விடாமுயற்சி திரை விமர்சனம்

ரேட்டிங் 4-5/5

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி மிக பெரிய வெற்றி படமாக வந்திருக்கிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் அஜித் – த்ரிஷா – அர்ஜுன் காம்போ இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமெங்கும் வெளியாகி உள்ள இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

கதை களம்

அஜீத் (அர்ஜீன்), திரிஷா (கயல்) பார்த்தவுடனே இருவருக்கும் பிடிக்க, 3 வருடம் காதலித்து திருமணம் செய்கின்றனர் அழகான குடும்பம் அளவான காதல் அன்பான ஜோடிகள். இப்படி
வாழ்க்கை அழகாக போகிறது. திரிஷா கர்ப்பம் ஒரு முறை கலைகிறது,

அதற்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் சொல்ல உடைந்து போகிறார் அஜித்

அதன் பிறகு சின்ன சின்ன மனஸ்தாபம் ஏற்படுகிறது அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்ய இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க, அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என ட்ராப் செய்ய வருகிறார்.

இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு விலக மனம் இல்லாதவராக காரில் பயணிக்கிறார்கள்
அஜித்தின் அளவு கடந்த அன்பு திரிஷாவை பார்த்துக்கொண்டே வருகிறார்

வந்த இடத்தில் கார் ப்ரேக் டவுன் ஆக, அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக்கில் ஏற்றி செல்கின்றனர்.

அங்குதான் இயக்குனர் பெரிய டுவிஸ்ட் ஒன்றை வைத்து இருக்கிறார்

ட்ரக்கில் ஏறிய திரிஷா காணாமல் போக, அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார்.

அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் ஒன்றை வைத்து இருக்கிறார் இயக்குனர் ரெஜினாயார்? அர்ஜீன் யார் ? ஆதவ்யார் ? திரிஷா என்னவானார் ?

அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா,? ரெஜினா சொன்னது உண்மையா ?என்பதே மீதிக்கதை.

இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு வித்தியாசமான கதை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்

மனைவியை தேடி திக்கு தெரியாத காட்டுக்குள் அஜித் தனி ஆளாக தவிப்பதும் ,எதிரிகள் கூழ்ச்சிசெய்து அவரை சிக்க வைப்பதும் அந்த பரமபத விளையாட்டில் இருந்து எப்படி தப்பித்தார் அஜித் என்பது திரைக்கதை சுவாரசியமான பகுதி

அஜித் திரிஷாவை அனுப்பி வைக்கும் காட்சியில் அவர் ஏக்கத்தில் பார்க்கும் காட்சி சூப்பர்
திரிஷா வைதேடிச்செல்லும் அஜித்துக்கு ஏற்பட்ட நிலை என்ன? இதிலிருந்து அவர் மீண்டாரா? என்பது படத்தின் திரைக்கதை.

இப்படம் ஹாலிவுட் படம் என்று சொன்னாலும் அழகான லவ் ஃபோர்ஷன்சேர்க்கபட்டுள்ளது
இயக்குனர்

திரைக்கதையை பொருத்தவரையில் இயக்குனர் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்டைலாக காட்சிப்படுத்திய விதமும் ஆக்ஷன் காட்சிகளும் மிரட்டல்.

ஒரு மாஸ் ஹீரோவை எப்படி காட்ட வேண்டுமோ அப்படி காட்டி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டையை ஸ்டைலாக போடச் செய்து ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்
கடைசியில் திரிஷாவும் அஜித்தும் ஐ லவ் யூ என்று சொல்லும் அந்த காட்சி எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் ரசிகர்கள்

இயக்குனர் மகிழ் திருமேனி வெற்றி பட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்

அஜீத் குமார்

அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அஜித்குமார் அந்த கதாபாத்திரத்துக்கு எவ்வளவு சிறப்பு சேர்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்
எமோஷனல் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்

இதில் அஜித்துக்கு எந்த மாஸ் காட்சிகளும் கிடையாது. கதையோடு பயணிக்கும் ஹீரோவாக அவர் பின்னி பெடல் எடுத்துள்ளார்.

இப்படி எல்லாம் ஒரு மாஸ் ஹீரோ நடிப்பதற்கு நிச்சயம் பெரிய மனசு வேண்டும் கதை தான் ஹீரோ என்று நம்பி அஜித் கதைக்குள் பயணம் செய்திருக்கிறார் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை விட்டு அவர் எங்கும் விலகவில்லை ஆக்சன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார

அதிலும் திரிஷா அஜித் இருவரின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறது.

திரிஷா

திரிஷா தான் மொத்த பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறார்.

அழகு பதுமையாக கயல் என்ற வேடத்தில் நம்மை கவர்ந்திருக்கிறார் திரிஷாவை விட இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் நினைத்து பார்க்க முடியவில்லை அவரால்தான் படத்தில் அடுத்தடுத்த திருப்புமுனைகள் வருகிறது.

திரிஷாவின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது

இவர்களுக்கு அடுத்தபடியாக அர்ஜூன் ,ஆரவ், ரெஜினா, ஆகியோரின் கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கிறது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளது அவர்களின் நடிப்பு.

இசை

பின்னணி இசையில் அனிருத் மிரட்டி இருக்கிறார் ஸ்வடிகா பாடலும் ,நம்பிக்கை தான் முயற்சி பாடலும் ,அஜித் ரசிகர்களுக்கான செம விருந்து

ஒளிப்பதிவு

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார் ஹர்பஜைன்டாநாட்டை அற்புதமாக காட்டியிருக்கிறார் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஒளிப்பதிவு உழைத்திருக்கிறது

“படத்தொகுப்பு

என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார் படம் விறுவிறுப்பாக ரெக்கை கட்டி பறப்பதற்கு பட தொகுப்பாளர் முக்கிய காரணம் பாராட்டுக்கள்

ஆர்ட் டைரக்டர்

ஆர்ட் டைரக்டர் மிலன் அற்புதமான அரங்க அமைப்புகள் பாடலுக்கும் சண்டை காட்சிகளுக்கும் அருமையாக வடிவமைத்திருக்கிறார்

“சன்டை பயிற்சியாளர்

சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார் அஜித்துக்கு என்ன தேவைஎதை கொடுத்தால் ரசிகர்கள் திருப்தி அடைவார்கள் என்பதை சமரசம் இல்லாத ஆக்ஷன் காட்சிகளை கொடுத்து அசத்தியிருக்கிறார்

நடனம்

கல்யாண் நடன பயிற்சியாளராக சிறப்பாக அமைத்திருக்கிறார் தாளம் போட வைக்கும் நடனம்

காஸ்டியூம் டிசைனர்

காஸ்ட்யூம் டிசைனராக அணுவர்தன் பணியாற்றி இருக்கிறார் அற்புதமாக இருக்கிறது திரிஷா, ரெஜினா ,அஜித், அர்ஜுன் ,ஆரவ் எல்லோருக்கும் கச்சிதமாக இருக்கிறது

பாடலாசிரியர்கள்

பாடல்களை
விஷ்ணு ,
அறிவு ,மோகன் ராஜா ,பாலாஜி ,
எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் வரிகள் ரசிக்க வைக்கிறது

*திரு.சுரேஷ் சந்திரா
திரு. அப்துல் நாசர் அவர்கள்*

மொத்தத்தில் இரண்டு வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான படமாக வந்திருக்கிறது விடாமுயற்சி அஜித்குமார் அவர்கள் படங்களிலேயே மிகவும் ஹை கிளாஸ் படம் என்றால் இந்த படத்தை சொல்லலாம் எந்த இடத்திலும் மாஸ் என்ற வார்த்தை இல்லாமல் கிளாஸ் ஆக ஸ்கோர் செய்திருக்கிறார் விடாமுயற்சி திருவினையாக்கும்
வெற்றியை தேடி தரும்