சச்சின் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/ 5

ஒரு ஜாலியான காதல் படம் எப்பொழுதுமே நம் நினைவில் இருக்கும் இளமையான இந்த காதல் படம் மறக்க முடியுமா

கதை களம்

🌷அழகு நாயகன்

ஜெனிலியாவை கண்டதும் காதல் கொள்கிறார் நாயகன் விஜய். ஆனால், வழக்கம் போல் இத்தகைய காதலில் தனக்கு நம்பிக்கை இல்லை, என்று கூறி ஜெனிலியா மறுத்து விடுகிறார். மனதுக்கு பிடிக்கும் சிறு சிறு விசயங்கள் போதும் ஒருவரை காதலிக்க என்ற அடிப்படையில் தொடர்ந்து ஜெனிலியாவை ஒருதலையாக காதலிக்கும் விஜயின் காதல்
பூவாக மலர்ந்ததா அந்த மலர் இருவர் கைகளுக்கும் கிடைத்ததா காதல் இனித்ததா என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கும் படம் சச்சின்
படம் முழுக்க மென்மையாகவும், கலர்புல்லாகவும் சொல்லி யிருக்கிறார்கள் சச்சின்’. படத்தை வரை காமெடியும் பாடல்களும் திரைக்கதை அமைப்பும் வெற்றி படமாக்கியது என்பது உண்மை

நாயகன் தளபதி

🌷2005 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் ஸ்டைலிஷாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கான ஆடை வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. வழக்கம் போல் தனது குறும்புத்தனம் மற்றும் நகைச்சுவை நடிப்பு மூலம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விஜய், காதல் காட்சிகளில் உருக வைத்துவிடுகிறார்.
இந்த படத்தின் மூலம் விஜய்க்கு ஏகப்பட்ட என்ற செயலை உருவானார்கள் என்றே சொல்லலாம் அவர் பேசும் இந்த குடும்பத்தனத்தை இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் ரசிக்கலாம்
நாயகி

🌷ஜெனிலியாவின் வெள்ளந்தியான நடிப்பும், சிறு அசைவுகளும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ரகமாக இருக்கிறது. குறும்புத்தனமான நடிப்பு மூலம் ரசிகர்களை கொள்ளைக் கொள்ளும் ஜெனிலியா, மீண்டும் நடிக்க வேண்டும், என்று ஏங்க வைக்கிறார்.
அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிகர்களை கவரும் வண்ணம் படமாக்கப்பட்டு இருக்கிறது வீட்டுக்குள் அவர் செய்யும் லூட்டி மிகவும் ரசிக்க வைக்கிறது

வடிவேலு

🌷நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் அல்டிமேன் காமெடியை திரையில் பார்க்கும் அனுபவம் கிடைத்திருக்கிறது. தற்போது சமூக வலைதளங்களில் ஹைலைட்டாக வலம் வரும் வடிவேலுவின் பல காமெடி வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக, “ஷாலுமா…இப்பவே காலில் விழ வேண்டாம்…”, “நீங்க ரொம்ப சப்ப பிகாரா இருக்கீங்க…” போன்ற வடிவேலுவின் வசனங்கள் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கையே அதிர வைக்கிறது.
வடிவேலு எந்த கதாபாத்திரம் மறந்தாலும் ஜொலிப்பார் இந்த படத்தில் அற்புதமாக நடித்து கைதட்டளை வாங்கி இருக்கிறார்

மற்ற கலைஞர்கள்

🌷சந்தானம், பாலாஜி, சாம்ஸ், மயில்சாமி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார்கள். கவர்ச்சியாக நடித்து இருப்பார்
பிபாசா பாசு, ரகுவரன், தலைவாசல் விஜய் ஆகியோரது அனுபவமான நடிப்பு திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது

🌷தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகமாகவும், திரும்ப திரும்ப கேட்கும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதை போல் மென்மையாக பயணிக்கிறது.
அப்பவே அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது

🌷மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் பங்கு இப்படத்திற்கு மிக முக்கியமானது. படத்தின் ஒவ்வொரு பிரேமையும் அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஜீவா, விஜய், ஜெனிலியா இருவரையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் போல் அல்லாமல், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது காட்சிகளை கண்ணுக்குள் நிற்கும் அளவுக்கு அற்புதமாக படமாக்கி இருக்கிறார் அவர் இல்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

🌷எழுதி இயக்கியிருக்கும் ஜான், எளிமையான காதல் கதையை காமெடியாகவும், கலர்புல்லாகவும் கொடுத்திருக்கிறார். எந்த ஒரு வன்முறை காட்சிகளும் இல்லாமல், அதே சமயம் நெருடல் காட்சிகள் இல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்க்கும் அளவுக்கு நாகரீகமான காதல் படமாகவும் இயக்கியிருக்கிறார்.
அருமையான இயக்குனர் ஏன் அதற்குப் பிறகு படம் இயக்கவில்லை என்பது புரியவில்லை காதலர்கள் கொண்டாடும் இந்த காவிய படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தரும் அவருக்கு ஒரு பூங்கொத்து🌷

ஏற்கனவே இந்த படத்தை பார்த்தவர்களுக்கு தற்போது வெளியாகியிருக்கும் டிஜிட்டல் முறையிலான படம் மற்றும் காமெடி காட்சிகள் புதிய அனுபவத்தைக் கொடுக்கும், பார்க்காதவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான அனுபவத்தை கொடுக்கும்.
நீங்க ஜாலியாக இருக்க வேண்டுமென்றால் இந்த படத்தை நிச்சயம் காணலாம் உங்கள் காதலர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தோடு

🌷மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது, மற்றும் பாராஸ்ரியாஸ்அஹமது, அவர்களுக்கு வாழ்த்துக்கள் படத்தையும் நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்ததற்காக.

🌷மொத்தத்தில் இந்த சச்சின் கோடை விடுமுறைக்கு கொண்டாட்ட படமாக வந்திருக்கிறது நிச்சயம் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடிக்கும் என்று நம்பலாம்