தினசரி திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

ஸ்ரீகாந்த் ,சிந்தியா லெளர் டே “. எம்.எஸ். பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, இன்னும் பலர் நடித்துள்ளார்கள்
அனைவரின் நடிப்பு இயல்பாக எதார்த்தமாக இருக்கிறது
இந்த படத்தின் விமர்சனம் இதோ

இளையராஜா பாடல்கள் எழுதி இசைஅமைத்துள்ளார் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக இருக்கிறது

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்
காட்சிகள் கண்களுக்கு குழுமையாக இருக்கிறது அருமையான படப்பிடிப்பு

ஜான் பிரிட்டோ வின்
அரங்க அமைப்புகள் அற்புதமாக இருக்கிறது ஆபீஸ், மற்றும் ஸ்ரீகாந்த் வீடு, ரம்யமாக இருக்கிறது

சாம் சண்டை பயிற்சி அமைத்து உள்ளார்
சாந்தி தமிழரசனை காப்பாற்ற ஸ்ரீகாந்த் போடும் அந்த சண்டை காட்சி விறுவிறுப்பு

தினேஷ் நடன பயிற்சியை அமைத்து உள்ளார்,
அலுவலகத்திலிருந்து சுற்றுலா சென்று குத்தாட்டம் போடும் ஸ்ரீகாந்த் பாடலும் சிந்தியாவும், ஸ்ரீகாந்த் ஆடிப் பாடும் நடனக் காட்சியும் ரசிக்க வைக்கிறது

பாலமுருகன்– சண்முகம் இருவரும் தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்து உள்ளனர்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி , இயக்கி உள்ளார் சங்கர்
சிந்தியா இந்த படத்திற்காக கிரியேட்டிவ் ஹெட்
ஆகவும் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக மெனக்கெட்டு படத்தை ஒரு வெற்றி படமாக கொடுத்திருக்கிறார்
அவரே படத்தின் தயாரிப்பாளரும் நாயகியாக நடித்திருக்கிறார்
வாழ்த்துக்கள் மேம்

கதை களம்

”மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறு விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறார்
இயக்குனர்
சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார் அவருக்கு திருமணம் செய்ய ஒரே ஒரு கண்டிஷன் தனக்கு வரப்போற மனைவி நிறைய சம்பாதிக்க வேண்டும் அதன் மூலம் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அவரது கண்டிஷன்
எட்டு பெண்கள் பார்த்து ரிஜெக்ட் ஆன பிறகு 9 ஆவது பெண்ணாக சிந்தியாவை அவரது அம்மா அக்கா இருவரும் கோல்மால் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள்
ஆனால் நாயகியான
சிந்தியாவுக்கு திருமணமான உடன் வேலைக்கு போகக்கூடாது என்பது கண்டிஷன் இப்படி எதிரும் புதிருமாக கணவன் மனைவி சேர்ந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்?

அதேசமயம் ஸ்ரீகாந்த் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ராதா ரவி நடத்தும் சிட் பண்டில் 96 லட்சம் போட்டு பணத்தை இழக்கிறார்

இதற்காக அதிக வட்டிக்கு கடனை வாங்கி கடன் காரர்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கிறார் அதேசமயம் இவர் செய்யும் அலுவலகத்தில் மேனேஜர் செய்த சூழ்ச்சியால் வேலை போகிறது

ஆனால் வீட்டில் இருக்கும் அப்பா எம்எஸ் பாஸ்கர், அம்மா மீரா கிருஷ்ணன், அக்கா வினோதினி, மனைவி சிந்தியா, எல்லோரும் கவலை இன்றி சந்தோசமாக இருக்கிறார்கள் இதை பார்த்த ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தவுடன் நிம்மதி இழந்து டென்ஷன் ஆகி கத்த ஆரம்பிக்கிறார்

அப்பா அம்மா அக்கா மனைவி எல்லோரும் கதவை சாத்திக்கொண்டு ஸ்ரீகாந்தை பார்த்ததும் ரூமுக்குள் புகுந்து விடுகிறார்கள் இதனால் மன உளைச்சலுக்கான ஸ்ரீகாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்
வேலையும் போய்விட்டது மனைவியும் வேலைக்கு போகமாட்டேன் என்கிறார் குடும்பத்திலும் நிம்மதி இல்லை நண்பர்களிடம் கடன் கேட்ட போனை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்
சிட் பண்டில் போட்ட பணமும் போயாச்சு வட்டிக்கு கண்ணு கொடுத்தவர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள்
இப்படி பலவித குழப்பங்களுக்கு ஆளான ஸ்ரீகாந்த்
கோயிலுக்கு செல்கிறார் அங்கு அவருக்கு கிடைக்கும் ஒரு உபதேசம் அவர் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது
இதுதான் தினசரி படத்தின் கதை

முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் வாழ்க்கையில் இளைஞர்கள் EMI கட்டி அவதிபடும் கதையை தினசரியாக அற்புதமாக கொடுத்திருக்கிறார் சிந்தியா மேம்
இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்திற்காக கார், லோன் வாங்குவது வீடு வாங்குவது, ஆடம்பர செலவு செய்வது இப்படி இ எம் ஐயில் மாட்டிக்கொண்டு விழிப்பது சாதாரணமாகிவிட்டது ஆன்லைனில் பணத்தை தொலைப்பது பிறகு தற்கொலை செய்து கொள்வது மற்றும் பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நடத்தும் சிட் ஃபண்டில் பணத்தை போட்டு விட்டு ஏமாந்து போய் அலைவது இப்படி ஏராளமான தவறுகளை இந்த படம் அப்படி செய்யாதீர்கள் என்று சமூக நோக்கத்தோடு சொல்லி புரிய வைக்கிறது ஒன்று இரண்டு பேராவது திருந்தினால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்

நாயகன் ஸ்ரீகாந்த்

. நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த்
ஆக்ஷன் காட்சிகளிலும் நகைச்சுவை காட்சிகளிலும் நன்றாக நடித்தி ருக்கிறார்
கடன் காரர்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் பொழுதும் குடும்பத்தில் அமைதி இல்லாமல் தவிக்கும் பொழுதும் நன்றாகவே நடித்திருக்கிறார்
நடனம் நன்றாக ஆடுகிறார்
சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார்

நாயகி சிந்தியா

அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடித்து படத்தை தயாரித்து இருக்கிறார்
சிவானி என்ற வேடத்தில் அப்பா அம்மாவை இழந்து கணவனின் அன்பு கிடைக்கும் என்று புகுந்து வீட்டுக்கு வந்தால் கணவனின் டார்ச்சர் நிம்மதி இல்லாமல் வாழும் சந்தியா நடிப்பு நன்றாக இருக்கிறது அமெரிக்க பெண்ணாக இருந்தாலும் இந்தியா பெண்ணாக தழைய தழைய சேலை கட்டி அற்புதமாக நடித்திருக்கிறார்
அமெரிக்காவில் வாழும் இவர் இசைஞானி இளையராஜா இசையில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று இந்தியா வந்து தமிழ் கலாச்சாரத்தோடு ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் மூன்று கோடி ரூபாய் செலவு செய்து ஒரு முத்தாய்ப்பான படத்தை கொடுத்திருக்கிறார்
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது எதார்த்தமாக இருக்கிறது தனக்கு என்ன வருமோ அது கேற்றார் போல் காட்சிகளை குறைத்துக் கொண்டு ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து மீரா கிருஷ்ணன் வினோதினி எம் எஸ் பாஸ்கர் இவர்களுக்கு வாய்ப்பு அதிகம் கொடுத்து நடித்திருக்கிறார்
படம் தாமதமான போது இவரே தலையிட்டு கிரியேட்டிவ் ஹெட் டாக காட்சிகளை மாற்றி அமைத்து இன்றைய ஐடி இளைஞர்கள் படும் துன்பத்தை தத்ரூபமாக அமைத்திருக்கிறார் வருங்காலத்தில் தமிழ் சினிமாவில் போற்றப்படும் இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி தமிழ் சினிமாவுக்கு என தரமான படத்தை கொடுத்த சிந்தியா மேம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ற கதையை தேர்வு செய்து பணமாக்கியதற்கு நன்றி

பிரேம்ஜி,

பிரேம் என்ற கதாபாத்திரத்தில் கலகலப்புக்கு உதவுகிறார் ஸ்ரீகாந்த் நண்பனாக வந்து அவர் இக்கட்டில் மாட்டி தவிக்கும் பொழுது உதவி செய்கிறார்

எம்.எஸ். பாஸ்கர் ,

ஸ்ரீகாந்த் அப்பாவாக பழனியப்பன்
என்ற கதாபாத்திரத்தில் வாழ்க்கையின் தத்துவங்களை எடுத்துக் கூறி மகனை பேராசைப்பட வேண்டாம் இருப்பதை வைத்து வாழு என்று சொல்லும் நல்ல தந்தையாக நடித்திருக்கிறார்
மீரா கிருஷ்ணனுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் நடக்கும் அந்த காதல் கதையை சொல்லும்போது மனதில் நிற்கிறார்

மீரா கிருஷ்ணன்,

வள்ளியம்மை என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான அம்மாவாக நடித்திருக்கிறார் மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று பொய் சொல்லி திருமணம் செய்வதும் மாட்டிக் கொண்டு விழிப்பதும் பின்னர் மகன் நிம்மதி இன்றி தவிக்கும் போது கண்ணீர் விட்டு அழுவதும் என அருமையான நடிப்பு

வினோதினி,

ஸ்ரீகாந்த் அக்காவாக நடித்திருக்கிறார் பண்பட்ட நடிப்பு தம்பிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று மீரா கிருஷ்ணன் சேர்ந்து இருவரும் கோல்மால் செய்யும் காட்சி கலகலப்பு
படம் முழுக்க மீரா கிருஷ்ணனுடன் சேர்ந்து அம்மாவும் மகளும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்

சாம்ஸ்

ஒரே காட்சியில் வந்தாலும் புரோக்கராக வந்து கல்யாண தரகர் வேடத்தை கலகலப்பாக செய்திருக்கிறார்
எப்படியாவது ஸ்ரீ காந்துக்கு கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் கமிஷன் வாங்கி விட வேண்டும் என்று அவர் துடிப்பதும் செம ரகளை இன்னும் சில காட்சிகளில் அவரை பயன்படுத்திருக்கலாமே

குடிகாரனாக வரும் அண்ணாதுரை நடிப்பு நன்றாக இருக்கிறது
ஸ்ரீகாந்துக்கு உதவும் சாந்தினி தமிழரசன் நடிப்பு நன்றாக இருக்கிறது
குழந்தை தியா நடிப்பு அருமை
சிட் பண்ட்நடத்தி ஊரையே ஏமாற்றும் புண்ணியகோடியாக ராதாரவி நடித்திருக்கிறார் அவர் ஏமாறும் மக்களை பார்த்து
ஏன்டா நானா உங்களை எனக்கு சிட்பண்டில்பணம் போட சொன்னேன்
உங்க பேராசை சிட்பண்டில் பணம் போட்டால் பணம்
திரும்ப கிடைக்கும் என்று நினைப்பவன் முட்டாள்
என்று
கேட்பது நிச்சயம் சிந்திக்க வைக்கும்

படம் முழுக்க வசனங்கள் ரசிக்க வைக்கிறது வாழ்க்கை ஒரு கழுதை மாதிரி அது அழுக்கு துணியோ நல்ல துணியோ சுமந்து கொண்டு போவது தான் அதன் வேலை அதில் என்ன இருக்கிறது என்று நினைத்தால் கழுதை வேலைக்காகாது என்பது போன்ற தத்துவங்கள் ரசிக்க வைக்கிறது

அதேபோல எம்.எஸ். பாஸ்கர் சொல்லும் ஆசைதான் மனிதனை ஏழையாக்கும் என்ற வசனம் ரசிக்க வைக்கிறது

இசை ஞானி இளையராஜா

அவரது இசை யில் உனக்குள் ஒரு கனவு பாடல்
தேடி தேடி பாடல்
ரசிக்க வைக்கிறது

அதேபோல ஸ்ரீகாந்த் சஞ்சனா என்ற பெண்ணை பெண் பார்க்க சென்றபோது வருமானம் கம்மியாக இருக்கிறது என்று ரிஜெக்ட் செய்கிறார் ஒரு பார்ட்டியில் சிந்தியாவும் ஸ்ரீகாந்தும் போகும்போது சஞ்சனா அங்கு வந்து சிந்தியாவிடம் என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க ஹோம் ஒர்க்கர் என்று சொல்ல சஞ்சனா ஸ்ரீகாந்தை நக்கல் செய்யும் இடம் சிறப்பு

ஐடி ஊழியர்களை குறி வைத்து அர்ஜுன் பேராசைக்கட்டி சிட் பண்டில் சிக்க வைக்கும் இன்றைய மோசமான இளைஞராக நன்றாக நடித்திருக்கிறார்

படம் முழுக்க வரும் இசை ஞானியின் பழைய பாடல்கள் ரசிக்க வைக்கிறது இசைஞானி தான் இளையராஜா இசை என்பதால் பழைய பாடல்கள் நன்றாக காட்சிக்கு பொருந்தி போகிறது

மொத்தத்தில் இன்றைய தினசரி வாழ்க்கையில் மனிதர்கள் பணத்துக்காக அதன் பின்னால் ஓடுவதும் குடும்பத்தில் உள்ள நிம்மதியை தொலைத்து விட்டு பின்னர் வருத்தப்படுவதும் சகஜமாகிவிட்டது அப்படிப்பட்ட ஒரு உணர்வு பூர்வமான கதையை கையில் எடுத்துக் கொண்டு அதற்காக சில கோடிகள் செலவு செய்து தரமான படைப்பை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க வாழ் கதாநாயகி சிந்தியா அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் அந்த உழைப்பு வீண் போகாது இது ஒரு வெற்றி படமாக மாறும் என்பது நிச்சயம்

மக்கள் தொடர்பாளர் குமரேசன் அவர்கள் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்