தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (23.05.2025),
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, “பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்” அவர்களின் சதய விழாவை முன்னிட்டு,
திருச்சி மாவட்டம் ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திருமதி.M.சந்திரா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.P.ஜகன்மோகன், திருச்சி புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.M.ரவிசங்கர், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.M.விக்னேஷ்வரன், திருச்சி மாவட்டக் கழக நிர்வாகிகள் திரு.T.கரிகாலன் மற்றும் திரு.K.அருள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கழக செயலாளர்கள் தஞ்சை மத்தியம் திரு.R.சரவணன், கரூர் மேற்கு திரு.V.P.மதியழகன், புதுக்கோட்டை மத்தியம் திரு.J.பர்வேஸ், மதுரை மாநகர் வடக்கு திரு.A.விஜய் அன்பன் கல்லானை, திண்டுக்கல் கிழக்கு திரு.L.தர்மராஜ், தஞ்சை தெற்கு திரு.C.ஏனாதி மதன், கரூர் கிழக்கு திரு.G.பாலசுப்ரமணி, சிவகங்கை வடக்கு திரு.M.ஜோசப் தங்கராஜ் சிவகங்கை கிழக்கு டாக்டர்.T.K.பிரபு, தஞ்சை கிழக்கு திரு.R.வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
