வீர தீர சூரன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

ஆரம்பக் காட்சியில் ஒரு பெண்மணி பெரியவர் வீட்டுக்கு வந்து என் கணவனை காணவில்லை என்ன செய்தீர்கள்? கொலை செய்து விட்டீர்களா? என்று கூப்பாடு போடுகிறார். அந்தப் பெண்மணி யார்? அவர் கணவர் யார் ? என்பது சஸ்பென்ஸ்.\

இதை அடுத்து அவரது கணவர் காவல் நிலையத்தில் சென்று என் மனைவியை காணவில்லை பெரியவர் வீட்டுக்கு தான் போனார் என்ன ஆனது என்று தெரியவில்லை? என்று புகார் செய்கிறார் இப்போது கதைக்குள் எஸ் .ஜே சூர்யா என்ட்ரி ஆகிறார் !

பெரியவர் குடும்பத்திற்கும் எஸ் ஜே சூர்யா விற்கும் தீராத ஒரு பகை இருக்கிறது. அந்தப் பகை தான் படம் முழுக்க ஒரு ராக்கெட் புறப்பட்டது போல ஜிவ்என்று கிளம்புகிறது
திரைக்கதை

பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன,

அவர் மனைவி கலை (துஷாரா) இவர்கள் திருமணம் எப்படி நடந்தது காளி நடத்திய அதிரடி ஆட்டம் என்ன?

படம் முழுக்க விஸ்வரூபம் எடுத்து எதிரிகளை பந்தாடும் இந்த கதையும், திரைக்கதையும், ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு அருமையான விருந்து

காளி

கெட்ட பையன் சார் இந்த காளி என்று சொல்லும் அளவுக்கு விசுவாசமான ஒரு பெரியவர் வீட்டுக்கு நன்றியுடன் நடந்து கொள்ளும் அந்த மனிதப் பண்பும், ஆரம்பக் காட்சிகளில் டிவிஎஸ் 50 யில் , மனைவியிடம் செய்யும் அந்த சில்மிஷம், திருமணத்துக்கு முன்பே முதல் இரவு நடத்தும் கிளுகிளுப்பு , நான் முதல் மனைவி இல்லை என்று துஷாரா சொன்னவுடன் கோவப்படும் அந்த பண்பு , எஸ் ஜே சூர்யாவிடம் பேசும் டீல், கன்னிவெடி கையாளும் லாவகம்
வெங்கட்டுக்கு வலிப்பு வந்தவுடன் அவனை விட்டு விடும் இந்த மனித நேயம், என குட்டி நடிகர் திலகமாக இதில் தனது கதாபாத்திரத்தை வழுவூன்றி நிற்க வைத்து நடித்திருக்கிறார் இருக்கிறார் காளி என்கிற விக்ரம்.

விக்ரமின் நடிப்பு சூப்பர் காளியாகவே வாழ்ந்திருக்கிறார். கணவன் மனைவி இருவரும் செய்யும் அந்த கூடல் காட்சிகள் படத்திற்கு இதமாக இருக்கிறது கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது,

ஒரு கதைக்காக உடலை வருத்தி உடல் எடையை ஏற்றி இறக்கி அந்த கதாபாத்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விக்ரம் சற்று அதிலிருந்து விலகி பழைய கமர்சியல் ஹீரோ தூள் பட விக்ரம் போல இந்த படத்தில் ரசிகர்களுக்காக இறங்கி அடித்துள்ளார்

ஒரு நீண்ட வருடங்களாக கமர்சியல் வெற்றிக்காக போராடிவரும் விக்ரமிற்கு இந்த படம் மிக் பெரிய கம்பேக்காக இருக்கும். இனி இது போன்ற கமர்சியல் ஆக்சன் படங்களையே தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான் வழக்கமான ஸ்டைல் இல்லாமல் இருப்பதே புதுமையாக இருக்கிறது. அதேபோல் நாயகி துஷாரா விக்ரமை கட்டுப்படுத்தும் மனைவியாக துணிச்சலான நடிப்பை கொடுத்துள்ளார்.

மலையாள நடிகர் சுராஜ் கதாபாத்திரமும் சிறப்பு.

எஸ் ஜே சூர்யா நடிப்பு அபாரம் தெலுங்கு நடிகர் பிருத்வி பெரியவராக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்

தேனி ஈஸ்வர் அவர்கள் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது

படத்தொகுப்பு பிரசன்னா விறுவிறுப்பான ஒரு ஆக்சன் கதையை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்

பாலச்சந்திரன் அரங்க அமைப்பு அசத்தலாக இருக்கிறது. வினோத் தணிகாசலம் சவுண்ட் டிசைனராக பணிபுரிந்து இருக்கிறார் மிரட்டலாக இருக்கிறது.

பீனிக்ஸ் பிரபு இந்த படத்தின் சண்டை பயிற்சியாளர் வெற்றிக்கு இவர் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்

காஸ்ட்யூம் டிசைனர் ஜே .கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கலை அழகனின் ஒப்பனை அற்புதம் விக்ரம் அவர்களுக்கு ஒரே காஸ்டியூம் ரத்தம் படிந்த முகம் வில்லன்களின் ஒப்பனை என படத்திற்கு மிகப்பெரிய பலமாக மேக் அப் மேன் பணியாற்றி இருக்கிறார்

மாதேஸ்வரன் கலரிஸ்ட்டாகஆக பணி புரிந்து இருக்கிறார் அந்த இருளின் கோரத்தாண்டவம் பீதியும் கலர் கரெக்ஷன் செய்திருக்கிறது

ஸ்டில்ஸ் தேனி முருகன் மற்றும் நரேந்திரன், மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் அவரும் அவரது டீம். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Executive Producer – Anlin Lal, Karthik SH
Production Controller – Cherai S Raju
Production Executive – Ravi AP
Director’s Manager – Dinesh S
Co-Directors – Amjathkhan Kiramiyan, Ulagan Karuppasamy
Associate Directors – S. Arokiya Basil Raja, Ashwini Arunagiri, Hemapriya
Assistant Directors

படத்தின் இயக்குனர் அருண்குமார் இவர் இதற்கு முன் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும் ,சித்தா, மற்றும் சேதுபதி, போன்ற அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்கள் அது எல்லாம் மிஞ்சும் வண்ணம் இந்த வீரதீர சூரன் வந்திருக்கிறது இப்போதே பார்ட் ஒன் எப்படி இருக்கும் என்ற ஆவலை தூண்டி கதையை முடித்து இருக்கிறார் நிச்சயம் இதைவிட மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பது சந்தேகம் இல்லை

எடுத்துக்கொண்ட கதைக்களம் அதை திரைக்கதையாக்கி, சரியான நடிகர்களை தேர்வு செய்து களம் அமைத்து வெற்றி பெற செய்திருக்கிறார்

இசைப்பேரரசன் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை மிகப் பெரிய அளவில் மிரட்டியிருக்கிறார். அவர்தான் இரண்டாவது ஹீரோ, என்று சொல்லும் அளவுக்கு வாழ்த்துக்கள் ஜி.வி சார்.

மொத்தத்தில் இந்த வீரதீர சூரன் நடிப்பு அரசன் விக்ரம் அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக வந்திருக்கிறது அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வெற்றி பட்டியலில் இந்த படம் படம் பிடித்துள்ளது இந்த படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் திரைக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வீரதீர சூரனுக்கு எட்டு திசைகளிலும் அமோக வெற்றி.