ஃபேரிடேல் பிக்சர்ஸ், ஏஆர் டூரிங் டாக்கீஸ், விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை டி.ஆர்.பாலா, அனில் குமார் ரெட்டி தயாரித்துள்ளனர். வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பு செய்துள்ளார்.
“உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு இதன் கதை நடக்கிறது. இதில் இடம் பெறும் ‘ஜின்’ என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திதான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
ஜின் “கதாபாத்திரம் சுமார் 40 நிமிடம் இடம் பெறுகிறது. எட்டு மாதமாக உழைத்து இக்கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்
பாராட்டுக்கள்
இந்த படம் ரசிகர்களுக்கு
திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த படமாக இருக்கும்
”
நடிகர் & நடிகைகள்
பிக்பாஸ்’ முகேன் ராவ், (சக்தி)
என்ற கதாபாத்திரத்தில் இளமை துள்ளும் வகையில் வருகிறார் நாயகியுடன் டூயட், ஜின்னுடன் காமெடி, எதிரிகளுடன் செம ஆக்சன், குடும்பத்துடன் குதூகலம் ,நண்பன் பால சரவணன் உடன் ஜாலி ,என நன்றாக நடித்திருக்கிறார்.
அழகான முகம், அளவான நடிப்பு, தமிழ் சினிமாவில் புதிய நட்சத்திரமாக மென்மேலும் உயர்வு
பெறுவார்
என்பது உறுதி.
பாவ்யா திரிகா
(ப்ரியா)
என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்
700 வருட பிளாஷ்பேக் கில் ராணியாக வருகிறார்
நிகழ் காலத்தில்
நர்சு,முகேன்மனைவி,என நடித்திருக்கிறார்
பேசும் விழிகளை கொண்ட அழகான நடிகை அழகான நடிப்பு
பால சரவணன்,
நாயகன் நண்பனாக,
ராதாரவி,
மனோகர் என்ற வில்லத்தனத்தில்
மிரட்டலாக,
இமான் அண்ணாச்சி,
நாயகன் அப்பாவாக,
வடிவுக்கரசி, நாயகன் பாட்டியாக,
வினோதினி நாயகன் அக்கா (சீதா)
கதாபாத்திரத்தில்
அவர் கணவராக
ஜார்ஜ் விஜய்,
மற்றும்
நிழல்கள் ரவி
ரித்விக் (சிம்பு)
என பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
கதை களம்
:ஜின் என்பது, அரேபிய மற்றும் இஸ்லாமிய கலாச்சாரங்களில், மனிதர்களைப் போலல்லாமல், கண்ணுக்குத் தெரியாத, மாயத்தன்மை கொண்ட, ஆவி போன்ற உயிரினங்களாகும். இவை இசுலாமிய மத நம்பிக்கையில், மனிதர்களைப் போலவே, தங்கள் செயல்களுக்குப் பொறுப்பளிப்பவர்களாகக் கருதப்படுபவர்கள் .
அதாவது, வெளிப்படையான மற்றும் கண்ணுக்குத் தெரியாத களங்களில் வாழும் மற்றும் செயல்படும்.
ஜின் வகைகள்
இஸ்லாமிய நம்பிக்கையில், ஜின் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள், நல்ல ஜின், தீய ஜின் என.
அப்படி எழுநூறு வருடங்களுக்கு முன் சுல்தான் என்ற ராஜா நல்ல “ஜின்னை, வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறார்.
அவரது மந்திரி
ராஜா போருக்கு போனபோது
கெட்ட
ஜின் “னைகொண்டு ராணியை கொல்கிறார்
நல்ல “ஜின்னை கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கிறார்
அந்த நல்ல ஜின் ”
700 வருடங்களுக்கு பிறகு பல பிறவிகள் எடுத்த நாயகன் , நாயகி பவ்யா, இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என்று காத்திருக்கிறது.
700 வருடங்களுக்கு பிறகு நல்ல ஜின் ”
தன் எஜமான விஸ்வாசத்தை காப்பாற்றியதா?
முகேன், பவ்யா காதல் நிறைவேறி எதிரிகள் அவர்களை
வாழ விட்டார்களா?
சூது கொண்ட ராதா ரவியின் கெட்ட எண்ணம் நிறைவேறியதா?
மலேசியாவில் வீட்டு வளர்ப்புப்பான”ஜின் ‘
தமிழ் நாட்டில் உள்ள மக்களின் மனதில் இடம் பிடித்ததா?
என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்
டெக்னிக்கல் குழு
: கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் தயாரித்தும் இருக்கிறார்
டி. ஆர். பாலா
ஒரு வித்தியாசமான கதை, தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையை தேர்வு செய்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.
விவேக் மெர்வின், இசை ரசிக்க வைக்கிறது குட்டிமா பாடல் துள்ளாட்டம் போட வைக்கிறது பின்னனிஇசை, ஆக்சன் காட்சிகளில் அசத்தலாக வருகிறது. ஜின்னுக்கு வாய்ஸ் கொடுத்தவர் நன்றாக இருக்கிறது
அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம், மலேசியா அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது கேமரா ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறது. ஜின் வரும் காட்சிகள் திகில் ஆகவும் ஆரம்பக் கட்சிகள் பயமுறுத்தலாகவும் இருக்கிறது.
தீபக் படத்தொகுப்பாளர் ஆக பணிபுரிந்து இருக்கிறார்.
படம் கச்சிதமாக இரண்டு மணி 16 நிமிடம் கச்சிதமாக இருக்கிறது.
தினேஷ்குமார்
ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து இருக்கிறார் ஆரம்பக் காட்சியில் வரும் பேய்ஓட்டும் காட்சியும் ,முகேன் வீடு ,மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள், ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் நன்றாக தெரிகிறது.
பாடல்களை விவேகா,
கு .கார்த்திக், விஷ்ணு,
எழுதி இருக்கிறார்கள் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது .
சண்டை பயிற்சியாளராக பிரதீப் பங்கேற்று
முகேன் உடம்புக்குள் ஜின் புகுந்த பிறகு, ஆக்சன் காட்சிகள் ஆனால் பறக்கிறது.
ஸ்கிரீன் ப்ளே கன்சல்டிங் ஆக கருந்தேள் ராஜேஷ் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.
நடன பயிற்சியாராக, கலைமாமணி” ஸ்ரீதர் மற்றும் ,அக்ஷிதா ஸ்ரீதர், பங்கேற்று நடனம் ரசிக்க வைத்திருக்கிறார்கள்
காஸ்ட்யூம் டிசைனராக தீப்தீ
மற்றும் ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர், கலர்கரெக்ஷன் செய்தவர்கள்,
சி.ஜி. ஒர்க் எல்லாமே சிறப்பாக இருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இந்த ஜின் உங்கள் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம். புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏🌷
