தமிழ் சினிமாவில் ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். இவர் தற்போது ‘பேபி & பேபி’ படத்தில் நடித்து ள்ளார்
இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில், குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான பேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதாப்.
கதை களம்
.பொள்ளாச்சியில் ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ், இவரது மகன் ஜெய் இவர் காதலை சத்யராஜ் ஏற்க மாட்டார் என்பதால் நண்பன் வழிகாட்டுதல் படி காதலியுடன் உடன் வெளிநாடு போய் விடுகிறார் இரண்டு வருடங்களுக்கு அடுத்து ஜெய்க்கு ஆண் குழந்தை பிறக்கிறது இப்போது சத்யராஜ் தன் மகள் குழந்தையை வாரிசாக அறிவிக்கிறார் ஆனால் அது பெண் குழந்தையாக பிறந்ததால் மனம் வாடி போகிறார் இப்பொழுது ஜெயிடம் இருந்து தனக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று போன் வருகிறது உடனே சத்யராஜ் துள்ளி குதித்து ஜெய்யை பொள்ளாச்சிக்கு வர வைக்கிறார் .
அதேபோல யோகி பாபு தன் மனைவியுடன் துபாயில் இருந்து வரும் பொழுது பெண் குழந்தையோடு வருகிறார் யோகி பாபுவின் அப்பா இளவரசு பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறார் யோகி பாபு க்கு பெண் குழந்தை பிறந்தது என்று தெரிந்தவுடன் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீர்கிறது அதிர்ஷ்டக்கார பெண் குழந்தை பிறந்து விட்டது என்று இளவரசு மகிழ்ந்து யோகி பாபு வின் குழந்தைக்காக தடபுடலாக விழா ஏற்பாடு செய்கிறார்
ஏர்போர்ட்டில் தவறுதலாக குழந்தை மாற்றப்பட்டு விடுகிறது யோகி பாபுவுக்கு, ஆண் குழந்தையும் ஜெயிக்கு, பெண் குழந்தையும் இப்படி மாறி போக தங்கள் ஊருக்கு வருகிறார்கள்
சத்யராஜ் விழாக்கோலம் பூண்டு தன் பேரனை வரவேற்கிறார் அதேபோல இளவரசு பொங்கல் வைத்து கொண்டாடி தன் அதிர்ஷ்டக்கார பெண் குழந்தையை வரவேற்கிறார்
இதைக் கண்ட ஜெய்யோகி பாபு குழந்தை மாறிவிட்டது என்று சொன்னால் வருத்தப்படுவார்கள் பெற்றவர்கள் என்று விரைவில் குழந்தை மாற்றுவதற்கு துடிக்கிறார்கள்
இதற்கிடையே ஸ்ரீமனும், ஆனந்தராஜ்ம் குழந்தையால் இந்த சொத்துக்களை அடைய முடிய வில்லை என்று ஜெய் குழந்தையை கடத்தி கொண்டு போய் விடுகிறார்கள்
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை
மீண்டும் கீர்த்தனா
நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாகவும் நடித்து, மீண்டும் திரையில் களமிறங்கி உள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு இணைந்து
கலகலப்பும் காமெடியும் கொடுத்து படத்தை ரசிக்க வைத் திருக்கிறார்கள்
மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடித்திருக்கிறார்
இதன படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள து சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும்
படமாக்கி இருக்கிறார்கள் பார்ப்பதற்கு கண்களுக்கு அவ்வளவு குளிர்ச்சியாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது
குழந்தைகள் மீண்டும் அவரவர் பெற்றோருடன் போய் சேர்ந்ததா ?
சத்யராஜ்க்கும இளவரசு க்கும் உண்மை தெரிந்ததா ?
நிழல்கள் ரவியின் மச்சான் ஆனந்தராஜ் சொத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை கடத்த அதை மீட்டாரா ஜெய்?
ஸ்ரீமன் ஜெய் குழந்தைக்கு என்ன ஆபத்தை விளைவித்தார்?
இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படம்
சத்யராஜ்
சத்யராஜ் நடிப்பு நன்றாக இருக்கிறது மகன் ஜெய் ,ஆண் வாரிசோடு வந்ததால் சந்தோஷப்படும் சத்யராஜ் அதே சமயம் பெண் குழந்தைகளையும் வெறுக்கவும் செய்கிறார் ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணரும் ஒரு நல்ல கதாபாத்திரம் அவருக்கு வெளுத்து வாங்கி இருக்கிறார் நடிப்பில்
சத்யராஜ் மகள் மல்லிகா அவரது கணவர் ஸ்ரீமன்(மாணிக்கம்)
குடிகாரனாக ராமர்(குமார்)
கிங்ஸ்லி (குழந்தை வேலு) இவர்கள் காமெடி கலக்கல் காமெடி ரசிக்க வைக்கிறது
நிழல்கள் ரவி (தயாளன்)
இவரது மகள் அஞ்சலியும், ஜெய் மைத்துனர் சஞ்சய்
இருவரும் இளமை காதலர்களாக வருகிறார்கள் இந்த இருவரும் தான் கதையை மைய புள்ளியாக எடுத்து செல்கிறார்கள்
இமான்
இமான் இசையில் தென் பாண்டி முத்து போல பாடலும், என்ன தவம் செய்தேன் பாடலும் அருமை ரசிக்க வைக்கிறது
ஜெய்
:ஜெய், நன்றாக த நடனம் ஆடுகிறார் சண்டை பயிற்சியில் வெளுத்து வாங்குகிறார் அப்பாவிடம் பயந்த மகனாக அருமையாக நடித்திருக்கிறார்
யோகி பாபு
இன்னொரு கதாநாயகனாக நடித்திருக்கிறார் இருக்கிறார் யோகி பாபு
துபாயில் இருந்து பொள்ளாச்சி வரும் குணாவாக கலகலப்புக்கு உதவுகிறார் பிற பெண்களை சைட் அடித்து விட்டு மனைவியிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் கணவனாக அருமையாக நடித்தி ருக்கிறார்
சாஇ தன்யா, பிரக்யா நக்ரா,
இருவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது ரசிக்க வைக்கிறது
இளவரசு,
கிராமத்து மனிதராக எல்லா நேரத்திலும் நல்ல நேரம் பார்த்து சகுனம் பார்ப்பதில் பெண் குழந்தை பிறந்தால் தன் வீட்டில் எல்லா பிரச்சனையும் தீரும் என்று நம்பும் மூடத்தனமான யோகி பாபுவின் அப்பாவாக கலகலப்பை ஏற்படுத்துகிறார்
ஸ்ரீமன்,
சத்யராஜின் மருமகனாக சொத்தலாம் தனக்கு தான் கிடைக்கும் என்று தப்பான ஆசையோடு இருப்பவருக்கு ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று தெரிந்து அந்த குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சகுனியாக கலகலப்பாக நடித்தி ருக்கிறார்
ஆனந்த்ராஜ்,
நிழல்கள் ரவியின் சொத்துக்குஆசைபட்டு குழந்தையை கடத்தி மொட்டை ராஜேந்திரன் உடன்ஏக ரகளை செய்கிறார்.
கலகலப்பு
ரெடின் கிங்ஸ்லி,
காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க வரும் இன்ஸ்பெக்டர் குழந்தை வேலுவாக வந்து வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்
நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை
இவர்களும் தங்கள் பங்குக்கு கலகலப்பு ஏற்படுத்தி படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள்
ஒளிப்பதிவு பி .டி சாரதி அற்புதமான படபிடிப்பு
பொள்ளாச்சியில் பாலக்காட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் சென்னையிலும் கேமரா அழகை கொண்டு வந்திருக்கிறது ஜெய் நன்றாக இருக்கிறார் எல்லோரையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது கேமரா
ஆனந்தன் லிங்க குமார் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
படம் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறைய வில்லை படத்தொகுப்பாளர் கச்சிதமாக செதுக்கியிருக்கிறார்
விஜய் ஐயப்பன் அமைத்த அரங்குகள் அமைப்பு நன்றாக இருக்கிறது
சத்யராஜ் வீடு, இளவரசு வீடு, ஆரம்பகால பாடல் காட்சி தங்கக் கட்டிலில் குழந்தை போடும்போது அரங்க அமைப்புகள் என பளிச் என்று இருக்கிறது அரங்கமைப்பு
,
ஓம் பிரகாஷ் சன்டை பயிற்சியாளராக பணி புரிந்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் செம விறுவிறுப்பான ஒரு சன்டை ரசிகர்களுக்கு விருந்து
நடனம்:நோபிள்பவுல், விஜய் ஆனந்த்
நடனம் ரசிக்க வைக்கிறது
மக்கள் தொடர்பாளர் சதீஷ் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்
என படத்தில் பங்கு பெற்ற அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் பேபி & பேபி ”
முழு நீள காமெடி படம் ரசிக்கலாம்
2025 பட வரிசையில் பிளாக் பூஸ்டர் படமாக வந்திருக்கிறது பேபி & பேபி
