தஞ்சாவூர் அருகே வல்லம் பக்கத்தில் இருக்கும் குறுவாடிபட்டி என்ற கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவம் எமகாதகி.
படத்தின் நாயகி லீலா (ரூபா கொடுவாயூர்) இவர் ஒரு ஆஸ்துமா ஃபேஷன்ட் இவரது அம்மா கீதா கைலாசம் அப்பா செல்வராஜ் வாக (ராஜ்ராஜப்பன் ) அண்ணன் (முத்துவாக )சுபாஷ்
லீலாவின் காதலனாக (அன்பு) நன்றாக போகும் இந்த கதை யில் லீலா திடிரென்று
படம் ஆரம்பித்து பத்தாவது காட்சியில் அப்பா திட்ட அவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து போகிறார் (அடப்பாவமே என்று மனம் பதபதைக்கிறது)
இரண்டு மணி நேர படத்தில் பத்தாவது காட்சியிலேயே கதாநாயகி இறந்து விட்டாரே !
இனி எப்படி கதை போகும் என்று வியப்புடன் பார்த்தால் அதற்குப் பின்னால் பரபரப்பான பல சம்பவங்கள் நிறைய இருக்கிறது
நான் பிணம் ஆனால் என்ன கதையின் நாயகி நான்தான் என்று நம்ம வீட்டு தெய்வம் என்ற பழைய படத்தில் கே ஆர் விஜயா மிரட்டுவதைப் போல லீலா இப்படத்தில் செமையா மிரட்டி இருக்கிறார்
இறந்துவிட்ட கதாநாயகியின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல எல்லோரும் ரெடியாக
பிணம் வீட்டை விட்டு வெளியே செல்ல மறுக்கிறது தூக்க வருபவர்களை கீழே தள்ளி காயப்படுத்தி பிடிவாதம் பிடிக்கிறது
அந்த வீட்டில் ஒரு ரூம் மட்டும் பூட்டி கிடக்கிறது அதில் என்ன சஸ்பென்ஸ்? இறந்து போன லீலாஏதோ சொல்ல நினைக்கிறார் ?அது என்ன ?
லீலாவுக்கு தூக்கு மாட்டிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சினையை கொடுத்தது யார்?
காதலன் அன்பு வா?
தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து அடி வாங்கி வைத்த ரத்தினமா?
மூன்று வருடமாக ஒரு தலை காதலனாக தன்னையே சுற்றி சுற்றி வந்த லோகேஷா?
அல்லது லீலா வீட்டில் பூட்டி கிடக்கும் ஒரு அறையில் இருக்கும் இந்த அமானுஷ்ய சத்தியா?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் விடை தேடி லீலா பிணம் வெளியே போக மறுக்கிறது
பிணத்தை வெளியே எடுக்க டாக்டர் வருகிறார்
அடுத்து சாமியார் வருகிறார்
அடுத்து வெட்டியான் வருகிறார்
அந்த ஊரைச் சார்ந்த இளைஞர்கள் வருகிறார்கள்
யாராலும் லீலா பிணத்தை எடுக்க முடியவில்லை
அதன் பிறகு என்ன நடந்தது ?
இதுதான் ஏமகாதகியின் கதை &திரைக்கதை
இயற்கைக்கு அப்பாற்பட்டு இறப்பு வீட்டில் நடக்கும் கதையையும், அமானுஷ்யமான விஷயத்தையும் சொல்கிறது ‘எமகாதகி’
‘
நடிகர் & நடிகைகள்
தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
இவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் புற்று நோய்க்கு மருத்துவம் பயின்றவர் என்பது இவரது ஸ்பெஷல்
:உமா மஹேஷ்வர உக்ரா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து
தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் இவர் இறந்த பிறகு பிணமாக இருக்கும் பொழுது கூட முகம் சாந்தமாக ரசிக்கும் படி இருக்கிறது 18 நாட்கள் பிணமாக நடித்திருக்கிறார் உண்ண உணவின்றி வெறும் தண்ணீரை குடித்துக் கொண்டு
நடித்திருக்கிறார்
அம்மாவுக்கு பாசம் உள்ள மகளாக, அப்பாவை மதிக்கும் ஒரு நல்ல மகளாக, காதலனிடம் அன்பு காட்டும் இந்த லீலா தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடிப்பார் அமைதியாக நடிக்கும் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
ராஜதந்திரம் படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த தஞ்சையைச் சார்ந்த
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார்
இயக்கம் நன்றாக
கிராமத்தில் நடக்கும் ஒரு இறப்பு சம்பவத்தை இயல்பாக படம் எடுத்திருக்கிறார் 36 தியேட்டர் ஆர்டிஸ்ட்களை அழைத்து வந்து நடிப்பே தெரியாதபடி இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் கோர்வையான திரைக்கதை, விறுவிறுப்பான கதைக்களம் ,என இயக்குனர் மனதில் இடம் பிடிக்கிறார்
இப்படத்தில் நரேந்திர பிரசாத்
(அன்பு )என்ற கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தி போகிறார் உள்ளூரிலேயே வேலை பார்க்க ஆசைப்படும் அப்பா ஒருபுறம் வெளியூரிலே வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் காதலி ஒரு புறம் இருவருக்கும் இடையில் அன்பு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பது ரசிக்கும் படி இருக்கிறது
, கீதா கைலாசம்,
லீலாவின் அம்மாவாக தன் மகள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பிறகு ஏமாற்றிவிட்டு போய்விட்டாளே என்று ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு சிலையாக இருப்பதும் சரி
கிளைமாக்ஸில் தன் மகள் சாவுக்கு காரணத்தை அறிந்து கொண்டு பொங்கி அழுது மகள் பிணத்தை தன் மடியில் போட்டு கதறும் அந்த காட்சிகளில் கீதா கைலாசம் ஜொலிக்கிறார்
சுபாஷ் ராமசாமி,
இவர் லீலாவின் அண்ணனாக(முத்து)என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் பொறுப்புள்ள அண்ணன் என்ன செய்வாரோ அதை திரைக்கதையில் உள்வாங்கி நடித்திருக்கிறார்
ஹரிதா,
லீலாவின் அண்ணியாக முத்துவின் மனைவியாக கர்ப்பம் தரித்த (பிரேமாவாக) நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
பொற்கொடி,
ஜெய், இவர்கள் இருவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
மற்றும்
ராஜ் ராஜப்பன் லீலாவின் அப்பா கதாபாத்திரத்தில் செல்வராஜாவாக வாழ்ந்திருக்கிறார் நடிப்பு இயல்பாக இருக்கிறது
பிரதீப், ராமசாமி
என முத்துவின் நண்பர்களாக வந்து நன்றாக நடித்து இருக்கிறார் கள்
‘
ராணி என்ற கதாபாத்திரம் அவ்வப்போது நாத்திகம் பேசிவிட்டு போகிறது
அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட கிரீடம் இந்த படத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது
அதை திருடி அவர்களுக்கு சரியான தண்டனையும் இந்த படத்தில் கிடைத்திருக்கிறது
இறப்பு வீட்டில் வரும் குடிகாரன் அவ்வப்போது வந்து நையாண்டி ,நக்கல் பேசுவது ,காமெடி கலகலப்பு
மற்றும் ஊர் பெரியவரான பசுபதி கதாபாத்திரம்
சோமு ,புண்ணியம்,
அன்புவின் அப்பா பாலு ,கதாபாத்திரம் என எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கிறது
கண்ணம்மா கிழவி
அவர் தங்கையும் இரட்டைப்பிறவிகள் அதில் தான் அமானுஷ்யம் இருக்கும் என்று எதிர்பார்ததவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் ஆரம்பத்தில் இருந்தே பூட்டி வைத்து ரூமுக்குள் கண்ணம்மா கிழவியின் தங்கையின் சேலை இருக்கிறது என்று காட்டி அந்த காட்சியை கொஞ்சம் புஸ்ஸென ஆக்கிவிட்டார்கள் அதில் அமானுஷ்யத்தை கலந்து இன்னும் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம்
தஞ்சாவூர் வல்லம் குறுவாடிபட்டி
யைசேர்ந்த மக்கள் இதில் நடித்திருக்கிறார்கள் எல்லோருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: சுஜித் சாரங் ஒளிப்பதிவு மிக நன்றாக இருக்கிறது
சில இடங்களில் லைட்டிங் குறைவாக இருக்கிறது லீலாவின் வீட்டில் பூட்டிய அறைக்குள் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது கேமரா
எடிட்டர் &அண்ட் கலர்ஸ் கரெக்ஷன் இரண்டுமே ஸ்ரீஜித் செய்திருக்கிறார் இரண்டும் நன்றாக வந்திருக்கிறது
இரண்டு மணி நேரம் படம் தான் அதை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர்
ஜெசின் ஜார்ஜ் இசையில் பாடல்கள் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது
லீலா
பிணத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு தடவையும் முயற்சி செய்யும்பொழுது இசை மிரட்டி இருக்கிறது
ராஜேந்திரன் வசனம் ரசிக்க வைக்கிறது
ஆர்ட் டைரக்டர் ஜோசப் அரங்கமைப்பு நன்றாக இருக்கிறது
அர்விந்த் மேனன்
டி ஐ சூப்பர்
நன்றாக இருக்கிறது
ரெஜின் ரோஸ் காஸ்டிங் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்
பாடல்களை
கவிஞர்
ஞான கரவேல்,
மற்றும்
ராஜேந்திரன் ,
தஞ்சை செல்வி, எழுதி இருக்கிறார் கள்
டைட்டில்பாடல்
தஞ்சை செல்வி பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்
அந்த லவ் மெலோடி,
மற்றும் வானம் போனாலே பாடல் இதயத்தை தொடுகிறது
இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா
இவர்கள் டீம் படத்தை மிகச் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எமகாதகி
சாதி ஆணவத்தை அழகாக சொல்லி இருக்கிறது .
காதலர்களை வாழ விடுங்கள் என்று சொல்லி இருக்கிறது .
மகளிர் தினமான மார்ச் எட்டில் வெளியாகும் இந்த படம் பெண்களுக்கு உகந்த படமாக வந்திருக்கிறது.
பெண்கள் தங்கள் கருத்துக்களை இன்னமும் சுதந்திரமாக பேச முடியவில்லை என்பதை பிணமாக வந்து பெண்களுக்காக பெண்கள் உரிமைக்காக வாதாடி ஜெயித்திருக்கும் லீலா போன்ற பெண்களுக்கு இந்த படம் தன்னம்பிக்கையை கொடுக்கும் பெண்கள் அவசியம் காண வேண்டிய படம் ஏமகாதகி
பெண்களைப் பெற்ற அப்பா, அம்மா, அண்ணன்கள், காதலித்துக் கொண்டிருக்கும் காதலன், காதலி, அனைவரும் காண வேண்டிய ஒரு நல்ல குடும்பத்தாரமான படம் எமகாதகி
மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இப்பொழுது தெலுங்கு ,ஹிந்தி, கன்னடா, மொழிகளில் விற்பனையாகி விட்டது என்று தயாரிப்பாளர் சொன்னார் நிச்சயம் மனதார வாழ்த்துகிறோம் இப்படிப்பட்ட நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும் என்பது நமது விருப்பமும் வாழ்த்துக்களும்
கிளாசிக் சினிமா
தயாரிப்பாளர் தன் அப்பாவின் பெயர் திரையில் வர வேண்டும் என்பதற்காக 18 வருடம் போராடி இப்போது திரையில் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னார் அவரது கனவு நனவு ஆனதை போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று
இன்னும் பல படங்கள் தயாரிக்க வேண்டும் நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி பெற வேண்டும்
