GOOD BAD UGLY திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

அஜித் குமார் அவர்களின் வெற்றிப் படங்களான மங்காத்தா “பில்லா” தீனா “போன்ற படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படமாக வந்து வெற்றி படமாக அமைந்திருக்கிறது
ரெட் டிராகன் எனும் குட் பேட் அக்லி

கதை களம்

முன்னாள் கேங்ஸ்டர் ரெட் டிராகன் (எ) AK (அஜித்குமார்) தன் மனைவி ரம்யா (த்ரிஷா) கேட்டுக் கொண்டதாலும், மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தாதலும், தன் தவறுகளை ஒப்புக் கொண்டு அரசாங்கத்தில் சரணடைந்து மும்பையில் 18 வருடங்கள் சிறை வாசம் இருக்கிறார் . அப்பாவின் குற்ற பிம்பத்தை மறைத்து அவர் பிஸ்னசில் பிசியாக இருக்கிறார் என சொல்லி ஸ்பெய்னில் தன் மகன் விஹானை (கார்த்திகேயா தேவ்) வளர்க்கிறார். பல வருடங்களுக்கு பின் விஹானை பார்க்க சிறையில் இருந்து விடுதலையாகி ஸ்பெய்னுக்கு AK வரும் போது, போதைப் பொருள் வழக்கு ஒன்றில் விஹான் கைதாகிறார். மகனுக்காக கைவிட்ட வன்முறையை, அவனை காப்பாறுவதற்காக மீண்டும் கையில் எடுக்கிறார் AK. மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது யார்? அவரை காப்பாற்றினாரா AK?

அர்ஜுன் தாஸ் யார்? சிம்ரன் யார்? பிரசன்னா யார்? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது குட் பேட் அக்லீ

அஜித் குமார்: ரெட் டிராகன்

ஏ கே வாக மிரட்டி இருக்கிறார்
நடிப்பில் பழைய அஜித் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார்
அஜித் ஒன் மேன் ஷோ தான் இந்த குட் பேட் அக்லி. ஆதிக் ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளர் அஜித்தின் பெர்ப்பாமன்ஸ் படம் முழுவதும்.
குட் அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்க மகனுக்காக பேட் ஆக மாற அவர் எடுக்கும் செய்யும் காட்சிகள் சரவெடி தான். அதிலும் இடைவேளை போது வரும் காட்சி மங்காத்தா பிறகு ஒரு தூள் சீன்
கிளைமாக்ஸ் காட்சி அதிரடியாக களம் இறங்கி காரில் கண் வைத்து சுட்டு தள்ளும் விதமும் பகையை மிச்சம் வைக்காமல் அர்ஜுன் தாசை போட்டு தள்ளும் விதமும் ரசிகர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகிறது

: திரிஷா

: ஏகே மனைவி ரம்யா வாக அழகாக வந்து போகிறார் 18 வயது மகனுக்கு தாயாக நடித்திருக்கிறார்
தவறு செய்யும் கணவனை திருத்தும் காட்சிகளும், சிம்ரன் வரும் போது கணவனை சந்தேகப்படும் காட்சிகளும் நடிப்பில் நன்றாக நடித்திருக்கிறார்
ரம்யா கதாபாத்திரத்துக்கு கச்சிதமான தேர்வு

அர்ஜுன் தாஸ்

வெளிநாட்டு: வில்லனாக அஜித்துக்கு செம்ம டப் கொடுத்து இருக்கிறார் இரண்டு வேட கதாபாத்திரத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி தவறு செய்யும் பொழுது திரிஷாவிடம் வசமாக சிக்கிக் கொண்டு அவரை ரிவெஞ் எடுக்க அவரது மகனை போதை வழக்கில் சிக்க வைத்து அஜித்தை இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு வரவழைக்கும் கதாபாத்திரம் அதிரடி நடிப்பு ஆக்ஷன் அதகலம் என மிரட்டி இருக்கிறார் அஜித்க்கு அடுத்து அர்ஜுன் தாஸ் கவனம் பெறுகிறார்
மற்ற கலைஞர்கள்
[
பிரபு, பிரசன்னா , யோகி பாபு, ஜாக்கி சஷராப் ,சிம்ரன், கார்த்திகேய தேவ்,
கிங்ஸ்லி என நட்சத்திரபட்டாளங்கள் கதைக்கு பக்கபலமாக இருந்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்

: ஜீ வீ பிரகாஷ்

படத்தின் பக்க பலம் இசை தான் பின்னணிஇசையில் மிரட்டி இருக்கிறார் அவ்வப்போது வரும் பழைய பாடல்கள் கலகலப்பை ஏற்படுத்துகிறது ஜிவி பிரகாஷ் படத்திற்கு மிகப்பெரிய பலம்

: இயக்குனர் ஆதிக் ரவி சந்திரன்

அஜித்தை ஒன் மேன் ஷோ வாக காட்டிஇந்த குட் பேட் அக்லி. படத்தை வெற்றி பெற செய்து இருக்கிறார்
ஆதிக், ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார்
இயக்குனர்
ஒரு ரசிகனுக்கு அஜித்தை பிரேம் பை எப்படி ரசிப்பார்கள் என்று எனக்கு தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்

மங்காத்தா , ஸ்டைலில் பில்லா, பாணியில் வேதாளம், தெறி ஸ்டைலில் ஒரு தூள் இண்டர்வெல்.
சூப்பர் இயக்குனர்

இரண்டாம் பாதி தொடங்கியதும் அஜித் யார் என்ற ப்ளாஷ்பேக் அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என 10 தீபாவளி காட்டியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதிரடியில் அமர்க்களம் செய்திருக்கிறார் வரலாறை திரும்பவும் கொண்டு வந்திருக்கிறார் அமர்க்களம் அட்டகாசம் எல்லாம் கலந்து கட்டி கொடுத்திருக்கிறர் சிம்ரன் எண்ட்ரி, அதை கையண்ட விதம் என அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்கள் விசில் சத்தம் அடங்க வெகு நேரம் ஆகிறது
சிம்ரனிடம் இடுப்பு பத்திரம் என்று அஜித் சொல்ல கரவொலி

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது,
படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் 20 நிமிடம் கச்சிதமாக இருக்கிறது ,
ஆர்ட் டைரக்டர் கடுமையான உழைப்பு ஒவ்வொரு பிரமிழும் தெரிகிறது

சண்டை பயிற்சியாளர் படம் முழுக்கவே மாஸான அதிரடி சண்டை கொடுத்திருக்கிறார்
படத்தின் ஒப்பனையாளர்,,,
மற்றும் காஸ்ட்யூமர்
தயாரிப்பு நிர்வாகிகள் என அனைவரும் படத்தின் வெற்றிக்கு பலமாக பணியாற்றி இருக்கிறார்கள்

இந்த படம்
முழுக்கவே
அஜித் அஜித் அஜித்.
அதே சமயம்
அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகள். நன்றாக இருக்கிறது
சண்டை காட்சிகள், மாஸ் மொமண்ட்.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி செம விருந்து

மக்கள் தொடர்பாளர் திரு ..சுரேஷ் சந்திரா அவர்கள் திரு .
அப்துல் நாசர் அவர்கள்
மக்களிடம் படத்தைக் கொண்டு போய் நன்றாக சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

: மொத்தத்தில் இந்த ரெட் டிராகன்

அஜித்திடம் இப்படிப்பட்ட படத்தை தான் எதிர்பார்க்கிறோம் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு செம மாஸ் படமாக வந்துள்ளது வசூலிலும் சாதனை படைக்கும் ரசிகர்கள் நெஞ்சங்களில் மீண்டும் மங்காத்தா பாணியில் வெற்றி படமாக வந்துள்ளது படத்தில் நடித்த திரைக்குப் பின்னால் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌷