டூரிஸ்ட் ஃபேமிலி திரை விமர்சனம்

ரேட்டிங் 4-/5

கதை களம்

இலங்கையை விட்டு வெளியேறி, ஒரு தமிழ் குடும்பம் சென்னைக்கு வருகிறது,

தாஸ் (சசிகுமார்), வசந்தி (சிம்ரன்), மற்றும் அவர்களின் இரண்டு மகன்கள் இலங்கையிலிருந்து ஆவணமற்ற குடியேறிகளாக வருகிறார்கள் ஆரம்பத்தில் பிரகாஷ் (யோகி பாபு) உதவியுடன், சென்னையில் உள்ளூர் காவல் ஆய்வாளருக்கு (பக்ஸ்) சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்கிறார்கள். தாஸ் ஒரு ஓட்டுநராக வேலை யில் சேருகிறார், , ஒரு குண்டுவெடிப்பு காவல்துறையின் சந்தேகத்தை இலங்கையர்களை நோக்கித் திருப்பி, இறுதியில் வேட்டையை அவர்களின் வீட்டு வாசலுக்கு இட்டுச் செல்லும்போது அது திரில்லர் படமாக மாறுகிறது.

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், , சமூகம் மற்றும் அன்பை பிரகாசிக்கும் நன்மை பற்றிய கதையைச் சொல்ல விரும்பி அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் மனிதர்கள்.

நல்ல குணத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் கள் என்பதில்தான் படம் பல சமயங்களில்உயர்ந்துநிற்கிறது. அண்டை வீட்டாருடன் குடும்பப் பிணைப்பைக் காட்ட ஒரு வயதான பெண்மணி(மங்கையர்க்கரசி) இறந்துவிட தாஸின் பொறுப்பான செயல் அண்டை வீட்டாரை தட்டி எழுப்பி ஊராரின் ரிச்சர்ட் அன்பையும் பெறுகிறார் நாயகன்

இன்னொரு புறம் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து தாயை இழந்த ஒரு இளைஞனின்
சோகமான அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தாயின் பின்னணிக் கதையுடன் சொல்கிறது, தாஸ் மட்டுமே அக்கறை காட்டுகிறார், அவரது மகத்துவத்தைப் எல்லோரும் உணர்கிறார்கள்

அடுத்து இன்ஸ்பெக்டரின் சொந்த டீனேஜ் மகள் கூட குடும்ப சூழலில் சாதாரணமாக சிக்கி விடுகிறாள் (பெற்றோர்கள் வெளியே செல்லும்போது தாஸ் வீட்டில் பராமரிப்பில் விடப்படுகிறாள் தாஸ் வசந்தியின் குடும்பம் அவர்களின் நல்லொழுக்கத்திற்கு காண குறள் என்ற கதாபாத்திரத்திற்கு தாஸ், வசந்தியின் குடும்ப சூழ்நிலை உணர சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

இந்த உணர்ச்சிகரமான காட்சிகள் இடையில், நகைச்சுவை பொதுவாக நன்றாக வேலை செய்கிறது. படத்தின் மைய நடிப்புகளில் அதன் நங்கூரத்தைக் நிலை நிறுத்திக் கொள்ள. சசிகுமாரும் சிம்ரனும் முதல் முறையாக குறிப்பிடத்தக்க குடும்ப உறவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள், மிகுந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஒரு நம்பகமான கணவன் மனைவியாக நம்பகத் தகுந்த ஜோடியாக காட்சி தருகிறார்கள் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது பக்கத்து வீட்டு தம்பதியை பார்த்தது போன்ற ஒரு உணர்வு

. சசிகுமார் தாஸின் அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் அரவணைப்பையும் காணும் அதே நேரத்தில் சிம்ரன் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கும் தாயாக பாதிப்பு மற்றும் வலிமையின்
பேரன்புமிக்க தாயாக மனைவியாக நடித்திருக்கிறார்

கமலேஷ் இளைய மகன், உண்மையான கலகலப்பை தருககிறார் (சில நேரங்களில் அவரது வசனம் சத்தமாக இருந்தாலும்), படத்தின் உண்மையான இலங்கை தமிழ் பேச்சுவழக்கு அவர்களின் தொடர்புகளுக்கு ஒரு மதிப்புமிக்க யதார்த்தமான இருக்கிறது

கண்டிப்பாக மிக்க முதலாளி ஆக எம் எஸ் பாஸ்கர்

இலங்கையில் காதலியை தொலைத்து விட்டு சென்னையில் வேலை தேடும் இளைஞனாக ஆவேசம் பட நாயகன்

இப்படி எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பதால் படத்தோடு நாம் ஒன்றி போக முடிகிறது சசிகுமார் அவர்களின் எதார்த்தமான முகபாவம் கதையின் இயல்பான நாயகனாக காட்டி இருக்கிறது

சசிகுமார்

தாஸாக எம். சசிகுமார் வாழ்ந்திருக்கிறார் அவர் பேசும் டயலாக் உடல் மொழி குடும்பத்துக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் கதாபாத்திரம் ஜம் என்று மனதில் இடம் பிடிக்கிறார். அவருக்கு என்றே எழுதபட்ட கத. படம் முழுதும் ஒரு ஈழத் தமிழனின் வலியை சுமந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் தவிப்பும் வேலை பதிவு போய் விடுமோ என்று துடிக்கும் துடிப்பு மனுஷன் கதாபாத்திரமாகவே மாறிட்டார் என்று சொல்லலாம்

வசந்தி தாஸாக சிம்ரன்

சசிகுமார் உடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும் அப்பாவுக்கும் மகனுக்கு பிரச்சனை வெடிக்கும் போது சமாதானம் செய்வதாகட்டும் அண்டை வீட்டாரிடம் நட் பை பாராட்டும் போதும் சிம்ரன் அருமையாக நடித்திருக்கிறார். மேடையில் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடும் போது செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் மீண்டும் சிம்ரன் வசந்தி யாக வாழ்ந்திருக்கிறார்

தாஸின் நண்பராக யோகி பாபு

கதையின் பலமே இவர்தான்
சிம்ரனை யாரிடமும் பேசக்கூடாது என்று கண்டிஷன் போட அவர் ஊரெல்லாம் உறவு வைத்துக் கொண்டு அன்பாக பழகுவது போலி ஆதார் கார்டு எல்லாம் வாங்கி தந்து கலகலப்பாக நடித்திருக்கிறார்

தாஸின் மகனாக மிதுன் ஜெய் சங்கர்

ஆவேசம் படத்தில் நடித்த இவர் நடிப்பு பண்பட்ட நடிப்பு
அப்பா மீது ஏன் கோபம் என்று சொல்லும் போது கைதட்டல் வாங்கி கண்கள் கசிய வைத்து விட்டார்

முல்லி தாஸாக கமலேஷ்

இவர் நடிப்பு சூப்பர் செம சுறுசுறுப்பாக நடித்த கமலேஷ் இனி நிறைய படங்களில் வாய்ப்பு தேடி வரும்

தாஸின் முதலாளியாக எம்.எஸ். பாஸ்கர்

சசிகுமாரின் முதலாளியாக வரும் இவர் நடிப்பு அற்புதமாக இருக்கிறது வேலை இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு மாதம் சம்பளம் 30 ஆயிரம் கொடுத்து குடும்பத்தை கவனி என்று சொல்லும் அந்த காட்சிகளில் அதிகமான நடிப்பை தந்திருக்கிறார்

ரமேஷ் திலக் இன்ஸ்பெக்டர் ஏ. பைரவனாக
சசிகுமார் குடும்பத்தின் மீது அனுதாபத்தில் அவர்களை தப்பிக்க விட்டு விட்டு பின் வருத்த படுவது கிளைமாக்ஸ் காட்சியில் உங்களை யார் அகதி என்று சொன்னார்கள் என்று கேட்கும் போது கைதட்டல்

போலீஸ் அதிகாரியாக பகவதி பெருமாள்
இலங்கை தமிழர் பேசும் பேச்சு கூட தெரியாமல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அப்பாவி இன்ஸ்பெக்டர்

இளங்கோ குமரவேல் ஸ்ரீஜா ரவி

ரிச்சர்ட் மற்றும் மங்கையர்க்கரசி
என்று கணவன் மனைவியாக அன்பைப் பொழியும் காட்சிகள் மனதை தொட்ட காட்சிகள்
யாரும் இல்லாத அனாதை பிணமாக போய் விடுவாளோ என்று குமரவேல் அழும் காட்சிகள் மனதை தொடும் காட்சிகள்

தயாரிப்பாளர்கள்

இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் பேனரில்
நசெரத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார் கள்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு

அரவிந்த் விஸ்வநாதன்
ஒளிப்பதிவாளராக
பணியாற்றி இருக்கிறார்,
ஆரம்பத்தில் அந்த கடல் காட்சியிலிருந்து சசிகுமார் வீடு மற்றும் எல்லா இடங்களிலும் கேமரா பளிச்சென்று இருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்

பரத் விக்ரமன்,
படத்தொகுப்பாராக
பணிபுரிந்து இருக்கிறார் எந்த இடத்திலும் படம் லேக் ஆகாமல் இருக்க கச்சிதமாக காட்சிகளை செதுக்கியிருக்கிறார்

கலை இயக்குனராக ராஜ் கமல், பணியாற்றி இருக்கிறார் அவரின் கைவண்ணம் எல்லா இடங்களிலும் தெரிகிறது சசிகுமார் தங்கும் வீடு
எம் எஸ் பாஸ்கர் வீடு குமரவேல் வீடு மற்றும் காவல் துறை அரங்கம் என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டரின் அற்புதமான பணி நன்றாக தெரிகிறது

பாடலாசிரியராக மோகன் ராஜன்
பாடல்கள் எழுதி இருக்கிறார் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிறது

இசையமைப்பாளர் சீன் ரோல்டன்
பின்னணி இசையும் பாடல்களும் மனதுக்கு இதமாக இருக்கிறது கதைக்கு தேவையான பாடல்களை இசையாக போட்டு
ரசிக்க வைத்திருக்கிறார்

ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் செய்து இருக்கிறார்
சசிகுமார் குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது கடன் தொல்லைக்காக நாட்டை விட்டு வருகிறார்கள் ஆனால் அவர்கள் அணியும் ஆடைகள் எல்லாம் கொஞ்சம் ரிச்சாக இருக்கிறது அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் மற்றபடி உடை அமைப்பு கச்சிதம்தான்

மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
: படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் மக்கள் தொடர்பாளர்
அவருக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி அன்பை பேசுகிறது நாட்டை விட்டு கடல் கடந்து வந்து இங்கு அகதிகளாக வாழும் மக்கள் மனதில் உள்ள வலி யை சொல்கிறது
சென்னையில் இருக்கும் மக்கள் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களோடு பேசுவதில்லை என்ற உண்மையை போட்டு உடைத்து இருக்கிறது
எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எழுந்து ஓட வேண்டும் முடங்கி போய் விடக்கூடாது என்ற தன்னம்பிக்கையை சொல்கிறது
அன்பு இருந்தால் இந்த இடத்திலும் ஜெயிக்கலாம் நமக்கு பின்னால் ஒரு கூட்டம் வருகிறது என்றால் அது பணத்துக்காகவோ அல்லது அவர்கள் லாபத்துக்காக வருவார்கள் ஆனால் அன்பு மட்டும்தான் உன் பின்னால் ஒரு கூட்டத்தை கூட்டி வரும் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அவருக்கு வாழ்த்துக்கள

இயக்குனர் அபிஷன் ஜுவிந்த்

சின்ன வயதில் எவ்வளவு ஒரு அருமையான அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் மனிதர்கள் அன்பை தொலைத்து விட்டு புன்னகையை தூரத் தூக்கி எறிந்து விட்டு கடுகடு முகத்தோடு யாரைப் பார்த்தாலும் எரிச்சலோடு வாழுகின்றனர்
சென்னை மக்கள் அவர்களை பற்றி அருமையாக புரியவைத்து இருக்கிறார் அன்பால் இந்த உலகத்தை வெல்லலாம் என்று தத்துவத்தை அருமையாக சொல்லி இருக்கிறார் அற்புதமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் பல இடங்களில் மனதை தொடுகிறது காட்சிகள் படம் முழுக்கவே அன்பு! அன்பு !அன்பு !
இதை அற்புதமாக சொல்லி ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்🌷🙏