புதுவிதமான கதைக்களத்தில் தயாராகியுள்ள கீனோ படம்.. இதுவரை உலக திரைப்படங்களில் சொல்லப்படாத கதை களம் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் கீனோ.
..
ஆழ் மனதில் ஏற்படும் பயம் பற்றி, பேசும் படம். 13 வயது தரணுக்கும், அவனது அப்பா, அம்மா, மூவரையும் சுற்றி நடக்கும் கதை
இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா , ரேணுகா சதீஷ் , கண்ணதாசன், ராஜேஷ்கோபி
ஷெட்டி இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.
: இயக்குனர்
. இந்தத் திரைப்படத்தை எழுதி இசையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏ.வி.எம் மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர். இவர் இயக்குநர் கதிரிடம் ‘காதல் வைரஸ்’ படத்தில் உதவி இயக்குநராகவும், இயக்குநர் மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’, ‘நந்தலாலா’ திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.
என்பது நன்றாக தெரிகிறது வித்தியாசமான ஒரு கதை களத்தை எடுத்துக்கொண்டு அதில் மசாலா தூவாமல் ஒரு நல்ல தரமான படத்தை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்🌷
தயாரிப்பாளர்
.
கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரித்துள்ளார்.
மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும்
இணை தயாரிப்பாளர் ஆகவும் இருக்கிறார்
.
ஒளிப்பதிவு -ஆலிவர் டென்னி
படத்தொகுப்பு -கிருத்திகா காந்தி
எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்- சிவம்
மக்கள் தொடர்பு -பெருதுளசி பழனிவேல்
இணை தயாரிப்பு- மகாதரா பகவத் ஆர்.கே திவாகர்
தயாரிப்பு – கிருத்திகா காந்தி
எழுத்து இசை & இயக்கம் ஆர். கே. திவாகர்
கதை களம்
: 13 வயதாகும் தரண், ஒரு நாள் மொட்டை மாடியில் துணி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இரவில் கீணோ தோன்றுகிறது அன்று முதல் அடிக்கடி வந்து தரணுக்கு தொந்தரவு கொடுக்கிறது வெற்றிடங்களை பார்க்கும் பொழுதெல்லாம் கீணோ அவனை அழைத்து என்னோடு வந்துவிடு என்று அழைக்கிறது அவன் பயந்து கொண்டு இருக்கிறான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ,என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்று சாமியார்களை அழைத்து வந்து பூஜை செய்கிறார்கள் ஆனால் தீய சக்தி இல்லை
இப்பொழுது அம்மா ஆஸ்திரேலியா வேலைக்காக இரண்டு வருடம் போய் விடுகிறார்
அப்பாவுக்கு வேலை போய் விடுகிறது இதனால் வீட்டை மாற்றிக்கொண்டு தாம்பரம் அருகில் சென்று விடுகிறார்கள் அங்கும் கீணோ வந்து தரணுக்கு தொந்தரவு கொடுக்கிறது கடைசியில் மனநல மருத்துவர் அந்த கீணோ என்றால் என்ன என்று கண்டுபிடித்து தரணை காப்பாற்றுகிறார் ஒரு வித்தியாசமான கதைகளம் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை கடைசி 20 நிமிடம் நன்றாக இருக்கிறது விறுவிறுப்பாக இருக்கிறது
இத்திரைப்படத்தில் அப்பாவாக நடித்திருக்கும் மகாதாரா பகவத் டிப்பு நன்றாக இருக்கிறது மகனுக்கு என்ன ஆனது என்று பயந்து கொண்டு அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மனைவியிடம் வீடியோ காலில் பேசி கலங்குவது வேலை போய்விட்டது என்று புலம்புவது என இயல்பாக நடித்திருக்கிறார.
மாஸ்டர் கந்தர்வா
இவர் 13 வயது சிறுவனாக கீணோ வை கண்டு அஞ்சி நடுங்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்
அறிமுக நடிகைரேணுகா சதீஷ் ,தரண் அம்மாவாக ,வெகு இயல்பாக நடித்திருக்கிறார்
வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் வீட்டு புரோக்கரை தொந்தரவு செய்யும் இடமாகட்டும், நம்பிக்கையைப் பற்றி அதிகமாக பேசும் இடம், எல்லாம் இந்த கதாபாத்திரம் நம்மை நன்றாக கவர்கிறது கண்ணதாசன்
கார் சேல்ஸ் கம்பெனியில் மேனேஜராக வந்து தரனின் அப்பாவின்
வேலைக்கு உலை வைக்கும் கதாபாத்திரம் அருமை
ராஜேஷ் கோபிஷெட்டி
மனநல மருத்துவராக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் கைதட்டு வாங்குகிறார்
மொத்தத்தில் இந்த கீணோ திரைப்படம்
ஒரு விழிப்புணர்வு மிக்க படமாக வந்திருக்கிறது குழந்தைகளை சின்ன வயதிலேயே பூச்சாண்டி இடம் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டும் தாய்மார்களுக்கும், சின்ன வயதில் இருட்டுக்குள் போக பயப்படும் குழந்தைகளுக்கும், தன்னம்பிக்கை ஊட்டும் படமாக இந்த படம் வந்துள்ளது தமிழக அரசு இதுபோன்ற படங்களுக்கு வரி விலக்கு தந்து ஆதரிக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் கத்தி, வெட்டு, ரத்தம் மலிவாகப் போய்விட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும்,🌷🙏 வாழ்த்துக்கள்
