கிரிக்கெட் வீரரும் விஞ்ஞானியும் இந்திய கிரிக்கெட் அணியின் பெருமிகு கிரிக்கெட் வீரர் அர்ஜூன் (சித்தார்த்). ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் சித்தார்த்திற்கு, பாகிஸ்தானுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி, பெருமையோடு ஓய்வு பெற வேண்டும் என்கிற ஆசை. அதற்காக போராடி அணியில் இடம் பிடிக்கிறார். மறுபுறம் தண்ணீரில் பெட்ரோல் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில், வறுமையில், சவாலில் தவிக்கிறார் சாரா(மாதவன்).
இவர்களுக்கு இடையில் நயன்தாரா, மற்றும் மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் ,என பல தரப்பு கதாபாத்திரங்களை வைத்து ஒரு அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ் .சசிகாந்த்
இதற்கு இடையில் நயன்தாரா, மாதவன் பிரியாணி ரொமான்ஸ் , படம் முழுக்க இறுகிய முகத்துடன் வரும் சித்தார்த், அப்பாவையே மடக்கி கேள்வி கேட்கும் மகன் ஆதி 50 லட்ச ரூபாய் பணத்துக்காக மாதவனை கடத்தும் குட்டி , மாதவனின் நண்பனாக பரணி என்ற கதாபாத்திரத்தில் காளி வெங்கட், இவர்களுடன கிரிக்கெட் பெட்டிங் மூலம் பல கோடிகளை முதலீடு செய்து, அர்ஜூனின் கடைசி ஆட்டத்தை பணையம் வைக்க முயற்சிக்கும் பெட்டிங் குரூப். இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறது டெஸ்ட்.
இதில் சித்தார்த் மற்றும் மாதவனை எப்படி இணைக்கிறது? அதை சுற்றி நடக்கும் கதை தான் டெஸ்ட். மாதவன் மனைவியாக நயன்தாரா, சித்தார்த் மனைவியாக மீரா ஜாஸ்மின். என அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்
மாதவன்
சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவுடன் வறுமையிலும் ரொமான்ஸ் செய்வது
நல்லது செய்ய நினைக்கிற எனக்கு நல்லது நடக்கல இன்று புலம்புவது இடைவேளைக்கு பிறகு ஆதியை வைத்து அவர் ஆடும் கேம் என இந்த படத்தில் மாதவன் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார் படத்தின் பலமே மாதவன் நடிப்புதான்
சித்தார்த்
அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் பாகிஸ்தானுடன் விளையாடும் கடைசி போட்டி இதில் வெற்றி பெற்று தன்னுடைய பெயரை நிலைக்க வைக்க வேண்டும் என்று போராடுவது ஆதியை வைத்து கேம் விளையாடும் கிரிக்கெட் பெட்டிங் கும்பளுடன் மல்லு கட்டுவது இறுதியில் நாட்டுக்காக விளையாடி வெற்றி பெறுவது என்று சித்தார்த் அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்
நயன்தாரா
குமுதா என்ற ஆசிரியை வேடத்தில் ஒரு குழந்தைக்காக ஏங்கும் தாயாக ஆதியை காப்பாற்ற நினைக்கும் ஒரு நல்ல டீச்சராக கணவனுக்கு அறிவுரை சொல்லி இது தவறு என்று புரிய வைக்கும் கதாபாத்திரமாக தன்னுடைய ஸ்கூல் மேட் சித்தார்த்துக்கு பிரண்டாக அவரின் கிரிக்கெட் பயணத்துக்கு ரசிகராக இப்படி பல விதமான உணர்வு களை தனது நடிப்பு மூலம் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து இருக்கிறார்
மீரா ஜாஸ்மின்
நீண்ட இடைவெளிக்கு பிறகு காம்பேக்ட் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின் ஒரு தாயாக நல்ல மனைவியாக அதே இளமையுடன் பொலிவுடன் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் மகன் காணாமல் போன பிறகு சித்தார்த்தின் சட்டையை பிடித்து அவரை கன்னத்தில் அறைந்து தாயின் கோபத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை எழுதி ,இயக்கி இருக்கிறார் எஸ். சசிகாந்த் இன்று நாட்டில் நடக்கும் கிரிக்கெட் பெட்டிங் பற்றி அருமையாக அலசி இருக்கிறார் அதன் பின்னணியில் நடக்கும் கிரிக்கெட் வீரர்களின் பேரம் எப்படியெல்லாம் இந்திய அளவில் நடைபெறுகிறது என்பதை அருமையான டீடைலான திரைக்கதை மூலம் புரிய வைத்திருக்கிறார் கிரிக்கெட்டை உயிராக நினைத்து வாழும் ரசிகர்கள் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் இப்படத்தில் கதை, திரைக்கதை, உதவி இருக்கிறது. படம் முழுக்க இயல்பான நடிப்பும் கதை திரைக்கதையும் இயக்குனரின் திறமையை பறைசாற்றுகிறது
இப்படத்தை தயாரித்திருக்கிறார் கள்
சக்கரவர்த்தி ராமச்சந்திரா & மற்றும் எஸ் சசிகாந்த்
படத்தின் இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ,கலை அரங்கம் ,மற்றும் பாடல் காட்சிகள், அனைத்தும் படத்திற்கு பலம் சேர்க்கிறது
மாதவன் கேண்டினை வைத்து 50 லட்சம் பணம் வாங்கி தன்னுடைய ப்ராஜெக்ட்டுக்காக செலவிட்டு மாட்டிக் கொள்வது, அது நயன்தாராவுக்கு தெரியாத வண்ணம் நடைபெறுவது பிறகு கடன் காரர்கள் வீட்டுக்கு வந்து மாதவனை தட்டி எழுப்பி அழைத்துச் செல்வது இதெல்லாம் இன்று அன்றாடும் நடக்கும் காட்சிகளாக தான் நமக்கு தெரிகிறது அதேபோல சித்தார்த் நாட்டின் வெற்றியா? மகனின் உயிரா? என்று தள்ளாடும் அந்த காட்சியும் நமக்கு நெகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது
நீதியா? கணவனா? என்று நயன்தாரா போராட்டத்தில் கடைசியாக எடுக்கும் முடிவு உண்மையில் சபாஷ் போட வைக்கிறது. காளி வெங்கட், மாதவனின் உற்ற நண்பனாக வந்து மாதவன் தவறு செய்யும் பொழுது திருந்திக் கொள் இதோடு போதும் இன்று அறிவுரை சொல்லி திருத்தும் நல்ல நண்பனாக நடித்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த டெஸ்ட் இதில் இயக்குனரும், நயன்தாராவும், மாதவனும், சித்தார்த்தும்,வெற்றி பெற்று இருக்கிறார்கள் ஆதியாக நடித்த அந்த குழந்தையும் நன்றாக நடித்திருக்கிறது.
தீபா சங்கர் சில காட்சிகள் வந்தாலும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், அவர்கள் இந்த படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்
