கூரன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’.
இப்படத்தில் விலங்குகளை பற்றி அவர்களுக்கும் இந்த உலகில் உயிர் வாழ உரிமை இருக்கிறது
என்பதை பற்றியும் சொல்கிறது கதை

தன் குழந்தை ஒரு காரில் அடிபட்டு இறந்து போக அதற்காக
நீதிமன்றம் ஏரி நியாயம் கேட்கும் ஜான்சியின் (நாய்)கதை தான் கூரன்

இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா
கவிதா பாரதி சரவணன் சுப்பையா
மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.

மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொடைக்கானல் அழகை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்

சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

கதை களம்

: நீதிபதியான
Y G மகேந்திரன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுப்பதாக கதை தொடங்குகிறது

தான் சந்தித்த வழக்குகளில் வித்தியாசமான ஒரு வழக்கை எடுத்து முன் வைக்கிறார்

ஜான்சி என்ற ஒரு நாய் தன் குட்டி நாய் காரில் அடிபட்டு இறந்து போக போலீஸ் ஸ்டேஷன் போகிறது அங்கு அருவி மதன் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் இந்த நாயை விரட்டி விடுகிறார்

அதற்குப் பிறகு பத்து வருடங்களாக எந்த வழக்கையும் எடுக்காத வழக்கறிஞர் தர்மராஜன் ஒரு நியாயமான வழக்கறிஞர் என்று நாயின் காது பட பேசுகிறார்கள்
ஜான்சி அதைக் கேட்டு விட்டு வேறொரு பிரச்சனைக்காக போலீஸ் ஸ்டேஷன் வரும் தர்மராஜ் எனும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர் பின்னாலேயே அவர் வீட்டுக்கு சென்று தன் வழக்கை எடுத்து சொல்லி போராடுகிறது

மனிதநேயத்தோடு ஜான்சி கொடுக்கும் வழக்கை ஏற்று நீதிமன்றத்தில் வாதாட புறப்படுகிறார்

கவிதா பாரதியின் மகன் அவர்தான் கார் அடித்துக் கொன்றவர் அவரது வழக்கறிஞர் பாலாஜி சக்திவேல்
இவர்களுக்கு எதிராக தர்மராஜ் எடுத்து வைக்கும் தர்மத்திற்கான நீதி ஏற்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா ?
முடிவில் ஜான்சிக்கு வெற்றி கிடைத்ததா? இந்த ஜான்சி யார் ?
ஆதாரம் கேட்கும் நீதிபதியிடம் ஜான்சி எந்த மாதிரியான ஆதாரத்தை எடுத்து வைத்தது !
தர்மராஜ் இந்த வழக்கில் எப்படி நீதியை நிலைநாட்டுகிறார்! அவருக்கு துணையாக சத்தியன் பங்கு என்ன ?இந்திரஜா பங்கு என்ன? என்பதை அற்புதமாக சொல்லி இருக்கும் படம் கூரன்.

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்

சட்டம் மற்றும் நீதித்துறை கதையை இயக்குவது தனித்திறன் பெற்ற இயக்குநர் எனும் பெருமைக்கு உரியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதிலொரு ஸ்பெஷல்… அந்த சட்டநுணுக்கங்கள் கொண்ட படத்தில், பாசம் இருக்கும். காமெடி இருக்கும். க்ரைம் கலந்திருப்பார். காதலும் இருக்கும். அரசியல் முகமூடியும் கிழிக்கப்படும். சமூகப் பிரச்சினைகளும் அலசப்படும். அத்தனையையும் ஒவ்வொரு படத்துக்குள்ளும் புகுத்தி, நுழைத்து, கலந்து, ஒரு ஃப்ரூட்மிக்ஸர் ஜூஸ் போட்டுக் கொடுப்பதில் வல்லவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவர் எடுத்த பல படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் இருந்து பல மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. இவருக்கென ஒரு ஸ்டைல், இவருக்கென ஒரு பாணி, இவர் படத்துக்கென சில இயல்புகள் என வைத்துக்கொண்டு ஜித்து வேலை காட்டிய மிகச்சிறந்த கதாசிரியர், அற்புதமான ரைட்டர், தெளிவுத் திரைக்கதைக்கானவர், அட்டகாசமாய் இயக்கக்கூடியவர் எனப் பல பெருமைகள் கொண்டவர்

1981ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை.
அது சொல்லப்பட்ட விதத்தில்தான் எல்லா சென்டர்களிலும் வெற்றி பெற்றது, !
அது போல கூரன்படத்திலும்
பெரிய , சட்டப் பாயிண்டுகளை
யெல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு வாதப்பிரதிவாதங்கள் செய்வது போல, இந்தக் கதையை வைத்துக்கொண்டு, அழகாய் ரூட் போட்டு, திரைக்கதையுமாக்கி படமெடுத்ததுதான் எஸ்.ஏ.சி-யின் அசகாயசூரத்தனம்!

போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் நாய் . விரட்டியடிக்க
தர்மராஜ் சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து தர்மம் தழைக்க போராட்டம் நடத்தி ஜெயிக்கிறார்

படத்தின் கதை திரைக்கதை. எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில், அவர் பெயர் தர்மராஜ் அதுமட்டுமா?
தர்மத்துக்காக போராடுபவர்

தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார் மனிதநேயம் உள்ள ஒரு வழக்கறிஞராக விலங்குகளிடம் பாசம் காட்டும் இவரின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைக்கிறது நாயோடு ஒரே தட்டில் சாப்பிடுவது நாய்யோடு உறங்குவது நாயின் சோகம் கண்டு கலங்குவது நீதிமன்றத்தில் ஜான்சிக்காக வாதாடுவது இப்படி பல காட்சிகளில் மனதில் இடம் பிடிக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் ஜான்சி இறந்துவிட்டது என்று அவர் சாய்ந்து அப்படியே காரின் அடியில் உட்காரும்போது அடடா என்ன ஒரு அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள் சார்
திரைக்கதையும் இவர்தான் எழுதி இருக்கிறார் தெளிவான திரைக்கதை எந்த இடத்திலும் குழப்பம் இல்லை சீராக செல்கிறது கதை

சேகர் ராஜா என்ற வில்லன் கதாபாத் திரத்தில் கவிதா பாரதி

வழக்கறிஞர்
நந்தகோபால் என்ற கதாபாத்த்தில்
பாலாஜி சக்திவேல்

ஆண்டனி என்ற கதை பாத்திரத்தில் மரியம் ஜார்ஜ்

குண்டம்மா என்ற கதாபாத்திரத்தில் இந்திரஜா

தோமஸ் என்ற கதாபாத்திரத்தில் சரவணா சுப்பையா

பைரவா என்ற கதாபாத்திரத்தில் ஜான்சி

நீதிபதியாக ஒய். ஜி ஜி மகேந்திரன்

இப்படி எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், ஒப்பனையாளர், அரங்கம் அமைத்தவர்கள், கலர் கரெக்ஷன் மற்றும் சிஜி, என அனைத்து துறைகளிலும் தங்கள் பங்குக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள்
நாயை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று இருக்கிறது அந்த வெற்றி பட்டியலில் கூரன் படமும் சேரும்

படத்தின் இடைவேளை டிவிஸ்ட்நன்றாக இருக்கிறது

கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்

ஷார்ட் பிலிம் எடுப்பவர்கள் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வருவது கதை ஆசிரியரின் புத்திசாலித்தனம்

நம்ப முடியாத ஒரு கதையை நம்பகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவருக்கு நமது வாழ்த்துக்கள்