Identity திரை விமர்சனம் ரேட்டிங் 4-/5

ஆரம்ப காட்சியி லேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.
அந்த கயவனுக்கு பின்னால் அமர் என்ற அயோக்கியன்
அவன் நாயகன் சரண்(டொவினோ தாமஸ் )தங்கை
நீ ராஜாவையும் அதேபோல சீரழித்து பிளாக்மெயில் செய்கிறான் இந்த நிலையில் மீண்டும்

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.
சமுத்ரா சில்க்ஸ் என்ற அந்த பாழடைந்த மாளிகை எரியும் பொழுது அந்த கயவனும் சேர்ந்து இறந்து போகிறான்
அவன் எரிந்து சாம்பலாவதை அங்கு வந்த திரிஷா பார்க்கிறார் அவர் ஏன் அங்கு வந்தார் அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு?
பெங்களூரில் தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் திரிஷா கோவையில் இந்த கொலைகாரன் எதற்காக பார்க்க வந்தார்?

திரிஷா நேரில் பார்த்த பிறகு. அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டு
அதன் பின் கொலை காரணி கண்டுபிடித்தாரா?

பெங்களூருவில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் வினய்
யார்?

விசாரிக்க,
கோவை வரும்
வினய்
திரிஷா வோடு,
டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது, இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலையை என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.
படத்தின் கதை
செம டுவிஸ்ட் செம திரைக்கதைஉள்ள படம் முழுக்க ஆச்சரியப்பட வைக்கிறது.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி வேறோர் படம் பார்ப்பது போல் மாறுகிறது.
இடைவேளைக்குப் பிறகு படத்தில் ஏகப்பட்ட டுவிஸ்ட் எல்லாமே ரசிக்க வைக்கிறது

டொவினோ தாமஸ் (ஹரன்)

மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் அவர் வேறுபடுத்தி சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் தாமஸ் யார் அவர் தான் கொலையாளியா? அல்லது அந்த கொலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று படம் பார்ப்பவர்களை இறுதிவரை சீட்டு நுனிக்கே கொண்டு வந்து கட்டிப்போட்டு விடுகிறார் டொவிணோ என்கிற ஹரண்

திரிஷா (அலிஸா)

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.
அவர் வரும் காட்சிகளில் மௌனம் அதிகமாக இருந்தாலும் அவர் பார்வையில் தீர்க்கதரிசனம் கொலையாளியை கண்டுபிடித்து தீர வேண்டும் என்ற அந்த உக்கிரம் அவர் நடிப்பு பாராட்ட வைக்கிறது

வினய் (ஆலம்)

வினய் இந்த கதாபாத்திரம்
வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இடைவேளை வரை ஒரு வினய் இடைவேளைக்கு பிறகு இன்னொரு வினய் என வேறுபடுத்தி நடித்திருக்கிறார்
வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

இயக்குனர்

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைக்கிறார் இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் மாற்றி அமைத்துள்ளார்
படத்தின் வெற்றிக்கு இயக்குனர் எழுதிய திரைக்கதை தான் மிக முக்கிய பங்காக வகிக்கிறது

கிளைமேக்ஸ்

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான்
அதற்கு அடுத்து வருகின்ற காட்சிகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றது இயக்குனருக்கு சபாஷ் சொல்லலாம்

மிரட்டல் இசை

. ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம்
பின்னணி இசை மிரட்டி இருக்கிறார்

, ஒளிப்பதிவு அட்டகாசம்.

காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி பளிச்சென்று ஒளிப்பதிவு
செய்து இருக்கிறார்
வெல்டன் ஒளிப்பதிவாளர்

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்

படத்தொகுப்பாளர், ஒப்பனையாளர், அரங்கமைப்பாளர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்
அனைவரும் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார்கள்
டெக்னிக்கல் விஷயத்தில் படம்
வெற்றி பெற்று இருக்கிறது

மொத்தத்தில் இந்த Identity மூலம் ஒரு அருமையான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை வழங்கியிருக்கிறது ஐடெண்டி பட குழு

2025 ஆம் வருடம் துவக்கத்திலேயே படக்குழுவினருக்கு அளவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது

மக்கள் தொடர்பாளர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்