ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ என்ற கலகலப்பான படம் தந்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரித்துள்ளார்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கதை களம்: நாயகன் கல்லூரி யில் படிக்கும் போது லாஸ்லியாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்
லாஸ்லியா ஓகே சொல்லாமல் சாக்கு போக்கு காட்டி ஹரி பாஸ்கரை அலைய விடுகிறார் மனம் நொந்து போன நாயகன் லாஸ்லியா விடம்
, சவால் விட்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார்.
அவருடைய நேரம்
அந்த பெண்ணும் இன்னொருவரை திருமணம் செய்துக் கொள்ள விரக்தியின் உச்சிக்கே சென்று
அழுது புலம்பி
தற்கொலைக்கு முயற்சிக்கிறார் ஹரி அவரை ஷாரா காப்பாற்றுகிறார். அதன் பின்னர், ஒரு வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக ஹரி பாஸ்கர் செல்ல, அங்கே லாஸ்லியாவை மீண்டும் பார்க்கிறார். அவரை மறுபடியும் காதல் செய்ய வைக்க போராடும் அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை
ஹரி பாஸ்கரும், லாஸ்லியாவும் இணைந்தார்களா?
என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் படம் வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லும் அளவுக்க
இயக்குனர்
அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில்
திரைக்கதை சீராக இருக்கிறது படம் முழுக்க காமெடியும் இளைஞர்களை குறி வைத்து படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் படத்தில் நடித்தவர்களும் இயக்குனருக்கு
தோளாக நின்று படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்
ஹரி பாஸ்கர்
‘ஜம்ப் கட்ஸ்’ யூடியூப் சேனல் மூலம்
பல இளைஞர்களை கவர்ந்த
பிரபலமான ஹரி பாஸ்கருக்கு
வெகுளித்தனமான காமெடி நடிப்பு நன்றாக கை கொடுக்கிறது அவரது முகபாவமும் ரசிக்க வைக்கிறது காதலியை பிரிந்த போது சோகத்தின் விரக்தியில் அழுத்தம் நிறைந்த நடிப்பிலும் பின்னர் மீண்டும் லாஸ்ட்லியாவை காதலிக்க முயற்சி செய்வதும் என மனுஷன் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் youtube சேனல் மூலம் இளைஞர்களை கவர்ந்த ஹரி பாஸ்கர் வெள்ளித்திரையின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுவார் என்பது உறுதி
அழகான லாஸ்லியா
, பிக் பாஸ் பிரபலமான லாஸ்லியா
அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
அம்சமாக இருக்கிறார் ஹரிபாஸ்கர் செய்யும் லூட்டியை பொறுத்துக் கொள்ளாமல் அடிக்கடி முகம் சுழிப்பதும் காதல் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் லாஸ்லியாவுக்கு இந்த படம் மூலம் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
ஹரி பாஸ்கருக்கும் லாஸ்லியாவுக்கும் ஒரு நல்ல வெற்றிப்
படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் பக்காவான காமெடி கதையை குடும்ப சென்டிமென்ட் காட்சிகளை ஆங்காங்கே சரியாக தூவி அனைவரும் பார்க்கும்படியான ஒரு படமாக கொடுத்து பாராட்டுக்களை அள்ளுகிறார். லாஸ்லியாவின் பெஸ்ட்டியாக மாறும் ஹரி பாஸ்கர் பிக் பாஸ் ரயான் வந்த பின்னர் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் மற்றும் டாக்ஸிக் லவ்வராக மாறுவது என தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். ரசிகர்களை அடிக்கடி ஷாராவின் ஒன்லைனர்கள் சிரிக்க வைத்து போரடிக்காமல் படம் செல்ல அருமையாக உதவுகிறது. லாஸ்லியாவின் அழகான நடிப்பு, இளவரசு உள்ளிட்டோரின் அழுத்தமான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது
தொழில்நுட்ப கலைஞர்கள்
Written & Directed by Arun Ravichandran
Cinematographer – Kulothungavarman. R
Music Director – Osho Venkat
Editor – Rama Subbu. M
Art Director – Dhamu MFA
Stunt Master – Om Siva Prakash
Lyrics – Ridhun Sagar, Ku Karthik, Mc Vicky, Arun Ravichandran.
Singers – osho venkat, Armaan Malik, Mc. Vicky, Amala Chebolu
Choreographer – Pramesh Dev
Costume Designer – Vasuki Bhaskar
Costumer – Cuddalore M Ramesh,
படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருக்கிறது காட்சிகள் ரம்யமாக இருக்கிறது
பாடல்கள். ரசிக்க வைக்கிறது பின்னணி இசை நன்றாக இருக்கிறது
படத்தொகுப்பாளர் பங்கு மகத்தானது எடிட்டிங் டேபிளில் படம் வெற்றியை ஆரம்பித்திருக்கிறது
மற்றும் ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூமர் ,
ஒப்பனையாளர் என அனைவரும் படத்தின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் சதீஷ்
மொத்தத்தில் இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ளது இளைஞர்களின் அமோக ஆதரவு இந்த படத்திற்கு நிச்சயம் கிடைக்கும்
