E M I(மாத தவனை) திரை விமர்சனம்..

ரேட்டிங் 3-5/5

சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் ” EMI ” மாதத் தவணை “. இப்படம், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.

கதை களம்

நாயகன் சிவா ,ஒரு பட்டதாரி சரியான வேலை இல்லாத போதும் காதலியை கவர் செய்வதற்காக இரண்டு லட்சத்து 35 ஆயிரம் விலையில் பைக் வாங்குகிறார். அடுத்து காதலியை திருமணம் செய்யும்பொழுது சர்ப்ரைசாக இ எம் ஐயில் கார் வாங்கிக் கொடுக்கிறார்.

இப்பொழுது வேலை இல்லாமல் திண்டாடுகிறார். இதனால் இ எம் ஐ கட்ட முடியாமல் திண்டாடுகிறார் அதன் பிறகு அவரது நிலைமை என்ன ஆனது ?

இதுதான் படத்தின் கதை………

இன்று ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும்.

இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜர்ல இருந்து, கடைசி ஸ்டாப் வரைக்கும் கால் பண்ணி டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை அனுபவிக்காமல் கண்டிப்பா 90% மக்கள் இருக்க முடியாது. அவர்களின் கதை தான் இந்தப்படம்.

ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்கும் எதார்த்தமான கதை சம்பவத்தை படமாக எடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்

இது படம் அல்ல வாழ்க்கை பாடம் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் துன்பம் இல்லை ஆடம்பரத்துக்காக ஆசைப்பட்டு அல்லலில் மாட்டிக் கொண்டால் வாழ்க்கை துன்பம் தான்

என்பதை தான் கதையாக இந்த EMI படம் சொல்கிறது. EMI எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்தப்படம் பேசியுள்ளது.

EMI என்று அகலக்கால் வைக்காமல் நம் தகுதிக்கு வாழ்ந்தால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தான் சிக்கிக் கொள்வோம். என்பதை சொல்கிறது இந்தப் படம்.

சின்னத்திரை புகழ் ஆதவன் இந்த படத்தில் இஎம்ஐ கட்டாதவர்களின் தேடிப் பிடித்து வசூலிக்கும் கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார். . EMI யோட கொடுமைகளை இந்தப்படத்தில் அழுத்தமாகக் காட்சிப்படுத்திய உள்ளனர். விழிப்புணர்வு தரும் படமாக வந்துள்ளது

நடிகர் & நடிகைகள்

சதாசிவம் சின்னராஜ் ( சிவா),

என்ற கதாபாத்திரத்தில் நாயகனாகவும், நடித்துள்ளார் எதார்த்தமான நடிப்பு, ஹீரோவுக்கான எந்த பில்டப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார் இயக்குனராகவும் இந்த படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்

சாய் தான்யா ( ரோஸி ), என்ற கதாபாத்திரத்தில்

பேரரசு, மகளாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் பேரரசு உடன்
காதலை சேர்த்து வைக்க போராடும் பொழுது நாயகன் இஎம்ஐ தவணையில் மாட்டிக் கொள்வதும் ஆறுதல் சொல்வதும் என குடும்பத்து வாழ்க்கையில் இன்றைய பெண்மணிகள் எப்படி நடந்து கொள்வார்கள் அப்படி அருமையாக நடித்திருக்கிறார்

பிளாக் பாண்டி ( பாலா), என்ற கதாபாத்திரத்தில்

நாயகனின் நண்பராக வந்து காமெடியில் கலகலப்பாக நடித்திருக்கிறார்
ஐஸ் என்று காதலியுடன் உருகி உருகி காதலிப்பது பிறகு ஆதவனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது என இந்த படத்தில் ஸ்கோர் செய்துள்ளார்

சன் டிவி ஆதவன்,

பைக் லோன் வசூல் செய்யும் அடாவடியான வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்

OAK சுந்தர்

நாயகனுக்கு இக்கட்டான சூழ்நிலையில் வேலை கொடுக்கும் ஒரு நல்ல முதலாளியாக நடித்திருக்கிறார்

லொள்ளுசபா, மனோகர்,

மாம்பழக் கம்பெனியில் மேனேஜர் குமார் என்ற கதாபாத்திரத்தில் சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்

TKS,செந்தி குமாரி ( லக்ஷ்மி).

நாயகனின் அம்மாவாக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் மகன் தனக்கு தெரியாமல் அதிக விலைக்கு விலைக்கு பைக் இஎம்ஐயில் வாங்கியது கண்டு ஆத்திரடப்படுவது
மருமகளை மகள் என்று சொல்லி அவள் வீட்டை விட்டு செல்லும் பொழுது தடுப்பது மகன் வாடி நிற்கும் பொழுது ஆறுதல் சொல்லும் நல்ல தாயாக படத்தில் நடித்திருக்கிறார்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீநாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது

ஒளிப்பதிவு – பிரான்சிஸ்,

கிருஷ்ணகிரியில் தான் முழு படம் நடத்தி இருக்கிறார்கள் காட்சிகள் இயல்பாக இருப்பதால் மனதுக்கு நெருக்கமாகிறது ஒளிப்பதிவு

பாடல்கள் – பேரரசு, விவேக்

பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. அசுக்கு புசுக்கு பாடல், காதல் பாடலும் ,அந்த இ எம் ஐ பாடலும் ரசிக்க வைக்கிறது

எடிட்டர் R. ராமர்

கச்சிதமான படத்தொகுப்பு எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை காமெடி குடும்பம் ஈ எம் ஐ பிரச்சனை என்று படத்தொகுப்பாளர் கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்

நடனம் – தீனா, சுரேஷ் சித்

ஆரம்ப பாடலும் நாயகன் கடன் பிரச்சினையால் சிக்கிக்கொண்ட பிறகு போதையில் ஆடும் அந்த நடனமும் ரசிக்க வைக்கிறது

ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – மல்லையன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சதாசிவம் சின்னராஜ்.

முதல் படத்திலிருந்து எல்லோருக்கும் தேவையான ஒரு கதையை கையில் எடுத்து அதை இயல்பாக எல்லோரையும் நடிக்க வைத்து ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நடிப்பும் இயக்கமும் நன்றாக இருக்கிறது

பாடல்கள் :

1.அஸ்கு புஸ்குடா – பேரரசு ( பாடியவர் – சந்தோஷ் ஹரிஹரன்)

2.அடி சூர அழகே – விவேக் ( பாடியவர்- ஹரி சரண் – M.M.மான ஸி
3. ஐயோ சாமி ஈ.எம்.ஐ – விவேக் ( பாடியவர் – ஸ்ரீநாத் பிச்சை ).
என இந்தப் படத்துக்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் மக்களுக்கு தேவையான ஒரு படத்தை கொடுத்ததற்காக பாராட்டுக்கள்

சாலை ஓரத்தில் அடிபட்டு கிடக்கும் யாராக இருந்தாலும் காப்பாற்ற வேண்டும் அதுதான் மனித நேயம் என்று நாயகன் சொல்லும் காட்சி கைதட்ட வைக்கிறது அதே போல பாதி ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்பதையும் அந்த ஹெல்மெட் முழு அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் வலியுறுத்தி இருக்கிறார் அதேபோல சாலை ஓரத்தில் அடிபட்டுக் கிடக்கும் நபரை நாம் மருத்துவமனையில் சேர்த்து விட்டாள் ஒரு லட்சம் அவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும் என்ற நல்ல தகவலையும் பகிர்ந்து இருக்கிறார்

அம்மாவுக்கு தெரியாமல் கடன் வாங்குவது தவறு ஆடம்பரத்திற்காக பைக் ,கார் வாங்குவது தவறு. மனைவியை சந்தோஷப்படுத்த கடனை வாங்கி தேவையற்ற பொருட்களை வாங்கி குவித்தால் துன்பமும் தொல்லையும் ஏன் அதே சமயம் மனைவி நம்மை விட்டு பிரிந்து போகக்கூடும் என்ற தத்துவத்தையும் சொல்லி இருக்கிறார்

அதேசமயம் நண்பர்களாக இருந்தாலும் கடன் வாங்கும் நபருக்கு நாம் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது அது நம்மை சிக்கலில் மாட்டி விடும் என்ற நல்ல தகவலையும் மக்களுக்கு சொல்லி இருக்கிறார்

ஜிம் பாய்ஸ் வரும் காட்சிகளில் படம் பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது இப்படி எத்தனை பேர் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இந்த படம் ஒரு பாடம் என்பது உண்மை மொத்தத்தில் இந்த மாதத் தவணை நிச்சயமாக ஒரு விழிப்புணர்வு மிக்க படம் என்பது உண்மை

நல்ல படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரித்தால் இது போன்ற தரமான படங்கள் மேலும் வரும் கோடிகளைக் கொட்டி கத்தி ரத்தம் என்று படம் எடுத்தால் படம் பார்ப்பவர்கள் மனதில் வன்முறை தான் ஓங்கும்

மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்பது கிளாசிக் சினிமாவின் விருப்பம்