ஆகக்கடவன் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

அனிதா லியோ – லியோ V ராஜா பெருமையுடன் வழங்கும் “ஆகக்கடவன்

தயாரிப்பு நிறுவனம்: சாரா கலைக்கூடம்

திரைவிமர்சனம் பார்க்கலாம் வாங்க

.
ஒவ்வொரு வார்த்தையிலும் உயிர் சக்தி உள்ளது பிரபஞ்சம் காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடத்தப்படுவதில்லை என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஆகக் கடவன்.

ஆகக் கடவன்” என்றால் அப்படியே நடக்கட்டும், நல்லதே நடக்கட்டும் ,என்று அர்த்தம்

கதை களம்

ஆதிரன் சுரேஷ் (ஆதித்யா.)
ராஜசிவம் (புகழ்)
C R ராகுல் (விக்கி)

இவர்கள் மூவரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்கள் மூவரும் ஒரே ரூமில் தங்கி இருக்கிறார்கள்

இவர்கள் லட்சியம் எப்படியாவது சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைத்து நடத்த வேண்டும் என்பது இவர்களின் கனவு

அந்த மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் முதலாளி தன் மகள் திருமணத்துக்காக அந்த மூன்று பேருக்கும் ஆறு லட்ச ரூபாய்க்கு மெடிக்கல் ஷாப் கொடுப்பதற்கு ஒப்புக்கொள்கிறார்

இவர்கள் மூவரும் கடனுக்கு, வட்டிக்கும், அம்மாவின் நகை இதெல்லாம் வைத்து ஆறு லட்ச ரூபாய் புரட்டுகிறார்கள் ஆனால் அந்த பணம் ஒரு கட்டத்தில் திருட்டு போகிறது
ஆதி தன் அப்பாவிடம் சொல்லி 6 லட்சம் ரூபாய்க்கு இடத்தை விற்று கொடுக்கும்படி கேட்கிறார் அதற்கு அவர் அப்பா சம்மதிக்கிறார் இதனால் ஆதியும், விக்கியும், டூவீலரில் தன் கிராமத்தை நோக்கி பயணிக்கிறார்கள்

இன்னொரு பக்கம்

வின்சென்ட் S (நற்குணம்.)
மைக்கேல் S (தாஸ்).
சதிஷ் ராமதாஸ் (பட்டாணி).

இந்த மூன்று பேரும் பணத்துக்காக ஆட்களை கடத்துவது கொலை செய்வது என்று நயவஞ்சக் கும்பலாக ஒரு மோசமான கதாபாத்திரத்தில் வருகிறார்கள்

இவர்கள் கார் மேல்மருவத்தூர் அருகில் வரும் பொழுது பஞ்சர் ஆகி விட அங்கு பணி புரியும்.
.தஷ்னா (தீனா)
என்பவரின் தோட்டத்தில் வைத்திருக்கும் பஞ்சர் கடைக்கு வருகிறார்கள்

அங்கு இந்த மோசமான கும்பலைச் சார்ந்தவர்கள் பிரபஞ்சத்தை நம்பி நல்லதே நடக்கும் என்று நினைக்கும் விக்கி, புகழ், ஆதி
இந்த மூன்று பேரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாக சந்திக்கிறார்கள் பிரபஞ்சம் இவர்களை ஏன் சந்திக்க வைத்தது என்ன நடந்தது? இவர்கள் பணம் ஆறு லட்சம் ரூபாய் யார் திருடியது ?
பிரபஞ்சம் மீண்டும் திருப்பி கொடுத்ததா?

என்பதை மிகவும் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ், த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் ஸ்ரீநிவாஸ் / இளங்கோ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார்.
படத்தில் கதாநாயகி இல்லை, காமெடி இல்லை, ஆனாலும் ரசிக்கும்படி இருக்கிறது!

இயக்குனர் ஆழ்மன சக்தியின் அற்புதங்கள் பற்றி இந்த படத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் நல்லது நினைத்தால் நல்லது தான் நடக்கும் நம் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் சக்தி இருக்கிறது எனவே நல்லது தான் பேச வேண்டும் என்ற அற்புதமான கருத்தை இயக்குனர் பதிவு செய்திருக்கிறார்

இடைவேளை வரை டிராவலிங் கதையாக படம் செல்கிறது இடைவேளைக்கு பிறகு டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து இயக்குனர் ஒரு பரபரப்பான கதையை கொடுத்திருக்கிறார்

: இயக்குனர் : தர்மா

இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்திருக்கிறார் கதை சொல்லும் பாணியிலும் பிரபஞ்சத்தின் ஆற்றலை எடுத்து வைத்ததின் மூலம் இவர் இயக்கம் நன்றாக இருக்கிறது

ஒளிப்பதிவாளர் : லியோ V ராஜா

ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் இவர்தான் ஒளிப்பதிவு ஒரு தோப்புக்குள் நடக்கும் கதை என்பதால் பசுமையான காட்சிகளும் ,திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்

*இசையமைப்பாளர்
சாந்தன் அன்பழகன*

படத்தின் இசை பக்க பலமாக இருக்கிறது இடைவேளை காட்சியில் வரும் இசை படத்தின் அடுத்து என்ன? என்று எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது கிளைமாக்ஸ் காட்சிகளும் சரி படம் முழுக்க பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்

படத்தொகுப்பாளர் : சுமித் பாண்டியன்

படத்தை தொகுத்த விதம் சீராக இருக்கிறது ஒவ்வொரு காட்சிக்கும் ஏன் இது நடக்கிறது ?என்பதற்கு படத்தொகுப்பாளர் கைவண்ணம்
விளையாடி இருக்கிறது

பாடலாசிரியர் : விக்கி
பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது

சண்டைபயிற்சி : தேசாய்
சண்டைக் காட்சி எதார்த்தமாகும் இயல்பாகவும் இருக்கிறது பாராட்டுக்கள்

கலை இயக்குனர் : விஜயவீரன்

கல இயக்குனரின் கைவண்ணத்தில் அந்த தோப்புக்குள் இருக்கும் அந்த அறை மற்றும் பைக் பழுது பார்க்கும் அந்த மெக்கானிக் ஷாப் மருந்து கடை என எல்லாமே நன்றாக இருக்கிறது

ஒளிக்கலவை : வினோத்குமார். A
ஒலி வடிவமைப்பு :
A. சதிஷ்குமார்
ஒலிக்கலவை :
ராஜா நல்லைய்யா

மற்றும் இப்படத்தின் ஒப்பனையாளர் காஸ்டியூம் டிசைனர் தயாரிப்பு நிர்வாகி என அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் எம். பி. ஆனந்த்

ஒரு நல்ல கருத்துள்ள கதையை தேர்வு செய்து அதற்கான பயணத்தில் நடிகர்களை சிறப்பாக தேர்வு செய்து தரமான படமாக கொடுத்திருக்கிறது பட குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பிரபஞ்சம் இவர்களுக்கு வெற்றியை நல்ல வசூலையும் கொடுத்து மேன்மேலும் இவர்கள் தங்களது திரையுலக பயணத்தில் வெற்றியை ஈட்ட உதவி செய்ய வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது

வித்தியாசமான கதையை வித்தியாசமான கோணத்தில் கொடுத்த இந்த படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் காந்தமும் ஊசியும் போல கண்ணும் இமயம் போல தமிழும் சுவையும் போல தங்களது திறமையை காட்டி படம் பார்த்ததில்லை பிரமிக்க வைத்திருக்கிறார்கள் இது போன்ற புதிய படைப்பாளிகள் நல்ல தரமான படத்தை உருவாக்க வாழ்த்திடுவோம் வாழ்க வளமுடன்🙏🌷