தயாரிப்பு : ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் இயக்கம் : மணிரத்னம்
நடிகர்கள் : கமல்ஹாசன், சிலம்பரசன் டி ஆர், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, மகேஷ் மஞ்சுரேக்கர்,அசோக் செல்வன், நாசர், பகவதி பெருமாள், ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, சின்னி ஜெயந்த் இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
கதை களம்
1994ல் பழைய டெல்லியில் ஆரம்பிக்கும் கதை. கமலஹாசன் கேங்க்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் தகராறில், சிம்புவின் தந்தை கொல்லப்படுகிறார்.
குமரவேல் இறந்த பிறகு சிம்பு கமல்ஹாசனால் வளர்க்கப்படுகிறார் தங்கை காணாமல் போகிறார்
தந்தையை இழந்து நிற்கும் சிம்புவை எடுத்து வளர்த்து தனது வாரிசாக அறிவிக்கிறார்
கமல். தனது அடுத்தபடியாக சிம்பு தான் என அறிவிக்கிறார். இதனால் கமலின் அண்ணன் நாசருக்கு கமல் மீது கோபம் வருகிறது மற்றும் பக்ஸ் , ஜோர்ஜ் சார்ஜ் என எல்லோரும் ஒன்று சேருகிறார்கள்
மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் இருக்கும் திரிஷாவை தன் கஸ்டடிக்கு கொண்டு வருகிறார் கமல் இது சிம்புவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. திரிஷா தனக்கு சேர வேண்டியவர் என்று நினைக்கிறார்
இந்த சமயத்தில் கமல் ஹாசன் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.
இதில் காயப்படும் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிம்பு தான் இதை செய்தார் என சந்தேகப்படுகிறார். இதனால் மனமுடைந்து போகும் சிம்பு, கமல்ஹாசன் மீது இருந்த நம்பிக்கையை இழக்கிறார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாசர், ஜோஜு ஜார்ஜ், பகவதி ஆகியோர் சிம்புவின் மூலம் கமலை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்.
காட்மண்டு செல்லும் பொழுது பணிபுரிந்த மலையின் மீது கமல்ஹாசனை அட்டாக் செய்கிறார்கள். அதன்படியே அவரை மலை உச்சியில் கீழே தள்ளிவிட, கமல் இறந்துவிட்டார் இனிமேல் ‘நான் தான் இங்க ரங்கராய சக்திவேல்’ என கூறி கமல் இடத்தை பிடிக்கிறார் சிம்பு.
அதோடு திரிசாவையும் அழைக்கிறார் சிம்பு
எவ்வளவு முறை கொல்ல முயற்சித்தாலும் மரணமடையாத கமல், தனக்கு துரோகம் செய்தவர்களைத் தேடி வந்து பழிவாங்குகிறார். இதற்கிடையே நடக்கும் காட்சிகளின் கோர்வைதான் கதை களம்
கமல்
முதல் காட்சியிலேயே ,கமல் தான் யார் என்பதை சொல்லும்போதே ’ஆஹா’ என ரசிகர்களிடம் உற்சாகம் தெரிகிறது. அதற்கேற்ப, 1994-ல் நடக்கும் காட்சிகளில் நடிகர் கமல் ஹாசனின் இளவயது தோற்றத்தை டீ-ஏஜிங் மூலம் அட்டகாசமாகத் திரைக்குக் கொண்டுவர, விசில் சத்தம் பறக்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் நகர, நாயகன் மாதிரி ஏதோ நல்ல சம்பவத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்ற படவில்லை
கல்ட் கிளாசிக் படம். ஸ்டைலாகத் தொடங்குகிறது. சில நிமிடங்களுக்கு வழக்கமான பாதையாகவே கதை நகர்கிறது. கமல் தரமான சம்பவத்தை வழங்கி உள்ளார்.
இன்டர்வல் பிளாக்க மிஸ் பண்ணிடாதீங்க. பிரிச்சி எடுத்துருக்காரு தலைவன் . மீண்டும் இளம் கமலைப் பார்க்க முடிகிறது
சிம்பு
கமலுக்கு இணையாக ரோல் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கமலின் வளர்ப்பு மகனாக வரும் சிம்பு அவருக்கே வில்லனாக வருவது சிறப்பு
படத்தில் இருவருக்கும் இடையே நடனமும், பைட்டும் சிறப்பாக இருப்தால் விறு விறு
. சிம்பு கேங்ஸ்டராக அதிர வைக்கிறார்.
முதல் பாதியில் சிம்பு அடக்கி வாசித்தாலும் இன்டர்வலுக்கு பின் படம் வேகம் எடுக்கிறார் கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது
சிம்பு கமல்ஹாசனின், நடிப்புக்கு நிகராகவும், சில இடங்களில் அதை மிஞ்சும் வகையிலும் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி யுள்ளார்
அசோக் செல்வன்
காவல்துறை அதிகாரியாக கம்பீரமாக வருகிறார் கமல் சிம்பு கோஷ்டியை பிடிப்பதற்கு கிளைமாக்ஸ் காட்சியில் அவர் நடத்தும் நாடகம் நன்றாக ரசிக்க வைக்கிறது
சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு உள்ளது. சில இடங்களில் கேள்வி கேட்கும் வகையில் இருந்தாலும் படம் மாஸ் என்டர்டெயினர் படம்.. முக்கியமாக தமிழில் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக இருக்கும்
திரிஷா ,அபிராமி
திரிஷா கதாபாத்திரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கமல் மீது தான் அவர் கதையை ஈடுபாடு சிம்புவை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற பரிதாபத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்
அடுத்து ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வரும் அபிராமி கமலுக்கு ஏற்ற மனைவியாக சிறப்பாக நடத்தி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சிகளை ஒரு விபத்துக்கு பிறகு யாரையும் ஞாபகப்படுத்த முடியாத அந்த கதாபாத்திரம் நடிப்பு சிறப்பாக இருந்தது
இயக்குனர் மணிரத்னம்
படம் முழுக்கவே இயக்குனரின் டச் நிறைய இடங்களில் தென்படுகிறது
அஞ்சு வண்ணப்பூவே எவ்வளவு அழகான உணர்ச்சிமிகு பாடல், மணிரத்னம் உருக வைக்கிறார் .
அண்ணன் – தங்கை பாசம், கணவன் – மனைவி பாசம் எல்லாம் சூப்பர்ப். கார் துரத்தல் சண்டைக் காட்சிகளை எடுத்திருந்த விதம் நன்றாக இருந்தது. திரைக்கதை, வசனங்கள் பலம் . குறிப்பிட்ட காட்சி ஒன்றில் தான் கர்ப்பமானதை அறிந்த பெண்ணை காதலன் நிராகரிக்கிறார். உடனே, அப்பெண் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்கிறார்.
அங்கு இயக்குனர் டச்
பனி படர்ந்த மலையின் மீது கமலஹாசன் நிற்பது பின்பு தப்பிப்பது அந்த ரயில்வே நிலையம் சண்டைக்காட்சி, கிளைமாக்ஸில் சிம்புவும், கமலும், மோதும் காட்சி என எல்லாமே இயக்குனர் கைவண்ணத்தில் உச்சம் தொடுகிறது.
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் இசையில் விண்வெளி நாயகனே ,அஞ்சு வண்ண பூவே, போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது
மற்றும் படத்தில் ஒளிப்பதிவாளர், மிகப் பெரிய பலம் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். டெல்லியை காட்டும் பொழுதும், காட்மண்டுவை காட்டும் பொழுதும், தமிழ்நாட்டில் உள்ள காயல்ப்பட்டினத்தை காட்டும் பொழுதும் ஒளிப்பதிவு செம மிரட்டல் ஆக இருக்கிறது .
படத்தின் ஒப்பனையாளர், மற்றும்
ஆர்ட்டைரக்டர், கலர் கரெக்ஷன் செய்த பணியாளர் ,டி ஐ செய்தவர்கள் ,
மற்றும் தயாரிப்பு நிர்வாகி ,ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு, என எல்லோரும் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள் அந்த உழைப்பு வீண் போகவில்லை ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது .
இந்த படத்திற்கு இயக்குனரும் விண்வெளி நாயகனும். கடுமையாக உழைத்து த்திருக்கிறார்கள் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் இந்த தக் லைஃப்
