வல்லமை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

இயக்குனர்
கருப்பையா முருகன் எழுதி இயக்கியுள்ள
படம் “வல்லமை’
இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில். பிரேம்ஜி ,திவ்ய தர்ஷினி, தீபா சங்கர்,
வழக்கு எண் முத்துராமன் ,சி ஆர் ரஜுத், சூப்பர் குட் சுப்பிரமணி, சுப்பிரமணி மாதவன்,
விதுன்

ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

:கதை களம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புத்தூரிலிருந்து சரவணன் (பிரேம்ஜி) அவரது மகள் பூமிகா (திவ்யா தர்ஷினி) இருவரும் சென்னை வருகிறார்கள் தன் மனைவியை இழந்து இரண்டு காதுகளும் கேட்க முடியாத பிரேம்ஜி சென்னை வந்து தன் மகளை நன்றாக படிக்க வைக்கலாம் என்ற கனவோடு வருகிறார் ஆனால் பூமிகாவுக்கு ஒரு விபரீதம் நடக்கிறது அதை யார் செய்தார்கள் அப்படி தப்பு செய்தவர்களை மன்னித்து கடந்து போவதா? அல்லது அவர்களை பழி வாங்குவதா? என்று மகளும் அப்பாவும் யோசித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறார்கள் வெறிநாய் ஒன்று கடித்து விட்டது அந்த கடியில் இருந்து ஊசி போட்டு நாம் தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் அந்த” வெறி நாய் மறுபடியும் நாலு பேரை கடித்தால் என்ன ஆவது “

என்ற ஒரு சமூக சிந்தனையோடு இந்த கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர்
அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரேம்ஜியும், திவ்யதர்ஷினியும், ஆழமான கதை, அர்த்தமுள்ள கதை, சமுதாயத்தில் இன்று நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு சரியான தண்டனை வேண்டும் என்று விழிப்புணர்வோடு சொல்லும் இப்படம் அப்பாவும் மகளும் என குடும்பத்தோடு காண வேண்டிய படங கதைகளும் எதார்த்தம் மீறாத படம் அதுதான் இந்த கதைக்கு கிடைத்த வெற்றி

: பிரேம்ஜி

🌷 சரவணன் என்ற கதாபாத்திரத்தில் இதுவரை பார்த்திடாத நல்ல ஒரு அப்பாவாக மகள் மீது அன்பு செலுத்தும் பிரேம்ஜி தங்க கட்டி நீ தான் என்று மகளை கொஞ்சுவது
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் கொதிப்பதும் அந்த பாதகத்தை செய்த பாவிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று துடிப்பதும் இரவில் படுத்துக் கொண்டு தன் மகளுக்கு கதை சொல்வதும் என பிரேம்ஜி முற்றிலும் நம்மை கவர்ந்த ஒரு கதாநாயகனாக வியப்பில் ஆழ்த்துகிறார்
வெல்டன் பிரேம்ஜி சார் 🙏

திவ்ய தர்ஷினி

பூமிகா என்ற கதாபாத்திரத்தில் அப்பாவை நேசிக்கும் நல்ல மகளாக தனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு அஞ்சாமல் வெறி நாய்களை தீர்த்து கட்ட வேண்டும் என்று அப்பாவுக்கு ஆலோசனை சொல்லும் தன்னம்பிக்கை பெண்ணாக தைரியமாக நடித்திருக்கிறார் ஒவ்வொரு பெண் குழந்தையும் இந்த படத்தை பார்த்து பூமிகா விடம் தைரியத்தை கற்றுக் கொள்ள வேண்டும் எது நடந்தாலும் துணிந்து போராட வேண்டும் என்ற கதாபாத்திரம் படத்தின் சிறப்பு அம்சம் வெல்டன் திவ்யதர்ஷினி நடிப்பு அருமை 🌷

மற்ற கலைஞர்கள்

நல்ல போலீசாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, பள்ளியில் பியூனாக வரும் போராளி திலீபன், கோடீஸ்வரன் சக்கரவர்த்தியாக வரும் ரஜத், பெட்ரோல் பாபு வாக வரும் விதுன் ஆட்டோ ரவி யாக பிரேம்ஜிக்கும் அவரது மகளுக்கும் உதவி செய்யும் இயக்குனர் கருப்பையா முருகன்,
கார் டிரைவராக வரும் சுப்பிரமணி மாதவன் கேனத்தனமான இன்ஸ்பெக்டர் ஆக வரும் வழக்கு எண் முத்துராமன், டாக்டராக வரும் தீபாசங்கர் என எல்லோரும் நடிக்கவில்லை தங்கள் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐

இயக்குனர்

இதற்கு முன் யானை மேல் சவாரி என்ற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் கருப்பையா முருகன் வல்லமை படத்திற்கு கதை வசனம் எழுதி தயாரிப்பாளராக படத்தை இயக்கியிருக்கிறார் படத்தில் நடித்தும் இருக்கிறார்

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையை தேர்வு செய்து அதற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து எதார்த்தம் மீறாமல் ஒரு சாமானியன் எப்படி ஒரு சக்கரவர்த்தியை அழிக்கிறான்
என்பதை புதுமையாக இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு கதையை ஒரு பெண் குழந்தைக்கு பிரச்சனை என்றால் அண்ணன் பழிவாங்குவான் அல்லது அப்பா பழி வாங்குவார் இந்த படத்தில் அந்தப் பெண்ணே பழிவாங்க வேண்டும் என்று துடிப்பது
போன்ற கதை அமைப்பு அருமை. பாராட்டுக்குரிய விஷயம் இயக்குனருக்கு பூங்கொத்து🌷🙏

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜி. கே .வி .யின் இசையில் பின்னணி இசை உருக்கமாகவும் அதே சமயம் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது வெங்கட் பிரபு பாடியுள்ள மகளே என்ற பாடல் மனதை உருக்குகிறது.

சுராஜ் நல்லுசாமி யின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகள் நன்றாக இருக்கிறது அப்பாவும் மகளும் வானத்தைப் பார்த்து சொல்லும் அந்த காட்சிகள் கிளைமாக்ஸ் கட்சியில் வில்லனை எப்படி திட்டமிட்டு அழிக்கிறார்கள் என்பதும் சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்.

கணேஷ் குமாரின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
படம் விறுவிறுப்பாக செல்வதற்கு அவரது படத்தொகுப்பில் வெற்றி பெற்று இருக்கிறது படத்தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

அஜய் அவர்களின் அரங்கமைப்பு எளிமையான வீடு, ரிச் ஆன வீடு, பள்ளியில் நடக்கும் பங்க்ஷன் ,என எல்லா இடங்களிலும் அவரின் கைவண்ணம் சிறப்பாக இருக்கிறது.

இதயா ஜேம்ஸ் ஒப்பனையாளர் ஆக பணிபுரிந்து இருக்கிறார் பிரேம்ஜிக்கும் திவ்யதர்ஷினிக்கும் ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது

முருகானந்தம் காஸ்ட்யூமராக பணியாற்றி இருக்கிறார் கச்சிதமாக இருக்கிறது

சண்டை பயிற்சியாளர் ஹரி எதார்த்தம் மீறாமல் ஒரு சாமானியன் எப்படி சண்டை போடுவார் அப்படி பிரேம்ஜியை சண்டை போட வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்

மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்

DI : Firefox
Colorist : Srikanth Raghu
Singer : Venkat Prabhu (Director)
Production Manager : M Sivakumar
Stills : “Theni” Seenu
Sound Design : DSK
Publicity Designer : J Sathish
Creative Head – K Malarkodi
Sound Mix : Subash Rithish (White Lotus)
Mixing/Dubbing Studio : White Lotus, Saligramam
Recording Studio : Oliyum Oliyum Studio, Kottivakam
Trailer Editor : Vidhu Jeeva
Additional Programming : Gugan
Production Advisor – Johny Sivam

ஏன் இப்படத்திற்காக உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள்

மொத்தத்தில் இந்த “வல்லமை “நல்ல விழிப்புணர்வு மிக்க படமாக வந்திருக்கிறது குடும்பத்தோடு காணலாம்
ஆபாச வசனங்களோ, இரட்டை அர்த்த பேச்சுகளோ, நடிகைகளின் இடையை காட்டும் ஆபாச காட்சிகளோ, எதுவும் இல்லாத ஒரு அற்புதமான படம்
இப்படத்தின் வசனங்கள் உயிரோட்டமாக இருக்கிறது
இது போன்ற படங்கள் வெற்றியடையும் போது தமிழ் சினிமாவின் தரம் உயரும்,
இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌷🙏