சிறுவன் ராஜா(ஆரவ்) அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கிறான்.
அவரின் அப்பாவான நாசர் மகனை எப்படியாவது இயல்பு நிலைக்கு கொண்டுவர துடிக்கிறார்
ஆனால் ராஜா எதையோ இழந்தவர் போல் இருக்கிறார்
அந்த ஊரில் அட்டகாசம் செய்யும்ஒரு யானையுடன்
நட்பு ஏற்படுகிறது ராஜாவுக்கு ,அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது அதற்கு பீமா என்று அந்த யானைக்கு பெயர் சூட்டி தன் அம்மாவைப் போல பாவிக்கிறார் ராஜா
ராஜாவுக்கு யானையையும், யானைக்கு ராஜாவையும் பிடித்துப் போக, ராஜாவின் அப்பா யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுக்கிறார். அதற்கான முறையான அனுமதியும் பெறுகிறார்.. ராஜாவும் பீமாவும் உயிருக்கு உயிராக பழகுகிறார்கள். ராஜா வளர்ந்து வாலிபனாகிறான்.
ஒரு கட்டத்தில் யானைகளைக் கொன்று தந்தம் கடத்துபவர்களை காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான்.ராஜா,
அதன் பிறகு மந்திர வாசகம் (கே.எஸ் . ரவிக்குமார்) மகனான யோகி பாபு தியேட்டரில் ஓசி டிக்கெட் கேட்டு வம்பை வளக்கிறார்
இந்த இரண்டு எதிரிகளில் யார் பீமாவை என்ன செய்யப் போகிறார்கள் என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை..
அதேபோல மர்ம நபர்கள் சிலபேர்
யானைக்கு மதம் பிடிக்க மோசமான ஊசியை போடுகிறார்கள்
யானைக்கு, மதம் பிடித்துள்ளது என்றும் அரசு அதிகாரிகளால் பீமாவை புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்துப் போகிறார்கள்.
அங்கே திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் யாரும் எதிர்பாராதது சர்ப்ரைஸ்
மருத்துவத்துக்காக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட யானை பீமா அங்கு இல்லை என்பது தான் சஸ்பென்ஸ்
அதற்கு பிறகு
ராஜா பீமாவை கண்டுபிடித்தாரா?
மதம் பிடித்த யானை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியதா?
பீமாவை கடத்தியது வனத்துறை அதிகாரிகளா? அல்லது தந்தம் கடத்திய சமூக விரோதிகளா?
பத்திரிகையாளரான யாஷிகா ஆரவ்வுக்கு எந்த வகையில் உதவினார்?
ரவிக்குமார் இடம் பிஏவாக இருந்த மாறப்பன் மர்மமான முறையில் இறப்பதற்கு என்ன காரணம்?
இது எல்லாம் இடைவேளைக்கு பிறகு மிகவும் விரிவான திரை கதை யில்அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸ் நிறைந்த படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர்
இயக்குனர்
இயக்குனர் நரேஷ் சம்பத் ஒரு நல்ல அதிரடி ஆக்சன் படத்தை மன நிறைவோடு கொடுத்திருக்கிறார் விலங்குகளிடம் பாசம் காட்டும் நாயகனையும் சமூக விரோதிகளையும் தோல் உரித்து காட்டி ஆங்காங்கே கரம் மசாலாவை தூவி கமர்சியல் படமாக கொடுத்திருக்கிறார் ஓவியாவை ஒரு பாட்டுக்கு இணைத்து கிளுகிளுப்பூட்டி இருக்கிறார்
நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்கும் இயக்குனராக வலம் வருவார் என்பது உண்மை
ஆரவ்
ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் ஆரவ் நன்றாக நடித்து இருக்கிறார் ஆக்சன் காட்சி அவருக்கு மிக பொருந்தி போகிறது காதலியுடன் டூயட் அப்பாவுடன் பாசம் யானையுடன் நெகிழ்ச்சி என ஆரவ்
ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது
ஆஷிமாநர்வால்
டாக்டருக்கு படிக்கும் துளசி என்ற கதாபாத்திரத்தில் வந்து போகிறார் ஆரவ்வோடு டூயட் பாட மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்
ஓவியா
பிக் பாஸில் ஆர்மி எல்லாம் வைத்துக் கொண்டு அலப்பறை செய்த ஓவியா இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் பேசப்பட்டிருக்கும் ஒரு பாடலுக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்
யாஷிகா ஆனந்த்
பொள்ளாட்சியில் இருக்கும் ஒரு ஜர்னலிஸ்டாக வருகிறார் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் சிக்கலில் இருக்கும் ஆரவ்க்கு உதவி செய்கிறார்
நாசர்
நாசர் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது பாசமழையில் உருகுகிறார்
யானை பீமாவுடன் சின்ன குழந்தை போல் ஆட்டம் ஆடுகிறார் கெஞ்சுகிறார்
பீமா காணாமல் போன பிறகு மனமுடைந்து படுக்கையில் விழுந்து கிடக்கிறார் நாசர் இன்னும் கொஞ்சம் உபயோகப்படுத்தி இருக்கலாம்
யோகி பாபு
கே .எஸ் ரவிக்குமாரின் மகனாக அமைச்சர் மகனாக அலப்பறை செய்கிறார் இடைவேளைக்கு பிறகு காணாமல் போய் விடுகிறார் அவர் காமெடி நன்றாகவே ரசிக்கும்படி இருக்கிறது
கே.எஸ்.ரவிகுமார்
அமைச்சர் மந்திரவாசகம் என்ற பெயரில் பதவிக்காக எதையும் செய்ய சரியான வில்லத்தனம் இவருக்கு இடைவேளைக்குப் பிறகு இவரின் கோரமுகம் தாண்டவமாடுகிறது இடைவேளை வரை யாசிகாவை சொள்ளுவிடுவதிலேயே இவர் நேரத்தை செலவிடுகிறார்
சாயாஜி ஷின்டோ
முதலமைச்சராக கம்பீரமாக வந்து கவனத்தை ஈர்க்கிறார்
ஊழல் செய்யும்
கே. எஸ். ரவிக்குமாரை கட்சியை விட்டு நீக்க அவர் எடுக்கும் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது
அருவி மதன்
ஆரவ்க்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வந்து சபாஷ் வாங்குகிறார்
இசை
சைமன் கே .கிங் இவரது இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது கணேசா என்ற பாடலும் ஒப்பனை இல்லாத என்ற பாடல் மஞ்சனத்தி என்ற சோகப் பாடலும் பின்னணி செய்யும் ரசிக்க வைக்கிறது
மதன் கார்த்தி, தமயந்தி, இருவரின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு
சதீஷ்குமாரின் கேமரா பொள்ளாச்சியை அழகாக பசுமையாக காட்டி இருக்கிறது அந்த நீரோடையும் வீடு, மற்றும் தியேட்டர், எல்லா இடங்களிலும் கேமரா பளிச்சென இருக்கிறது
படத்தொகுப்பு
கோபியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தாலும் இடைவேளைக்கு முன்பு சில காட்சிகளை டிரிம் செய்திருக்கலாம் இடைவேளைக்கு பின்பு தான் கதையே ஆரம்பிக்கிறது அது இடைவேளைக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்
ஆர்ட் டைரக்டர்
மோகன் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் தியேட்டர் , வனத்துறை அலுவலகம், கிளைமாக்கில் கே. எஸ் ரவிக்குமார் செய்யும் யாகம் செய்யும் இடமான பாங்காங் சென்று படத்தின் இணைப்புக்கு உதவியிருக்கிறார்
சன்டை பயிற்சியாளர்
ஹரி தினேஷ் சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார் பீமாவை கொல்ல போகும் நேரத்தில் கூட ஆரவ் அதிக அடி வாங்குவதாக காட்டப்படாமல் இன்னும் கொஞ்சம் வெகுண்டு எழுந்து எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது மற்றபடி சண்டை பயிற்சி சூப்பரா இருந்தது
நடனம்
கல்யாண் மாஸ்டர், பிருந்தா மாஸ்டரும், நடன பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் நன்றாக இருக்கிறது
காஸ்டியூம் டிசைனர்
நித்யா வின் காஸ்ட்யூம் டிசைன் நன்றாக இருந்தது அமைச்சராக வரும் கே எஸ் ரவிக்குமாருக்கும் அவரது மகனாக வரும் யோகி பாபு நாயகன் ஆர்வக்கும் காஸ்டிங் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது
காஸ்டியூமர் ராஜா பங்கு சூப்பர்
ஒப்பனை
சசிகுமாரின் ஒப்பனையில் யாசிகா பளிச்சென்று இருக்கிறார் ஓவியா சிக்கென்று இருக்கிறார் மற்றபடி ஒப்பனை உறுத்தவில்லை
மக்கள் தொடர்பாளர்கள்
திரு .சுரேஷ் சந்திரா
அவர்கள்
திரு.அப்துல் நாசர் அவர்கள்
தயாரிப்பாளர்
எஸ்.மோகன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஒரு நல்ல கதையை தேர்வு செய்து அதற்காக பிரமாண்டமான செலவு செய்து எந்த காம்ப்ரமைஸ் ஆகாமல் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்து படத்தை ரிச் ஆக கொடுத்திருக்கிறார்
யானை வைத்து படம் எடுத்த தெய்வச் செயல் ,ஹாத்தி மேரே சாத்தி, நல்ல நேரம், அன்னை ஒரு ஆலயம் ,ராம லக்ஷ்மன் ,போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது
அந்த படங்களைப் போல ராஜ பீமா படமும் வெற்றியடைய வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது படத்தில் உழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,மக்கள் தொடர்பாளர் இயக்குனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
