என்னை சுடும் பணி திரை விமர்சனம்

ரேட்டிங் 3/5

இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில், எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிப்பில், நட்ராஜ் சுந்தர்ராஜ் நாயகனாகவும், உபாசனா நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘எனை சுடும் பனி’. இதில் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, தலைவாசல் விஜய், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சிங்கம் புலி, சித்ரா லக்‌ஷ்மணன், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை களம்

பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜும் நாயகி உபாசானாவும் காதலித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி சிறு சிறு சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொள்ளாச்சியில் இளம் வயது பெண்கள் சிலர் மர்ம நபரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதை கண்டுபிடிக்க பாக்கியராஜ் தலைமையிலான போலீஸ் குழுவினர் மர்ம நபரை தேடி வர
மர்ம கொலை தொடர்ந்து நடக்கிறது. விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு எந்தவித துப்பும் கிடைக்காமல் போக, பெண்கள் மாயமாவது மட்டும் அடிக்கடி நடக்கிறது. இதற்கிடையே, நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜின் காதலி நாயகி உபாசனாவும் கடத்தப்படுகிறார். ஆனால், அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில், நாயகனால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொள்கிறார்.

நாயகியை கடத்திய குற்றவாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் ஈடுபடுகிறார். காவல்துறை சிறப்பு அதிகாரியான கே.பாக்யராஜும் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்க, இறுதியில் யார் குற்றவாளியை பிடித்தது ?, அவர் யார், எதற்காக இதை செய்கிறார்? என்பது தான் படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ராம் ஷேவா, கிரைம் திரில்லர் ஜானரை கமர்ஷியலாக கையாண்டது மட்டும் இன்றி, பெண்கள் இத்தகைய ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளவதற்கான முக்கியமான காரணத்தை சொல்லி, மக்களை எச்சரிக்கவும் செய்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ் சுந்தர்ராஜ் அறிமுக நடிகர் போல் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து இடங்களை இயல்பாக கடந்து சென்று மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் உபாசனா, திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

சிறப்பு காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்திருக்கிறார்.

மனோ பாலா, சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு தூணாக நின்றிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மிக்கின் அருள்தேவ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ஆகியோரது பணி கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது

மொத்தத்தில் இந்த என்னை சுடும் பணி சமூகத்துக்கு தேவையான படமாக வந்திருக்கிறது பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கூடிய இப்படிப்பட்ட படங்கள் வெற்றி அடைந்தால் தரமான படங்கள் வரும் என்பது உறுதி இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் அவர்கள் மக்களிடம் கொண்டு போய் படத்தை சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள் படக்கு ழுவுக்கு வாழ்த்துக்கள்

இயக்குனர் இதற்கு முன் வாகை, என் காதலை சீன் போடுற,
போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இந்த படமும் அவருக்கு வெற்றியாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்

விஜய் கோபால்
கிளாசிக் சினிமா