டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கும் இப்படத்தை தம்பிதுரை மாரியப்பன் இயக்கி யிருக்கிறார்
ட்ராமா’ திரைப்படம் ஒரு ஆந்தாலஜி மூவி. மூன்று கதை, மூன்று களங்கள். இவை அனைத்தும் இன்டர் லிங்க் மூலம் இணைக்கப்பட்டிருக்ிறது குழந்தை இல்லாத தம்பதிகள் சுந்தர்(விவேக் பிரசன்ன)கீதா (சாந்தினி தமிழரசன்)
ஏழ்மையான குடும்பத்தில் உள்ள செல்வி (பூர்ணிமா ரவி)ஜீவா (பிரதோஷ)
கார் திருட்டு வேட்டையில் ஈடுபட்டு கொலை வழக்கில் சிக்கிகதறும் இருவர் (ஸ்மைல் செல்வா) மற்றும் (மதன கோபால்) என மூன்று தரப்பு வித்தியாசமான கதை களம் இந்த மூன்று கதையை ஒரே நேர் கோட்டில் அமையும் படம் டிராமா.
சுந்தர் மற்றும் கீதா என்ற பணக்கார தம்பதியினர் கருவுறுதல் சிகிச்சையில்ஆரம்பித்து அவர்கள் எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக் கொள்வதும் இதற்கிடையில், செல்வி மற்றும் ஜீவாவின் காதல் விவகாரம் அதன் பின்னணியில் நமோ நாராயணா என கடுமையான திருப்பத்திலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த இரண்டு கதை களத்துடன்பின்னிப் பிணைந்தவுடன், ஒரு மர்மமான ரகசிய கும்பலால் நட்ராஜ் மற்றும் ஒரு டாக்டர் இவர்கள் நடத்தபட்ட நாடகம் என்பது அதிர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்துள்ளது கதை முடிவுகள்
இப்படி மூன்று தனித்தனிக் கதைகளை முழுப் படமாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர்தம்பிதுரை மாரியப்பன். மூன்று கதைகளின் மைய நோக்கமும் குழந்தை அன்பு, பரஸ்பர புரிதல்தான். முழுநீள சினிமா என்ற வரையறைக்காக ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் சிறிய தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
மனித வாழ்வின் மூன்று படிநிலைகளிலும் காதலின்/அன்பின் புரிதலை, தேவையை, மகிமையை அழகியலுடன் உணர்த்திச் செல்கிறது படம். ஒவ்வொன்றும் அதனதன் சிறப்புக்கு ஏற்பபுரிதலுடன் அழகாய் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
வணிகப் படங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு முழுவதும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை இத்திரைப்படம் தரும். ஆனால் சில இடங்களில் தேய்வழக்கான வசனங்களும், நீளமான சில காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம். ஆனால் கதையின் நீரோட்டத்தில் சின்ன சின்னக் குறைகள் காணாமல் போய்விட்டன என்பது நிஜம்.
இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா,
நடிப்பு நன்றாக இருக்கிறது தன்னால் இயலாத ஒன்றை தன் மனைவியிடம் கூற தயங்கும் தயக்கம் உள்ள கணவனாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
பூர்ணிமா ரவி,
செல்வி என்ற கதாபாத்திரத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டு ஜீவாவை காதலித்து வாழ்க்கையை தொலைக்கும் கதாபாத்திரம் பூர்ணிமாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது
ஆனந்த் நாக்,
விவேக் பிரசன்னாவின் நண்பன் ரகுவாக வந்து எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார் அது படத்தை பாருங்கள் தெரியும்
சாந்தினி தமிழரசன்,
விவேக் பிரசன்னாவின் மனைவி கீதாவாக வந்து தாய்மையின் தவிப்பு நன்றாக ஏற்படுத்துகிறார் நடிப்பு நன்றாக இருக்கிறது
பூர்ணிமாவின் அம்மா வாக வரும் ரமா நடிப்பு நன்றாக இருக்கிறது
நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடிப்ும் நன்றாக இருக்கிறது
அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்த அந்த கிரைம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது
ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது மெலோடி பாடலும் தாய்மை பாடலும் வெகுவாக கவர்கிறது
படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாண்டு இருக்கிறார் சிறப்பான படத்தொகுப்பு
கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார்
திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
விநியோகஸ்தர் இளமாறன் அவருக்கு வெற்றி கிடைக்கட்டும்
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த ட்ராமா குழந்தை இல்லாமல் தவிக்கும் இன்றைய தம்பதிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது
ஏழ்மைநிலையில் உள்ள மகளிர் காதல் வலையில் விழும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் குடும்பத்தின் நலம் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் தன்னை காதலிப்பவன் எப்படிப்பட்டவன் என்பதை தெரிந்து காதலிக்க வேண்டும் என்பதை சொல்கிறது இந்த படம்
தன்னிடம் வேலை செய்யும் பெண்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அவர்களை துச்சமாக நினைக்க கூடாது கௌரமாக நடத்த வேண்டும் என்று முதலாளிகளுக்கு பாடம் சொல்கிறது இந்த படம்
சின்ன சின்ன திருட்டு தானே என்று எப்படியும் தப்பித்து விடலாம் என்று நினைக்கும் திருட்டு கும்பலுக்கு இந்த படம் ஒரு பாடம்
பெண் குழந்தைகளைப் பெற்று விட்டால் அது வயதுக்கு வந்த பிறகு அதை மிகவும் உஸாராக கண் காணிக்க வேண்டும் என்று சொல்கிறது இந்த படம்
மொத்தத்தில் இது படம் என்பதை விட இந்த சமுதாயத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை நாம் எப்படி கடந்து செல்கிறோம் அதில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு இயக்குனர் சொல்லி இருக்கும் பாடம்
