ஷேன் நிகான்,
கலையரசன்,
நிஹாரிகா
கொனிடேலா,
ஐஸ்வர்யா தத்தா,
கீதா கைலாசம், கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன்,
இவர்கள் நடிப்பில்
இப்படத்தை
தயாரித்து உள்ள
தயாரிப்பு
நிறுவனம்
எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் B ஜெகதீஷ்
” மெட்ராஸ் காரன்” என்றதலைப்பிற்கு ஏற்றபடி தொடங்கியதும் எந்தவித சமரசமுன்றி ஓட்டம் பிடிக்கிறது. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையுடன் ஒவ்வொரு திருப்பங்களும் பிணைந்து கமர்சியல் தீனியை தாராளமாக திரையில் தெளிக்கின்றன. குறிப்பாக, சில இடங்களில் காட்சிகளை விட, பின்னணி இசையே ஒருவித பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி கதைக்குள் நுழைக்கிறது. வயலினின் வேகத்தையும், காட்சிகளையும் வேகத்தையும் பொருத்தி முதல் பாதியில் விறுவிறுப்பான திரையனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ
“மெட்ராஸ் காரன்
இவரது முதல் படம் ரங்கோலி
மாறுபட்ட கதைக்களம் , என்றாலும் கமர்ஷியலாகப்போகவில்லை .அதனால் இந்த முறை கமர்ஷியலாக , விறு விறுப்பாக ஒரு படத்தைக்கொடுத்திருக்கிறார் இயக்குனர்
புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்து நன்றாக வாழ்ந்து சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து மீண்டும் தான் பிறந்த புதுக்கோட்டையிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு திருமணத்தை ஏற்பாடு செய்து நாயகன் செம உற்சாகமாக இருக்கிறார்.
நாயகி நிக்காரிகா, அவரது தந்தை ராஜா ராணி பாண்டியன், அவர் தங்கை, என எல்லோரும் புதுக்கோட்டையில் வந்து திருமணத்துக்கு ரெடியாகிறார்கள்
நாயகன் அம்மா கீதா கைலாசம் ,மாமா கருணாஸ் ,மற்றும் அத்தைகள் தீபா சங்கர், உட்பட எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் பொழுது நாயகன் நாயகியை ஹோட்டலில் சென்று பார்ப்பதற்காக காரில் வருகிறார் அப்பொழுது அந்த காரில் கர்ப்பிணி பெண்ணான ஐஸ்வர்யா தாத்தா அடிபட்டு விட இதனால் ஐஸ்வர்யா தத்தா கணவர் தலையரசன் மற்றும் அவரது கும்பல்கள் நாயகனை பிடித்து அடித்து உதைத்து போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்சனை
கொண்டு போகிறார்கள்
அதன் பிறகு கலையரசன் குழந்தை ஆஸ்பத்திரியில் இறந்த போக ,அந்த குழந்தை இறப்புக்கு நான்தான் காரணம் என்று நாயகன் இரண்டு வருட சிறை தண்டனை ஏற்று சிறைக்கு செல்கிறார் அதன் பிறகு சிறையில் இருந்து வந்த பிறகு அந்த குழந்தை நாயகன் காரில் அடிபட்டு இறக்கவில்லை என்று உண்மை தெரிய வர அப்படி ஆனால் எப்படி அது இறந்தது என்று கண்டுபிடிக்க நண்பர்களுடன் மீண்டும் புதுக்கோட்டை வந்து எதிரிகளை துவம்சம் செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்
நாயகன்
சத்யா (ஷேன்)
நாயகன் ஆக “ஷேன்” கச்சிதமாக நடித்துள்ளார்
தனக்கு திருமணம் என்று சந்தோசமாக இருக்கும் பொழுதும் தன்னுடைய காரில் கர்ப்பிணி பெண் அடிபட்டு விட்டார் என்று அழுது புலம்புவதும் பிறகு சூழ்ச்சி வலையில் நாம் சிக்கி விட்டோம் என்று தெரிந்து அதை முறியடிக்க புறப்படும் பொழுது தன் அப்பா பாண்டியராஜன் இறந்த பிறகு அவரது செருப்பை எடுத்துக் கொண்டு அழுவது என்று நடிப்பில் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறார் சண்டைக்காட்சிகளில் நிறைய அதிரடி காட்டி இருக்கிறார்.
நிஹாரிகா
நாயகி யாக
நடித்துள்ளார் .. நல்ல வித்தியாசம் காட்டி இருக்கிறார்
கர்ப்பிணியாக ஐஸ்வர்யா தத்தா
.அவரது அப்பாவித்தனமான முகமும், வெள்ளந்தியான பேச்சு சூப்பர்
கலையரசன்(துரை சிங்கம்)
கலையரசன் குழந்தை மீது பாசம் உள்ள தந்தையாக தன் மனைவி கல்யாணியை விரும்பும் பாசமுள்ள கணவனாக நாயகனுடன் மோதும் வில்லனாக பல பரிமாணங்களில் அருமையாக நடிப்பை வழங்கி இருக்கிறார்
சில இடங்களில் இவர் நல்லவரா கெட்டவரா என்பது புரியாத புதிராக இருக்கிறது ஆனால் கிளைமாக்ஸ்சில் மனதை டச் செய்கிறார்.

படத்தில் நாயகன் தாய்மாமாக வரும் கருணாஸ் நடிப்பு சிறப்பாக இருக்கிறது
ஒளிப்பதிவு பிரசண்ணா எஸ். குமார். மூன்று முக்கியப்பெண் கதாபாத்திரங்களை க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட் என அழகாகவே படம் பிடித்துள்ளார் .இசை சாம் சி எஸ். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்
எடிட்டிங்க் குட் .121 நிமிடங்கள்
தான் படம் செம ஷார்ப்
ஆர். வசந்தகுமார் கச்சிதமாக எடிட்டிங் செய்திருக்கிறார்
சபாஷ் டைரக்டர் முதல் காட் சியில் இருந்து இறுதிக்காட் சி வரை எங்குமே தொய்வு இல்லாமல் பரபரப்பாகக்காடசிகளை நகர்த்திய விதம்
சிறப்பாக இருக்கிறது
: முதற்பாதியில், ஒரு திருமண வீட்டில் என்ன நடக்குமோ அந்த கலகலப்பு அப்படியே இருக்கிறது”
காரில் விபத்து ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு இடமாகப் பதற்றத்துடன் நாயகன் அலைவதும், ஆங்காங்கே அவருடன் இணையும் சிறிய கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதி, ஒரு த்ரில்லர் நாவலுக்கான டெம்ப்ளேட்டுக்குள் அப்படியே பொருந்திப் போகிறது.
கதையின் நாயகன் ஒவ்வொருவரையும் சென்று விசாரிப்பது, தன் குற்றவுணர்ச்சியால் ஹீரோ அழுவது
எனப் போகிறது . திரைக்கதை பரபர என நகர்ந்தாலும், கூடவே ஆயிரம் கேள்விகளும் பின்தொடர்கின்றன. அதிலும் யார் குழந்தை கொன்றது என நாயகன் எடுக்கும் முடிவுகள் படு சுவாரசியமாக இருக்கிறது
கிளைமாக்ஸ் காட்சி படு எதார்த்தமாக இருக்கிறது மனதை டச் செய்கிறது
அபி சரவணன் ஒரு காட்சிகளை வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கின்றனர்
மொத்தத்தில் இந்த மெட்ராஸ்காரன்
மனதுக்கு நெருக்கமானவன்
: Producer : SR PRODUCTIONS – B Jagadish
Writer & Director : Vaali Mohan Das
Music : Sam CS
Cinematographer : Prasanna S Kumar
Editor : Vasantha Kumar
Art – Ananth Mani
Stunt – Dinesh Subbrayan
PRO – Sathish (AIM)
சீரான திரைகதை, எடுத்துக்கொண்ட கதைக்களத்தை வேறு எங்கும் பயணிக்காமல் மனித உணர்வுகளோடு ஒரு உயிரின் அவசியத்தை எமோஷனல் கலந்து விறுவிறுப்பான ஆக்சன் களமாக கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்
வாழ்த்துக்கள்
