ரிங் ரிங் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

எல்லோர் வாழ்விலும் ஒரு சீக்ரெட் இருக்கும் நம்ம நேசிக்கறவங்களை சந்தோஷபடுத்த சீக்ரெட்டை மறைச்சா தப்பில்லை
என்பதுதான் படத்தின் ஒன் லைன்
இன்று தகவல் தொடர்பு சாதனங்கள் எந்த அளவுக்கு பெருகியதோ அதே அளவு மன அழுத்தம் ,மனக்குமுறலை வெளிப்படுத்தல் , கள்ளக் காதல், பாலியல் தொடர்பான படங்கள் பார்த்தல் போன்றவை சமுதாயத்தை தவறான பதைக்கு அழைத்துச் செல்வதாகத் தோன்றுகிறது,அதிலும் குறிப்பாக நம் இளைஞர்களை
செல்போன் பார்த்து நிறைய தவறுகள் செய்கிறார்கள் திருமணமான ஆணும் பெண்ணும் கள்ளக்காதலுக்கு துணை போகிறது செல்போன் இதையெல்லாம் வைத்து ஒரு சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர்
கதை களம்

சிவா, அவருக்கு பர்த்டே அவரது மனைவி பூஜாவும் (சாக்ஸி அகர்வால்)
சிவா வும் தன் நண்பர்களை தன்னுடைய பர்த்டேவிற்கு அழைக்கிறார்

புதுச்சேரியில் வழக்கறிஞராக இருக்கும் தியாகு (விவேக் பிரசன்னா)
அவர் மனைவி சைலஜா உடன் கலந்து கொள்கிறார்

அடுத்து கதிர் (டேனியல்)என்கிற பிளேபாய் காதலித்துக் கொண்டே ரஞ்சனி, ஜெனி, என்ற இளம் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் அவர் தன்னுடைய காதலியான ரஞ்சனி பர்த்டே பார்ட்டிக்கு வருகிறார்

அடுத்து சுந்தர் ,(அர்ஜுன்)
இவர் தன் மனைவி உடல்நலம் சரியில்லை என்று தனியாக வருகிறார் அவரும் அந்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்கிறார்
இந்த நான்கு நண்பர்களும் பர்த்டே செலிப்ரேஷன் செய்ய ஒரு கேம் விளையாடுகிறார்கள் அதாவது தங்களிடம் இருக்கும் செல்போனை ஆன் செய்துவிட்டு டேபிளில் வைத்து விட வேண்டும் செல்லில் இருந்து மெசேஜ் வேறு எந்த போன்கள் வந்தாலும் எல்லோரிடமும் காட்ட வேண்டும் என்பது இந்த கேம்
: அவர்கள் நான்கு பேருக்கும் வரும் போன் காலும் மெசேஜும் அந்த பர்த்டே பார்ட்டியில் எந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது? குழப்பத்தை ஏற்படுத்துகிறது? என்று
சொல்கிறது இந்த ரிங் ரிங்

சிவா ,தன் மனைவி பூஜாவுக்கு ஏற்பட்ட குழப்பத்தை தீர்த்து வைத்தாரா?

பூஜா தன் கணவரிடமிருந்து அந்த சீக்ரெட்டை தெரிந்து கொண்டாரா?

கதிர் தன் காதலியுடன் அந்தப் பாட்டில் கலந்து கொண்டவர் இன்னொரு காதலியும் வந்ததால் குழப்பம் நீடித்ததா இல்லையா?

சுந்தர் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பது தெரிந்த பிறகு அவரது மனைவி இந்து எடுக்கும் முடிவு என்ன?

இந்த குழப்பங்களுக்கெல்லாம் அழகாக முடிச்சு போட்டு அற்புதமாக திரைக்கதை அமைத்து கலகலப்பான ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்
வாழ்த்துக்கள் சார்

நடிகர் &நடிகர்கள்
: சிவாவாக வரும் பிரிவின் ராஜ் நடிப்பு நன்றாக இருக்கிறது மனைவிக்காக அவர் செய்யும் அந்த செயல் நெகிழ வைக்கிறது

புதுச்சேரியில் வழக்கறிஞராக இருக்கும் விவேக் பிரசன்னா படத்தின் வில்லனோ என்ற பாணியில் இவரது கதாபாத்திரம் போகிறது முடிவில் மனதை தொடுகிறார்
,
டேனியல் கதிர் என்ற கதாபாத்திரத்தில் பிளேபாயாக வருகிறார் எல்லா பெண்களையும் காதலிக்கும் அவர் குரும்பு ரசிக்க வைக்கிறது

அர்ஜுன் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் தன் நண்பனுக்காக வீண் பலிஏற்று திண்டாடும் காட்சியிலும் மனைவி விட்டுக் கொடுக்காமல் பேசும்போது காட்சியங கண் கலங்க வைத்து விடுகிறார்

மற்றும் படத்தில் சாக்ஸி அகர்வால்,
சியாம் சித்தா,
ஜமுனா ,சஹானா,
என பலரும் தங்கள் சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார் கள்

இசையமைப்பாளர்
இசைபேட்டை வசந்த்
பின்னணி இசையில் குதூகாலத்தையும்
தருகிறார்
அழகான நேரங்கள் என்ற பாடல் மூலம்
ஹரிஹரன் பாடல் ரசிக்க வைக்கிறது

ஒளிப்பதிவு
பிரசாத் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் புதுச்சேரி, சென்னை, எல்லா இடங்களிலும் அழகாக காட்டி பர்த்டே பங்க்ஷன் ஒரே அறையில் 4 ஜோடிகள் ,விவேக் பிரசன்னா வீடு ,சிவா வீடு, என்று படத்திற்கு ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது

படத்தொகுப்பு
இரண்டு மணி நேரம் படம் தொய்வில்லாமல் கலகலப்பாக விறுவிறுப்பாக தொகுத்திருக்கிறார் பட தொகுப்பாளர்

ஆர்ட் டைரக்டர்

தினேஷ் மோகன்
ஆர்ட் டைரக்ட் பணி அற்புதமாக இருக்கிறது வீடு, பர்த்டே பங்க்ஷன், செலிப்ரேஷன், மற்றும் எல்லா இடங்களிலும் இவர் கைவண்ணம் பளிச்சிடுருக்கிறது

போனின்றி அமையாது உலகு’ என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம்.
வெற்றி கரமான படமாக வந்திருக்கிறது

இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘லவ் டுடே’ என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘ரிங் ரிங் ‘.

விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்