வால் வாச்சர் பிலிம்ஸ் தயாரிப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில், பிரம்மா மற்றும் சர்ஜுன் K M இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில், முதல் சீசனில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்
அவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஸ்ரீஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
அனைவர் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
‘சுழல்- தி வோர்டெக்ஸ்’
வெப் தொடர் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில்
மிகவும் விறுவிறுப்பாக இன்வேஸ்டிகேஷன் பாணியில் மிகச் சிறப்பாக வந்துள்ளது
அமேசான் பிரைமில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான சுழல் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகமாக சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடர் வந்துள்ளது.

இதன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவை மையமாக வைத்து, அதில் சமூகத்துக்கு மிக அவசியமான ஒரு ஆழமான கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள தொடர் சுழல்.2 இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் பாணியில் ஒடிடியில் வெளியாகியுள்ள இந்த தொடர்
முந்தைய சுழல் போலவே இதுவும் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்
ஆரம்பக் காட்சியில்
நாயகன் கதிர், செல்லப்பவை தேடி அவர் காட்டேஜுக்கு வருகிறார் அங்கே
லால் இறந்து கிடக்கிறார் (செல்லப்பா)
பூட்டிய வீடு அதில் தன்னைத்தானே நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டுகளால்
துலைத்து ரத்தம் தெறித்து
பிணமாக சோபாவில் கிடக்கிறார் லால்
கதிர் உடனே அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் பருத்தி சரவணனுக்கு
போன் செய்து வரவழைக்கிறார் அங்கு டிஜிபி தர்மா வருகிறார் அவர் வந்து நாயகன் சக்கரவர்த்தி எனும் சர்க்கரை இடம் இந்த இந்த இன்வெஸ்டிகேஷனில்
நீயும் இடம் பெற வேண்டும் இருவரும் சேர்ந்து கொலையாளி யார் என்று விரைவில் கண்டுபிடிங்கள் என்று உத்தரவு போடுகிறார்
கூடவே ஒன்பது நாட்கள் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவும் ஒரு புறம் சிறப்பாக நடைபெறுகிறது.
செல்லப்பா கொலை செய்யப்பட்டது எப்படி என்று பருத்திவீரன் சரவணன் கதையின் நாயகன் கதிர் (சக்கரவர்த்தி)
இருவரும் டிஜிபி உத்தரவு (தர்மா)
படி கொலையாளிகளை தேடுகிறார்கள்
தேடத் தேட மர்மம் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே இருக்கிறது
கதிர் மீண்டும் அந்த காட்டேஜ் க்குள் வந்து ஒவ்வொரு அறையாக செக் பண்ணும் பொழுது ஒரு அலமாரிக்குள் கௌரி கிஷன் அமர்ந்து இருக்கிறார் கொலை செய்யப்பட்ட வீட்டில் அந்த அலமாரிக்குள் அவர் எப்படி அமர்ந்திருக்க முடியும் மீண்டும் கதிருக்கும், சரவணனுக்கும், குழப்பம் அதிகமாகின்றது .

இதை அடுத்து
பலர் போலீஸ் வலைத்துக்குள் வருகிறார்கள் அதில் பள்ளி தாளாளர்
சாந்தினி தமிழரசன் முக்கிய பட்டியலில் இடம் பெறுகிறார்
இதை அடுத்து லால் கொலை வழக்கு நம்ப முடியாத தளத்துக்கு செல்கிறது
சிறையில் தனி ராஜாங்கம் நடத்தி வரும் முன்னாள் எம்எல்ஏவின் மனைவி சரோஜா, அவர் பெண் கைதிகளுக்கு பல நலத்தட்டு உதவிகளும் அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவரை வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார் .
முதல் எபிசோடில் குற்றம் செய்து தன் சித்தப்பாவையே கொலை செய்துவிட்டு சிறைக்குச் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் (நந்தினி) கதாபாத்திரத்தில் தொடர் முழுக்க ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியில் சிறைக்குள்ளே வாழ்ந்து வருகிறார் அவருக்கு விமலா என்று திருநங்கை தோழியாக வருகிறார்
இதை அடுத்து லால் கொலை வழக்கில் முக்கிய திருப்புமுனையாக
எட்டு கன்னிமார்களான இளம் தளிர்கள் நாங்கள்தான் செல்லப்பாவை கொலை செய்தோம் என்று போலீசார் முன்னிலையில் சரண்டர் ஆகிறார்கள்
இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா ?
அல்லது பள்ளி தாளாளர்
சாந்தினி தமிழரசனா?
மற்றும் அந்த ஊரில் இருக்கும் பெரும்புள்ளிகளா?
லாலுக்கு வேண்டப்படாதவர்களா ?
என்ற கோணத்தில் தொடர் செல்கிறது ஒவ்வொரு எபிசோடில் ஒவ்வொரு ஆச்சரியங்கள் காத்திருக்கிறது உங்களை பரவசப்படுத்தும் உங்கள் விழிகளை விரியப்படுத்தும் தொடரில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் எபிசோடு பகுதிகள்
தமிழில் வெளியான தொடர்களிலேயே அதிக அளவு மொழிகளில் டப் செய்யப்பட்ட தொடராக வெளிவந்துள்ள இந்த தொடரில் எபிசோடுகளை பிரம்மாவும், அடுத்த நான்கு எபிசோடுகளை சர்ஜன் இயக்கியுள்ளனர். புஷ்கர் காயத்ரியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இத்தொடர் எபிசோடுக்கு எபிசோடு பல்வேறு திருப்புமுனைகள் கொண்டு ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்து ரசிக்க வைத்துள்ளது. தொடர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு எபிசோடும் கடக்கும் பொழுது இந்த குற்றத்தை அவர் செய்திருப்பாரோ, இல்லை இவர் செய்திருப்பாரோ, அல்லது அவர்கள் செய்திருப்பார்களோ என்று யோசிக்க வைத்து கடைசியில் யாரும் யூகிக்க முடியாத வகையில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்டை வைத்து ரசிகர்களுக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரெய்டில் பயணித்தது போன்ற ஒரு உணர்வை தந்துள்ளது இத்தொடர். சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப் பெரிய குற்ற செயலை கதை கருவாக எடுத்துக் கொண்டு அதை மயான கொள்ளை திருவிழாவோடு பின்னிப்பிணைந்து, அதன் வழியே கதையாடல்களை உருவாக்கி திரைக்கதை அமைத்து, கடைசிவரை யாரும் கண்டுபிடிக்காத வகையில் ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்த்து ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டு கதையோடு ஒன்ற வைத்துள்ளனர் சுழல் தொடரின் கிரியேட்டர்களான புஷ்கர் காயத்ரி. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்த தொடரில் முடிந்த அளவு எந்த ஒரு இடத்திலும் அயர்ச்சி ஏற்படாதவாறு திரைக்கதையை நேர்த்தியாகவும், சுவாரசியமாகவும் அமைத்து மீண்டும் ஒரு வெற்றி படைப்பை கொடுத்துள்ளனர் புஷ்கர் காயத்ரி.
இயக்குனர்கள் இருவரும் அசாத்திய இயக்குனர்களாக அறியப்படுகிறார்கள் ஒரு மர்ம தொடர் எந்தவித தெய்வம் ஏற்படுத்தாமல் இருவருப்பை ஏற்படுத்தி இயக்கிய இருவருக்கும் கை கொடுத்து பாராட்டலாம்
கணவனை இழந்து வாடும் மாலதி நெகிழ்வான நடிப்பும்,
பருத்தி வீரன்
கம் பீரமான போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பும் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். வழக்கறிஞராக செல்லப்பாவாக நடித்திருக்கும் லால் தனக்கே உரித்தான நக்கல் நையாண்டி வசனங்களை தவிர்த்து விட்டு தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் நிறைவாக செய்து மகள்களை இழந்து வாடும் தந்தையின் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
திரு நங்கை ஜீவா நடிப்பு சூப்பர்
அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும், படத்தின் நாயகனாகவும் நடித்துள்ள கதிர் மிகவும் இயல்பான போலீசாக அலட்டல் இல்லாத நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்துள்ளார். எந்த ஒரு காட்சியிலும் தான் நடிப்பதே வெளியே தெரியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இதே நடிப்பை அவர் தொடரும் பட்சத்தில் சினிமாவில் அவருக்கான வாய்ப்பு கதவு பிரகாசமாக திறந்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஒரு குற்றவாளியாக குற்ற உணர்வு உள்ள பெண்ணாக தொடர்பு முழுக்க நடித்து உள்ளார்
மஞ்சிமா மோகன்
நாகம்மாவாக
நடித்திருக்கும் நடித்திருக்கிறார் யதார்த்தமான நடிப்பை மிக இயல்பாக வெளிபடுத்தி கவனம் பெற்று உள்ளார். இவருக்கும் இவரது கணவர் கயல் சந்திரனுக்கு மான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி வெகுவாக கவர்ந்துள்ளது. இவருடன் இணைந்து நடித்துள்ள
அந்த மகள் 8 பேரும் நன்றாக டஃப் கொடுத்து நடித்துள்ளார். இவர்கள் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளது. இவர்களைப் போலவே படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். அதேபோல் திரைக்கதையிலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சாந்தினி தமிழரசன் பிரேமதா கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் வீரா, சந்தானபாரதி ஆகியோர் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். எப்போதும் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திலும் சிறந்த நடிப்பை வழங்கி யுள்ளார். உணர்ச்சி பொங்கும் படியான காட்சிகளில் கண்களை பெரிதாக திறந்து அதிகமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் கடலும் மலை சம்பந்தப்பட்ட காட்சிகளும், மயான கொள்ளை திருவிழா சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக அமைத்து காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார் அதேபோல் சாம் சி எஸ் -ன் பின்னணி இசை காட்சிகளுக்கு காட்சி திகில் கூட்டி ரசிகர்களை இசையால் கட்டிப் போட்டுள்ளது. இவரது பின்னணி இசை இன்னொரு நாயகனாக மாறியுள்ளது.
கலை இயக்கமும் மிக மிக சிறப்பாக அமைந்து காட்சிகளை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஒவ்வொரு எபிசோடுகளுக்கிடையே வரும் ட்விஸ்டுகள் ரசிக்க வைத்தாலும் சில காட்சிகள் ரசிகர்களுக்கு புரியவைப்பதற்காக மிகவும் நீண்டு கொண்டு போய் முடியும்படி அமைந்துள்ளது படத்தின் மேக்கிங்கும், திரைக்கதையும் அதில் சொல்லப்பட்ட மெசேஜும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளதால் இத்தொடர் தவிர்க்க முடியாத ஒரு தரமான தொடராக மாறி உள்ளது.சுழல் 2 தரம்!
ஆபிரகாம் ஜோசப்
இவரின் அசத்தலான ஒளிப்பதிவு
ஒன்பது நாள் திருவிழாவில் மிகவும் சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள் சார்
ரிச்சர்டு கெவினின்
படத்தொகுப்பு
விறுவிறுப்பாக கிராம, த்ரில்லர் தொடருக்கு மிகவும் பக்கபலமாக உழைத்திருக்கிறார்
Executive producer – Gowtham Selvaraj
Production designer – Arun Venjaramoodu
Costume designer – Subhashree Karthik Vijay
Stunt director – Dhilip Subbarayan & Dinesh Subbarayan
Choreographer : Srikrish
VFX supervisor – O K Vijay
Sound Designer – Prabakaran & Dinesh Kumar
DI Colourist – Sivakumar
Mix Engineer – Anand Ramachandran
Associates: Anand Murali ,Kanish Prabhu C ,Arun Amarenthiran , Vinod C
Associate producers – S.Guhapriya, S. Nandakumar
Production Manager – Chakravarthy Narasimhan
என இந்த வெப் தொடருக்காக
உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
மக்களிடம் இந்த தொடரை கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
இன்று நாட்டில் நடக்கும் அநியாயங்களை, தோளுர்த்தி காட்டி இருக்கிறது இந்த சுழல் 2
முந்தைய தொடரான சுழல் வெப் தொடரைப் போலவே
இந்தத் தொடரும் மாபெரும் வெற்றி அடையும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்
