கிங்ஸ்டன் திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.ஆக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த கிங்ஸ்டன் விமர்சனம்

நடிகர் & நடிகைகள்

.ஜீ வி. பிரகாஷ் குமார்(கிங்ஸ்டன்)
வேடத்திலும் ,

திவ்யபாரதி(ரோஸ்) வேடத்திலும் ,

சேத்தன் (சாலமோன்) வேடத்திலும்
– அழகம் பெருமாள்(ஸ்டீபன் போஸ்) வேடத்திலும்,
குமரவேல் (மார்ட்டின்) வேடத்திலும்,
சாபமோன் (தாமஸ்) வேடத்திலும்,
ஆண்டனி(லிபி)
வேடத்திலும்,
அப்துல் சமத் (காட்சன்) என்ற வேடத்திலும்,

ராஜேஷ் பாலச்சந்திரன் (பிலிப்ஸ்) வேடத்திலும், பிரவீன்(பெஞ்சமின்)
வேடத்திலும் மற்றும் அருணாசலாஸ்வர் என
நடித்திருக்கிறார்கள்
அனைவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது

கதை களம்

1982ல் தூவத்தூர் என்ற கடற்கரை கிராமத்தில் ஆரம்பிக்கிறதுகதை ஆரம்பமே செம மிரட்டலாக இருக்கிறது ஆவிகள் தலைவிரித்தாடும் கோரத்தாண்டவத்தால்
அந்த ஊரைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் மாண்டு போய் வருகிறார்கள்
இது எல்லாம் கடல் அரக்கன் எனும் கடல் பேய் மூலம் நடக்கிறது இதனால் அந்த கடற்கரை கிராமமே பயந்து போய் கிடக்க அரசு அதிகாரி (வீராசாமி)
அந்த கடற்கரையில் இருந்து யாரும் மீன்பிடிக்க போக கூடாது என்று தடை உத்தரவு போர்டை வைத்து ஒரு முள்வேலி கம்பியும் அமைத்து விடுகிறார்

சிறுவனாக இருக்கும் கிங்ஸ்டன் தன் தாத்தாவிடம் என்றாவது ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வேன் என்று சபதம் இடுகிறான்
அந்த கிராமத்தில் வாழ முடியாததால்
கிங்ஸ்டன்
தூத்துக்குடி செல்கிறான் தூத்துக்குடியில் தாமஸ் அய்யா இவர்தான் தாதா இவரின் கட்டுப்பாட்டில் அந்த கடற்கரை மீனவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் இவரை கேட்காமல் எதுவும் நடக்காது ஜிவி பிரகாஷ் இவரின் வலதுகரமாக இருந்து இவர் சொல்லும் வேலைகளை செய்கிறார்

ஜி வி பிரகாசுக்கு எப்படியாவது ஒரு போட்வாங்கி மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்பது லட்சியம் அதற்காக எந்த காரியம் செய்தாவதுபணம் சம்பாதிப்பது இவர் லட்சியம்

ராபர்ட்டின் மகன் பெஞ்சமின் தாமஸ் அய்யாவிடம் கிங்ஸ்டன் இடமும் வேலை கேட்டு வேலைக்கு சேருகிறார் பெஞ்சமின் படித்தவர் என்பதால் அட்வான்ஸ் டேஜாக எதையும் யோசிக்கிறார்
கிங்ஸ்டனும்
அவரது கூட்டாளிகளும் கடலுக்குள் செல்லும் பொழுது மீனுக்குள்
தங்கம் வைத்து கடத்தப்படுவதை எச்சரிக்கையாக சொல்கிறான் பெஞ்சமின்
அதை முதலில் உதாசீனப்படுத்தும் கிங்ஸ்டன்
இலங்கை கடற்படையால்
துப்பாக்கி சூட்டில் பெஞ்சமின்
பலியானதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் தாமஸ் ஏமாற்றி பகடைக்காய் ஆக்கிவிட்டார் என்று கொதித்து எழுகிறார்

அந்த ஊர் மக்களுக்கு இதற்கு மேல் எதுவும் ஆகக்கூடாது என்று பிலிப்ஸ், காட்ச்சல் லிபி ,இவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க இறங்குகிறார் இவரோடு ரோஸ் சேர்ந்து கொள்கிறார்

இடைவேளை வரை தாமஸ் உடன் மோதிகொண்டிருந்த கிங்ஸ்டன், இடைவேளைக்குப் பிறகு கடல் அரக்கனான பேயுடன் மோதத் தயாராகி போட்டை கிளப்புகிறார் .
அதற்கு பிறகு படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது

கிங்ஸ்டன் தன் நண்பருடன் கடலுக்குள் சென்று பேயிடம் மாட்டிக் கொண்டாரா?

இல்லை கடல் அரக்கனை கொன்று சவப்பெட்டியை தங்கக் கட்டிகளோடு எடுத்து வந்தாரா ?

தாமஸ் அவரது கூட்டாளிகளுக்கும் என்ன ஆனது?

கிங்ஸ்டன் ரோஸ் காதல் நிறைவேறியதா?

1982ல் என்ன நடந்தது
யார் துரோகம் செய்தது
தூவத்தூர் மக்களுக்கு வஞ்சகம் இழைத்தது யார்? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறது இரண்டாம் பாகம்
பேய் வரும் காட்சிகள் கடலுக்குள் தனியாக போட்டியில் கிங்ஸ்டனும் கூட்டாளிகளும் மாட்டி கொள்வது
என படம் விறுவிறுப்பாகவும்
ஹாரார் கலந்த அச்சுறுத்தலாகவும் படமாக்கி இருக்கிறார்கள் சிறப்பாக இருக்கிறது

நாயகன் ஜீ வீ

ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு சிறப்பாக உள்ளது
கிங்ஸ்டனாக துருதுருவென நடித்திருக்கிறார்
பணம் தான் லட்சியம் என்று வாழும் கதாபாத்திரம் லட்சியத்தை நோக்கி வேகமாக போகும் பயணம் சிறப்பாக இருக்கிறது
முதல் பாதி முழுவதும் கடற்கரை 2ம் பாதி தான் கடல் பேய்களுடன் மல்லுக்கட்டும் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது
ஜி.வி மற்றும் திவ்யபாரதி
இருவருக்கும் ரொமான்ஸ் குறைவு என்றாலும் கதைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் ராசாத்தி என்ற பாடலில் இருவரும் செம கெமிஸ்ட்ரி
:ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் நடிகரகாகவும் இசையமைப்பாளராகவும் தனது ஒட்டுமொத்த உழைப்பை சிறப்பாகவே கொடுத்துள்ளார். அதிலும், “கடலுக்கு நான் கிங்குடா” என வரும் வசனம் எல்லாம் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்.
ஜிவி பிரகாஷ் குமாருக்கு இது ஒரு வெற்றி படம் என்பதில் சந்தேகம் இல்லை

மற்ற கலைஞர்கள்

சாலமோனாக வரும் சேத்தன் நடிப்பு செம மிரட்டல்
மார்ட்டினாக வரும்
குமரவேல் ஜிவி பிரகாஷ் தாத்தாவாக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
வில்லனாக
சாபமோன் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஜி வி பிரகாஷ் கூட்டாளிகளாக வரும்
மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ,
அப்துல் சமத் மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,
பெஞ்சமினாக நடித்திருக்கும்
பிரவீன் ,
அரசு அதிகாரியாக நடித்திருக்கும்
வீராசாமி, என அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது
ஸ்டீபன் போஸ் என்ற வேடத்தில் வரும் அழகம்பெருமாள் மிரட்டி இருக்கிறார்
அவர் நண்பராக வரும் ஆண்டனி வேடத்தில் நடித்த வரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் கள்
ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யபாரதி ,அசல் மீனவப் பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் இந்த படத்தில் அவருக்கு கவர்ச்சி, ரொமான்ஸ், எதுவும் இல்லை படம் முழுக்க கிங்ஸ்டன் மீது அன்பு செலுத்தும் மெர்லின் மகள் ரோஸ் நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்

இயக்குனர்
அறிமுக இயக்குனர்
கமல் பிரகா ஷ்
கடல் சார்ந்த கதையில் பேய் களம் அமைத்து அதில் தங்க கட்டி கடத்துவதை திரைக்கதையாக வைத்து கடற்கரை மீனவ கிராம மக்களின் அறியாமையை படமாக எடுத்து அற்புதமான படமாக கொடுத்திருக்கிறார் படத்திற்கு பல டிவிஸ்ட்கள் வைத்து
விழிகளை விரிய வைத்துள்ளார் பல காட்சிகளில் பேய் வரும் பொழுது தியேட்டரில் பயந்து நடுங்கும் சத்தம் கேட்கிறது
காட்சாவின் அக்கா கடற்கரையில் பிணமாகக் கிடக்கும் பொழுது திடீரென காட்சா காலைபிடிப்பது
ஆண்டனி கடலுக்குள் போட் டில் எலும்புக்கூடு மண்டையை பிடித்திருக்கும் போது ரத்தம் வழிவது ,
என பல காட்சிகள் மிரட்டலாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

கோகுல் பினாய், ஒளிப்பதிவாளராக அற்புதமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் கடல் சார்ந்த காட்சிகள் தத்ரூபமாக இருக்கிறது கடற்கரை மீனவ கிராமங்களை அதன் சாயலில் நீல நிறத்தில் காட்டி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்

ஜி.வி .பிரகாஷ் இசையமைப்பு மிரட்டலாக இருக்கிறது ஆரம்ப காட்சியிலிருந்து கடலில் பேய் வரும் காட்சிகள் என பின்னணி இசை மிரட்டி இருக்கிறது பாடல்களும் ரசிக்க வைக்கிறது

சான் லோகேஷ் படத்தை இரண்டு மணி 20 நிமிடம் என சீராக எடிட்டிங் செய்து இருக்கிறார் காட்சிகள் ஒன்றோடு ஒன்று கச்சிதமாக பொருந்தி படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது

எஸ் எஸ் மூர்த்தி கலை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் பல காட்சிகள் பிரமாண்டமாக இவரால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஜான்சி டாக்கீஸ் ,மற்றும் கடலுக்குள் அந்த கடல் போட், மற்றும் பல இடங்களில் இவரது கை வண்ணம் பளிச்சென்று இருக்கிறது

திலீப் சுப்புராயன்
சண்டை பயிற்சியிளாராக பணி புரிந்திருக்கிறார் ஆக்சன் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது

ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி
சரியான முறையில் மீனவ மக்களுக்கு எப்படிப்பட்ட உடைகள் பொருத்தமாக இருக்குமோ அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் எந்த இடத்திலும் ஆடம்பரத்தை காட்டாமல் அவர்கள் வாழ்வாதாரத்தை ஆடை வடிவமைப்பில் காட்டி இருக்கிறார்

PROSTHETIC MAKEUP
பிரதீப் விது ரா வின்
ஒப்பனை மிரட்டல் பேய்களுக்கு மேக்கப் போடுவது சாதாரண விஷயமல்ல அதை அற்புதமாக செய்து இருக்கிறார்

தயாரிப்பு:- ZEE STUDIOS, PARALLEL UNIVERSE PICTURES

தயா ரிப்பா ளர்கள் – ஜி
வீ பிரகாஷ் குமார்,
உமேஷ் ,
KR பன்ஸஸ் ,
, பவானி ஸ்ரீ
வெளியீடு – COLOR FRAMES ALA
[கிரியேட்டிவ் புரொடியூசர் :தினேஷ் குணா
எக்ஸ்பியூட் ப்ரொடியூசர் :வெங்கட் ஆறுமுகம்
நடன பயிற்சியாளர்கள் பாபா பாஸ்கர் மற்றும் கல்யாண் ,
வசனம் எழுதி யுள்ளார் எஸ் சேகர்

பாடல்களை யுகபாரதி, அருண் ராஜா காமராஜர்,
கார்த்திக் நேதா, மற்றும் அறிவு, எழுதி இருக்கிறார்கள்

VFX : Nxgen Media
VFX Supervisor – V. Arun Raj
Sound Mix : M R Rajakrishnan
Sound Design : Sync Cinema
Colourist : Prasath Somasekar (Knack Studios)
Animation : Akhil & Nevin
Music production supervisor : Jehovahson Alghar
Publicity designs : Gopi Prasannaa
Stills : E. Rajendran
Makeup : P Mariappan
Prosthetics Makeup : Pradeep Vithura
Publicity Stills : Prashun Prashanth
Subtitles : Sajid Al
என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு வெற்றிப் படத்திற்காக அருமையாக உழைத்திருக்கிறார்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் அசோசியேட் இயக்குனர் அபி
மற்றும் அசிஸ்டன்ட் இயக்குனர் யோகேஸ்வரன் மற்றும் பல உதவி இயக்குனர்கள் இந்த படத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார்கள் கிராமத்து மக்கள் தங்கள் இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர்
யுவராஜ் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் நிச்சயமான இது வெற்றி படம் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என ஜி .வீ .பிரகாஷ் கூறியிருந்தார் எத்தனை பாகம் வந்தாலும் இந்த படம் வெற்றி பட்டியலில் பதிவு செய்யும் என்பது உறுதி