மைய்யல் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

மைனா’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவர் சேது. அவர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மையல்’.

சம்ரிதி தாரா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்னகலா, சி.எம்.பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார். ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ளார். இது கல்வராயன் மலைப் பகுதியில் நடக்கும் கதையைக் கொண்ட படம். மலைக்கிராமத்தைச் சேர்ந்த நாயகன் திருடன்.
அவன் வாழ்க்கையில் நடக்கும் காதல் அதன் பிறகு திருந்தி வாழ நினைக்கும் பொழுது ஏற்படும் துயரம் இவைகளைத்தான் இந்த படம் சொல்கிறது *

கதை களம்

திருவண்ணாமலை கல்வராயன் பகுதி கிராமத்தில் ஒரு இரவில் படத்தின் கதை ஆரம்பம் ஆகிறது. முதியவர்கள் கணவன், மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்

இவர்களை யார்? கொலை செய்தது என்ன மோட்டிவேஷன்?

நாயகன் மாடசாமி, ஒரு ஆட்டுக்குட்டியை திருடிக் கொண்டு வண்டியில் போகிறார் ஆட்டுக்குட்டி உரிமையாளர்கள் அவரை துரத்தும் பொழுது கிணற்றில் குதித்து விடுகிறார் அதன் பிறகு அவர் நிலைமை என்ன ஆனது?

படத்தில் நாயகி அல்லி, அவரை காப்பாற்றுகிறார் கால் உடைந்த நிலையில் இருக்கும் பொழுது அவரை வீட்டிலே இரண்டு நாள் தங்க வைத்து அனுப்புகிறார் அவர்களுக்கு ஏற்பட்ட மையல் என்ன ?

அல்லியின் அம்மா, மந்திரவாதி கிழவி மாடசாமி, மீது ஏன் வன்மத்தை கக்குகிறார்?
அவரை ஊரை விட்டு ஏன் தள்ளி வைத்திருக்கிறார்கள் ஊருக்குள் வந்தால் அவரை ஏன் கட்டிவைத்து அடிக்கிறார்கள் நடந்தது என்ன?

முதியவர் கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக மதுசூதனன் வருகிறார்.
அவர் கண்டுபிடித்த பிறகு தேனப்பன் கும்பலை கைது செய்தாரா? அல்லது அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுவித்தாரா?

மாடசாமி, அல்லி, இருவரின் காதல் நிறைவேறியதா? இருவரையும் இந்த சமுதாயம் வாழ விட்டதா? ஒரு திருடன் திருந்திவிட்டால் அவன் இங்கு வாழ முடியுமா? என்பதை தான் சொல்கிறது இந்த மையல்

: காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை ‘
ஜெய மோகன் கதை திரைக்கதையாக எழுதி இருக்கிறார்
மண் சார்ந்த வலுவான கதை
ஜெயமோகன். அவருடைய ஸ்ட்ராங் ரைட்டிங் மற்றும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள்
மூலம் சிறப்பாக தந்திருக்கிறார்

சேது

மாடசாமி, என்ற கதாபாத்திரத்தின் மூலம் மனுஷன் வாழ்ந்து இருக்கிறார். காதலிக்கும் விழுந்த போதும், திருமணம் செய்து கொள்ள வீட்டை விற்று நகைகளை
வாங்கிக் கொண்டு வரும்பொழுது, காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சும் பொழுதும், கிளைமாக்ஸ் காட்சியில் ஆவேசமாக வெகுண்டு எழும் பொழுது சேதுவின் நடிப்பு உயர பறக்கிறது.

சம்ரிதி தாரா

அல்லி ,என்ற கதாபாத்திரத்தில்
அம்சமாக வந்து போகிறார்.
அழகாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். காதலுக்காக உருகுகிறார்.
மந்திர ம் செய்கிறேன் என்று பட்டாம்பூச்சிகளை பறக்க விடுகிறார். தன்னை தேடி வரும் எதிரிகள் மீது கருப்பன் என்ற காளையை ஏவி விடுகிறார் .
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் நாயகிதான் கிளைமாக்ஸ் காட்சியில்
அவர் எதிர்பாராத முடிவு எடுக்கிறார். பரிதாபத்தை வரவழைக்கிறது.

பி.எல். தேனப்பன்

பணத்துக்காக பெரியப்பாவை கொலை செய்யும் கதாபாத்திரம் தன்னை நம்பி இருக்கும் அடியாளான, செம்புலி ,மாணிக்கம், சண்முகம், இவர்களையும் தீர்த்துக்கட்ட நினைக்கும் கதாபாத்திரம்.

அல்லியின் குடிசை எரிப்பதும், கதாநாயகனுடன் கிளைமாக்ஸ் காட்சியில் மோதுவதும்,
என தேனப்பன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்

சூப்பர் குட் சுப்ரமணி,

பாவம் அவர் நம்மோடு இப்போது இல்லை என்றாலும் கந்தசாமி என்ற போலீஸ்காரர் வேடத்தில் அனுதாபத்தை ஏற்படுத்துகிறார் இவர் நல்லவரா? கெட்டவரா?என்று புரியாத கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரத்னகலா

மந்திரக்கார கிழவியாக, நாயகி அல்லியின் அம்மாவாக, கூனிக் குருகிக்கொண்டு நாயகன், நாயகி, காதலுக்கு எதிராக வருகிறார். கிளைமாக்ஸில் பரிதாபத்தை தேடி கொள்கிறார். நடிப்பில் மிரட்டி இருக்கிறார்

மற்றும் சி.எம். பாலா இன்ஸ்பெக்டர் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்

: தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால்,

கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்,

இயக்கம்: APG ஏழுமலை

சிறப்பான இயக்கம் இரவு நேர படப்பிடிப்பு, இலக்கியத்தனமான காதல், வில்லன்கள் ஒன்று சேர்ந்து நாயகியை சீரழிக்கும் கொடூரம் ,திருந்தி வாழ நினைக்கும் நாயகனை சீரழிக்கும் காவல்துறை, அதிகாரி
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறப்பு சேர்த்து இயக்கியிருக்கிறார்

இசை: அமர்கீத்.

இவர் இசையமைப்பாளர் சௌந்தர்யா ன் அவர்களின் புதல்வன் இளம் வயது இப்படி ஒரு இனிமையான பாடலும் பின்னணி இசையும் கொடுத்து மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன்

திருவண்ணாமலை கிராமத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் நடக்கும் கதை படப்பிடிப்பு நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார் .
திகிலான காட்சிகளும்
ஒளிப்பதிவாளரின் திறமை.

படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
எந்த இடத்திலும் லேக் ஆகவில்லை

மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா அப்துல் நாசர் அவர்கள்

இந்த படத்தை நல்ல முறையில் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

படத்தில் பணி புரிந்த ஒப்பனையாளர்
ஆடை வடிவமைப்பாளர்,
கலர் கரெக்ஷன் செய்த பணியாளர்,
காஸ்ட்யூம் டிசைனர்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இந்தப் படம் மைனா படம் போல மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் காதல் ஜோடிகள் ஒன்று சேர எத்தனை தடைகள் இந்த சமுதாயத்தில் இருக்கிறது. என்பதை இன்னும
சொல்லி இருக்கிறார்கள்

இந்த படத்தை கொண்டாடலாம் படம் வெற்றி பட்டியலில்🌷🙏