TEN HOURS திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கதை களம்

படத்தின் ஆரம்பத்தில் கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண் வீடு திரும்பும் பொழுது கடத்தப்படுகிறார் பெற்றோர்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் சிபிராஜ் இருக்கும் அந்த காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்கிறார்கள் கேஸ்ட்ரோ என்ற கதாபாத்திரத்தில் சிபிராஜ் அந்த பெண்ணை கண்டுபிடிக்கும் பொழுது மூன்று போலீஸ்காரர்களை கொலை செய்து விடுகிறார்கள
அதன் பிறகு
சென்னையிலிருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில்
ஜீவா என்பவர் போலீஸ் கன்ட்ரோல் நிலையத்துக்கு போன் செய்து இன்னொரு பஸ்ஸில் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்கிறார்கள் என்று போன் செய்கிறார்
அவரையும்
கொலை செய்து விடுகிறார்கள்
அதன் பிறகு தான் தெரிகிறது அந்த பஸ்ஸில் ஜீவாவும், திவ்யா ,என்ற பெண்ணும் காதலர்களாக ஊரை விட்டு தப்பிக்க நினைக்கிறார்கள் திவ்யாவின் அப்பா கூலிப்படை வைத்து ஜீவாவை கொன்றாரா ?
காணாமல் போன ஜனனி நாராயணன் என்ன ஆனார்?
ஜீவா கொலை வழக்கில் கத்தி விரல் ரேகை பொருந்தி போகும் குரு யார்?
பிறகு அவரும் இல்லை என்ற பிறகு காசி ,சேது, இவர்கள் யார்?
ஜீவா வை யார் கொலை செய்தார்கள்,? எதற்காகச் செய்தார்கள்? என்பது தான் கதை.

இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். மறுநாள் காலையில் சபரிமலை செல்ல வேண்டும் என்ற நிலையில் 10 மணி நேரத்துக்குள் எப்படி விசாரித்து கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்கிற திரைக்கதை, யாரும் யூகிக்க முடியாததாக இருக்கிறது
இதற்கு முன், சில படங்களில் போலீஸ்
படங்கள் வந்திருந்தாலும் இது வித்தியாசமான கதைதான். வேகமான திரைக்கதை, என்பதால் ரொமான்ஸ் காட்சிகள் இதில்
இல்லை .
பாடல் காட்சிகள் இல்லை. காமெடி காட்சிகள் இல்லை. ஆனாலும் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது

: நாயகன் சிபிராஜ்

இதற்கு முன் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான ‘வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் இப்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்துள்ளார்
கேஸ்ட்ரோ என்ற காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வந்து போகிறார்
இரண்டு சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார் அதுவும் அந்த தீயில் நடக்கும் சண்டை காட்சிஅனால் பறக்கிறது
புத்திசாலித்தனமாக ஒவ்வொரு காட்சியையும் யோசித்து அவர் கண்டுபிடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்
வெல்டன் சிபி ராஜ்.

மற்ற நடிகர் நடிகைகள்

: கஜராஜ் ,

எஸ் .ஐ.மணியாக நடித்திருக்கிறார் படம் முழுக்க சிபிராஜ்க்கு உதவியாக வருகிறார்
ஒரு நடிப்பு நன்றாக இருக்கிறது

ஜீவா ரவி மருத்துவராக வந்த இறந்து போன கொலையாளியின் உண்மை வெளிச்சத்தை புடம் போட்டு உடைக்கிறார்

ராஜ் ஐயப்பா படத்தின் முக்கிய புள்ளியாக திருப்பு முனையை ஏற்படுத்துகிறார்
திவ்யாவை காதலித்து அவளை கரம் பிடிப்பதற்காக பஸ்ஸில் செல்லும் பொழுது நியாயத்தை தட்டி கேட்டு அநியாயமாக உயிர்விடும் ஒரு நல்ல கதாபாத்திரம்

முருகதாஸ் பஸ் கண்டக்டராக, மாரி என்ற கதாபாத்திரத்தில் அவர்தான் கொலையாளியோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்
போலீஸ் அடி
மனுஷன் திண்டாடி போகிறார்.

திலீபன் மெயப்பனாக பல சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்
படத்தில் இறுதி பாகத்தில் வந்தாலும் முக்கிய புள்ளியாக வருகிறார்
அவருடைய கதாபாத்திரத்தை இதற்கு மேல் விளக்க முடியாது.

மற்றும் உதயா, தங்கதுரை,
சரவண சுப்பையா,
நிரஞ்சனா,
சர்முனிஷா,
என அனைவரும் தங்கள் பங்குக்கு இந்த படத்தின் வெற்றிக்கு உழைத்து இருக்கிறார்கள்

இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்

இப்படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் விறுவிறுப்பான திரைக்கதை ,ஒரு இன்வெஸ்டிகேஷன், திரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம் இரண்டு மணி நேரம் படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது
அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று ரசிகர்கள் ஆவலோடு பார்க்கும் வண்ணம்எழுதி இயக்கியிருக்கிறார்
அறிமுகப்படம் போய் இல்லாமல் பல படங்களை இயக்கிய அனுபவங்கள் அவர் இயக்கத்தில் தெரிகிறது.

மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள்

: படம் முழுக்க இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது பஸ் பயணங்கள், ஹைவே ரோடு, காவல் நிலையம், இப்படி எல்லா இடங்களிலும் திகிலான காட்சிகள், ஒளிப்பதிவு கைவண்ணம் நன்றாக தெரிகிறது

ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு அருமை

கே .எஸ். சுந்தரமூர்த்தியின் இசையில் பின்னணி மிரட்டலாக இருக்கிறது
படத்தின் பாடல்கள் இல்லை
ரொமான்ஸ் காட்சிகள் இல்லை விறுவிறுப்பான திரைக்கதைக்கு பின்னணி இசை உதவி இருக்கிறது

லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
இரண்டு மணி நேர படம் தான் படம் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையாமல் படத்தை கச்சிதமாக தொகுத்து இருக்கிறார்
படத் தொகுப்பாளர்
படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பும் ஒரு காரணம்

அருண் சங்கர் துரையின் அரங்கமைப்பு அற்புதம் பல இடங்களில் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
காவல் நிலையம்
சண்டைக் காட்சிகளுக்கான
தீப்பந்தம், என பல இடங்களில் ஆர்ட் டைரக்டர் கை வண்ணம் பளிச்சென்று இருக்கிறது

காஸ்ட்யூம் டிசைனர் பாரதி

சவுண்ட் டிசைனராக சச்சின்
Syn cinema
Sound mixing : Aravind Menon

ஒப்பனையாளராக பிரகாஷ் பணியாற்றி இருக்கிறார்
சிபிராஜ் சபரிமலைக்கு மாலை போடுவதாக ஒப்பனை போட்டு இருக்கிறார் கச்சிதமாக இருக்கிறது மற்ற அனைவருக்கும் ஒப்பனை நன்றாக இருக்கிறது

VFX : Aravind, Pixel Light Studio
DI : B2H
Stunts : Sakthi Saravanan
Co Director : Avaneesh Cj, Silambarasan Raj
Production Manager : Bharathiraja
Stills : Raj
Produced by: Latha Balu – Durgaini vinoth
Production: Duvin Studios
Presented by : Five star, K Senthil

இப்படி இந்த படத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்கள்
இந்த படத்தை மக்களிடம் கொண்டு நன்றாக சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த படம் மலையாள படங்களில் இப்பொழுது கிரைம், திரில்லர், படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அதே போல தமிழ் சினிமாவிலும் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடையும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் சந்தித்தது போல் இருக்கும் இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்🌷🌷