நிழற் குடை திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “நிழற்குடை”

இத் திரைப்படத்தை சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம
உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்
கதை களம்

கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும்,
குழந்தைகளுக்கு தாத்தா ,பாட்டி சொந்தம், பந்தம் உறவுகளைப் சொல்லித் தராமல் வளர்த்து வருகிறோம் என்ற ஒரு நல்ல கருத்தை முன்வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
காலத்துக்கு ஏற்ற கதை பாராட்டுக்கள் இயக்குனர் அவர்களுக்கு 🌷🙏

கதை களம்

நாயகன் விஜீத்
(நிரஞ்சன்) நாயகி
கண்மணி (லான்சி)
இவர்களுக்கு ஒரே மகள் (நிலா)
இருவரும் ஐ டி கம்பெனி வேலை செய்கிறார்கள்

குழந்தையை பார்த்துக் கொள்ள கவிதா(அகஸ்தியா) என்ற பெண்ணை குழந்தையை பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கவிதா தன் காதலன் கோகுலுடன் சேர்ந்து நிரஞ்சன் ,லான்சி இருவரும் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்குள் மோசமான ஆட்டம் போடுகிறாள். இதை அறிந்து வீட்டை விட்டு கவிதாவை துரத்துகிறார்கள்.

அதன் பிறகு அக்ஷயா ஹோமில் முதியவர்களை பார்த்துக் கொள்ளும் தேவயானி (ஜோதி)
கூட்டி வந்து நிலாவை பார்த்துக் கொள்ள செய்கிறார்கள்.

நிலாவுக்கு ஜோதி மீது ஏகப்பட்ட அன்பு ஜோதியும் ஈழத்தில் தன் குழந்தை யாழினியை இழந்த பிறகு நிலாவும், அதே போல் இருப்பதால் நிலாவை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார்.

இந்த சூழ்நிலையில் நிரஞ்சனும், லான்சியும், வெளிநாட்டுக்கு செல்வதற்காக ஆயத்தமாகிறார்கள் அந்த நேரத்தில் குழந்தை நிலா காணாமல் போகிறார்.

குழந்தையை கடத்தியது அதே பிளாட்டில் வசிக்கும் ராபர்டடா?
கவிதாவா?
அல்லது தேவயானி யா?
என போலீஸ் விசாரணையில் இறங்குகிறது
முடிவு அதிர்ச்சி!
நடந்தது என்ன? என்பதே நிழற்குடை யின் கதை களம்

நடிகர் & நடிகைகள்
தேவயானி (ஜோதி ) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அருமையான நடிப்பு இவருக்கென்று எழுதப்பட்ட கதை அதை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாக அன்பைப் பொழியும் ஜோதி கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய பலம்
ஈழத் தமிழச்சியாக எல்லோரையும்

இழந்து சொந்த பந்தங்களுக்காக ஏங்கும் இந்த கதாபாத்திரம் நம்முள் ஒருவர்
கிளைமாக்ஸ் காட்சியில்

இவர் நடந்து செல்லும் பொழுது மனதை உருக்குகிறது தேவயானிக்கு இந்த படத்தில் விருது நிச்சயம்🌷

விஜித்

நிரஞ்சன்
என்ற கதாபாத்திரத்தில்
கதாநாயகனாக
நடித்து இருக்கிறார் ஐ .டி ஊழியரை அப்படியே அசலாக
கண் முன் நிறுத்துகிறார்
குழந்தை மீது அன்பு செலுத்தும் பொழுது,
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவை சுமந்து கொண்டு தேவயானியை அம்மா என்று பாசத்தோடு அழைத்துக் கொண்டு மதம் மாறி திருமணம் செய்ததால் தன் உறவுகளை பிரிந்து, இந்த நிரஞ்சன் கதாபாத்திரம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை பார்ப்பது போல இருக்கிறது நன்றாக நடித்திருக்கிறார்.

கண்மணி

லான்சி என்ற கதாபாத்திரத்தில்
கதாநாயகியாக
நடித்திருக்கிறார்
இவரும் ஐ.டி ஊழியராக பிராந்தி குடிப்பது, தெனாவட்டாக பேசுவது, குழந்தைக்கு பாசம் காட்ட முடியவில்லை என்று ஏங்குவது, வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவில் மிதப்பது, என இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

வெளிநாடு சென்று வாழ்வதற்கு விசா கிடைத்தவுடன் ராஜ்கபூரிடம் அவருடைய சேரில் அமர்ந்து கொண்டு தெனாவட்டாக பேசும் அந்த காட்சி சிறப்பாக இருந்தது
எந்த இடத்திலும் ஆபாசமும் கவர்ச்சியும் இல்லாமல் நடித்திருப்பது ஆறுதல்

மற்றும் படத்தில்

ஜீ. வி .அஹாணா
மூன்று வயது
குழந்தையாக,
நிஹாரிகா
ஐந்து வயது பேபியாக நன்றாக
தேவயானிக்கு ஈடு கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் மழலைகளுக்கு🌷🙏

ராஜ்கபூர்
(மோகன் ராம் )என்ற வேடத்தில் இளவரசு ஐயப்பனுக்கு மாலை போட்டு (ஆறுமுகசாமி) என்ற வேடத்தில்
வடிவுக்கரசி (கல்யாணி) என்ற வேடத்திலும்
நீலிமா ராணி (டாக்டர் வித்யா) என்ற வேடத்திலும்
சிறப்பாக நடித்திருக்கிறார்கள் படத்தின் வெற்றிக்கு பலம் சேர்த்திருக்கிறார்

ராபர்ட் ஆண்டரசன்
அமீர் என்ற வேடத்தில்
சைக்கோ வில்லனாக வரும் இவர் ஆரம்பத்தில் மிரட்டுகிறார் முடிவில் நான் ஒரு மெத்தேடு நடிகன் என்று காமெடியனாக கலகலப்பு ஏற்படுத்துகிறார்

அக்சரா (கவிதா) என்ற வேடத்திலும்
கிளுகிளுப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்
கவிதா ரவி (ரவி) என்ற வாட்ச்மேன் என்ற வேடத்திலும்

மனோஜ் குமார் முதியோர் இல்லம் நடத்தும்( கோபால்) என்ற வேடத்திலும்
பிரவீன் (லாரன்ஸ்) என்ற வேடத்திலும் சிறப்பாக நடித்தி ருக்கிறார்கள்
மற்றும் வடிவுக்கரசியின் கணவர், விஜித்தின் அம்மா, கண்மணி வெளிநாடு செல்ல உதவி செய்யும் கம்பெனி முதலாளி,
உட்பட
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்:

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை ,வசனம் ,எழுதி இருக்கிறார் சிவா ஆறுமுகம்
ஒரு நேர்த்தியான கதை, இந்த காலகட்டத்திற்கு தேவையான கதை, அதை விரசம் இல்லாமல் குடும்பத்தோடு குழந்தைகளோடு பார்க்கும்படி மகிழ்ச்சியான படமாக தந்திருக்கிறார் இயக்குனர் அவருக்கு வாழ்த்துக்கள்
அவரோடு இணைந்து வசனம் எழுதிய ஹிமேஷ் பாலாவுக்கு வாழ்த்துக்கள்🌷

இசை

நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார் பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை உருக வைக்கிறது

ஒளிப்பதிவாளர்

ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவாளராக பணி புரிந்திருக்கிறார் காட்சிகள் ரிச் ஆக இருக்கிறது கண்களுக்கு குழுமையாக இருக்கிறது வீட்டுக்குள் நடக்கும் அந்த கதையில்,
ஐ,டி ஆபிஸும், மற்றும் முதியோர் இல்லம், என எல்லா இடத்திலும் கேமரா நன்றாக உழைத்து இருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்

படத்தொகுப்பாளர்

ரோலக்ஸ் பட தொகுப்பாளராக
பணி புரிந்து இருக்கிறார் இரண்டு மணி நேரம் தான் கச்சிதமாக இருக்கிறது விறுவிறுப்பாக செல்லும் படம் படத்தொகுப்பாளர் கைவண்ணம்

ஆர்ட் டைரக்டர்

விஜய் ஆனந்த் ஆர்ட் டைரக்டர் ஆக அருமையான அரங்கமைப்பு செய்து இருக்கிறார்

மற்றும்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தர்ஷன்

பாடல் ஆசிரியர்களாக
பத்மஜா ஸ்ரீராம்
பாடல் எழுதி இருக்கிறார்

பாடல்களை சைந்தவி
நரேன் பாலகுமார்
பத்மஜா ஸ்ரீராம்
பாடி இருக்கிறார்கள் பாடல் அற்புதமாக இருக்கிறது

ஒப்பனையாளராக குப்புசாமி அவர்களும் பணி புரிந்திருக்கிறார் தேவயானிக்கு கச்சிதமாக ஒப்பனை, ஐ.டி ஊழியர்களுக்கு அருமையான ஒப்பனை.
நிலாவுக்கு ரசிக்கும் படியான ஒப்பனை பணிபுரிந்துள்ள ஒப்பனையாளருக்கு வாழ்த்துக்கள்

மற்றும்

DI – Whitee lottus
Colourist – Raghuraman
VFX – Varan
Costume Designer- R.kumar
Production controller – E.abdul kareem
Finance management – Arun prasad
Executive producer – Dhasarathan
Stills – Madhan
Publicity designs – Gibson Uga
Additional designs – The Brand Max

என திரைக்குப் பின்னால் பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளராக ஜான் அவர்களும், தேன்மொழி, அவர்களும் பணி புரிந்திருக்கிறார்கள் படத்தை மக்களிடம் நன்றாக கொண்டு போய் சேர்த்ததற்கு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

: மொத்தத்தில் இந்த நிழற்குடை ”
அன்பை பேசுகிறது. குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி உறவுகளை சொல்லித் தருகிறது. அவர்களோடு பாசத்தோடு வாழ்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கிறது.
ஐ டி யில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிட வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்கிறது. காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வெவ்வேறு மதம் என்றாலும் பெற்றோர்கள் அவர்களை வெறுக்க கூடாது என்பதை சொல்கிறது
ஈழத்தில் இருந்து வந்த நமது தொப்புள் கொடி உறவுகளை நாம் பாசத்தோடு வரவேற்க வேண்டும் அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற மனிதநேயத்தை சொல்கிறது
கூட்டு குடும்பம் பெருக வேண்டும் முதியோர் இல்லம் குறைய வேண்டும் என்ற ஆழமான தத்துவத்தை
சொல்கிறது
அன்பின் நிழற்குடையால் அகிலமே செழிக்கும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை கூறும் இது போன்ற படங்கள் வெற்றியடைய
வேண்டும் என்பது கிளாசிக் சினிமாவின் விருப்பம் வெற்றியடையும் என்பது உறுதி வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா

இந்த நிழற்குடையை பாராட்டி வரவேற்கலாம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள் 🙏🌷