங்கள் வருகிற எம் எஸ் பாஸ்கர் தேர்ந்த நடிப்பைத் தந்து போகிறார். அவர் வரும் காட்சிகள் செம கலகலப்பு

கே பி ஒய் பாலா, பழைய ஜோக் தங்கதுரை இருவரும் கலகலப்பு ஏரியாவில் இணைந்து பிணைந்து களமாடியிருக்கிறார்கள். ஒரு அருமையான கூட்டணி இந்த கூட்டணி தொடர்ந்து நடிக்கலாம் மக்களிடம் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்

அயல்நாட்டுப் பெண்ணாக வருகிறவரின் பங்களிப்பில் குறையில்லை. அந்த அரண்மனையில் இருக்கும் அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயத்தை தேடி இடைவேளை வரைந்து கொண்டே இருக்கிறார் இடைவேளைக்கு பிறகு அவர் என்ன தேடுகிறார் எதற்காக யோகி பாபு வை மணந்து கொண்டார் இந்த ரகசியம் வெளிப்படுகிறது அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது சீனியர் நடிகை சோனாவும் படத்திலிருக்கிறார். சேசுவிடும் நடந்தது என்ன என்று கேட்பதாகட்டும் உன் காதலைப் பற்றி சொல்லாதே அங்கு நடந்ததை சொல் என்று கேட்பதாகட்டும் சோனியா அமர்ந்து இடத்திலே ஸ்கோர் செய்திருக்கிறார்

சிறுவர் சிறுமிகள் இணைந்தாடும் ஜிங்கா புங்கா பாடல் உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளை உற்சாகமாக்கும். பாடலும் பாடலுக்கான நடனமும் உற்சாகமான இசையமைப்பும் காட்சி அமைப்பும் அரங்க அமைப்புகளும் அற்புதமாக இருக்கிறது அந்த பாடல் கட்சி செம ஹிட்
ஒளிப்பதிவாளர்
தண்டபாணியின் ஒளிப்பதிவு கச்சிதம். ஒரே வீட்டுக்குள் படம் ஆக்குவது மிக சிரமம் அதையும் அழகாக படம் ஆக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது

பிரமாண்ட அரண்மனை, டெக்னிகல் சமாச்சாரங்கள் என கலந்திருக்கும் கதைக்களத்தை மெருகேற்ற சிரத்தையாய் உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் பி ஆனந்த். பாடல் காட்சிகளுக்கும் அறிவியல் சம்பந்தப்பட்ட அம்சங்களும் கலை இயக்குனரின் கைவண்ணம்

ரஷ்யப் பெண் ஒருவர் குறிப்பிட்ட ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை அபகரிக்கத் திட்டமிட்டு, தமிழ்நாட்டு ஆசாமியொருவரை கல்யாணம் செய்துகொள்ளும்படியான விறுவிறுப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ள்ளார் இயக்குநர். யோகிபாபு, ஓவியா வரும் காட்சிகள் செம இயக்குனர் சாமர்த்தியம் ஒரு காமெடி கதையை அறிவியலோடு அமானுஷ்யத்தோடு சம்பந்தப்படுத்தி அலுப்பு தட்டாமல் இயக்கியிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது பூமர் அங்கிள் சம்மர் சீசனுக்கு ஏற்ற ஜாலியான படம்

‘திரைக்கதையில் சுவாரஸ்யம் பூமர் அங்கிள் கலகலப்பு ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து இரண்டு மணி நேரம் ஜாலியாக சந்தோஷமாக கொண்டாட வேண்டிய படம் நிச்சயம் எல்லோரையும் கவரும் அதுவும் குழந்தைகளை நிச்சயமாக கவரக்கூடிய படம் சந்தோஷத்தை கொடுக்கும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் ஒளிப்பதிவாளரு க்கும் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் ஓவியாவுக்கும் வாழ்த்துக்கள்

Comments (0)
Add Comment