கட்ஸ் திரை விமர்சனம்

ஓ .பி. ஆர். பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்

கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன்,நான்சி ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா பிர்லா போஸ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்

கதை களம்

முன்னோர்கள் பாறையாக கடந்த தரிசு நிலங்களை அப்புறப்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றினார்கள் ஆனால் தற்போது வந்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலத்தில் நச்சு கலந்த நீரை அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்து விவசாயத்தை அழிக்க பார்க்கிறார்கள்.

வில்லன் பிரணவ் தேவ் கொடியப்பூச்சி மருந்துகளை விவசாய நிலத்தில் தூவ ஊர் கிராமத்தில் அனுமதி கேட்கிறார்

அதை சாய் தீனாவும், அவரது மருமகனான ரங்கராஜ், (பெத்தான்) தட்டி கேட்கிறார்கள்

சுருதி நாராயணன் கர்ப்பமாக வலியால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெத்தான் அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வருகிறார் அப்பொழுது வில்லனால் கொலை செய்யப்படுகிறார்.

அதன் பிறகு அந்த ஊரே வேண்டாம் என்று சாய் தீனா வான அண்ணன் விட்டு மீனவ குப்பத்தில் குடியேறுகிறார்

அங்கு ஒரு போலீஸ் அதிகாரியால் அவமானப்படுத்தப்பட, அவரை கொலை செய்கிறார் சுருதி நாராயணன் தாய், தந்தை, இன்றி தவிக்கும் மகன் ரங்கராஜை, சாய் தீனா வளர்த்து
போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறார்

சட்டத்துக்கு புறம்பாக பேக்டரி வைத்துக் கொண்டு எல்லோரையும் தீர்த்துக்கட்டும் வில்லன் அஜய் தேவ் , அந்த ஊரின் வி. ஓ. வான திருநங்கை கயலை தீர்த்து கட்டுகிறான்

அவனை வளர்ந்து பெரியவனரான போலீஸ் அதிகாரி ரங்கராஜ், லாக்கப்பில் தள்ளுகிறார்

இருவக்கும் மோதல் ஏற்பட நாயகன் மனைவி அனுவை, தீர்த்து கட்டுகிறான் வில்லன்
அவனை கொலை செய்துவிட்டு மீண்டும் சுண்ணாம்பு குளம் பகுதிக்கு வந்து தன் மகளுடன் வாழ நினைக்கும் ரங்கராஜை, அஜய் தேவின் அப்பா பிரணவ் தேவ் வாழவிட்டாரா?

ரங்கராஜ் தன் மகளை காப்பாற்றினாரா?

விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டதா?

வில்லன் பிரணவ தேவ்க்கு ,என்ன ஆனது?

என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் “கட்ஸ்

நாயகன் ரங்கராஜ்
: பெத்தன் என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து நாயகனாக
அநியாயத்தை தட்டி கேட்பவராக,

அதன் பிறகு போலீஸ் அதிகாரி ரங்கராஜ்வாக, மனைவி அனுவை இழந்த பிறகு பரிதாப கோலத்தில், தன் மனைவியை கொன்றவனை அழிப்பதற்காக மீண்டும் வீரப்பிரதாபனாக,மீண்டும் விவசாயாக, என ஐந்து கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்

கர்ப்பமாக இருக்கும் சுருதி நாராயணை சுமந்து கொண்டு, நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்று சொல்லும் இடமாகட்டும்,

போலீஸ்கார பாத்திரத்தில் மனைவியாக வரும் அணுவிடம், குந்தாணி என்று கொஞ்சும் போதும், அவர் இறந்த பிறகு கால்களை அமுக்கி விடுவது, பிணமாக கிடக்கும் அவரோடு சேர்ந்து படுப்பது ,

அன்பு மகளை அரவணைத்துக் கொண்டு அவருக்கு பிரச்சனை என்றவுடன் துடித்து எழுவது,

தன்னுடன் பணிபுரியும் காவல்துறையை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு சாப்பிட அழைத்து வரும்பொழுது நடக்கும் விபரீதத்தை கண்டு உருகிப் போவது,
இப்படி பல காட்சிகளில்,
தன் அருமையான நடிப்பின் மூலம் நம் இதயத்தை கவருகிறார்.

கிராமத்து வேடம், என்றாலும் போலீஸ் அதிகாரி வேடம், என்றாலும் விவசாயி என்றாலும் எல்லா இடத்துக்கும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

கருப்பு விஜயகாந்த் போல கச்சிதமாக இருக்கிறார்

அன்னை இல்லம் சென்று குழந்தைகள் கொஞ்சுவதும்,

தன்னிடம் காதல் சொல்ல வரும் கேரளத்து அழகி அனுவிடம் காதலை ஏற்பதும்,

படம் முடியும்போது விவசாயியாக வீர தமிழனாக வரும் பாடல் கட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்

வில்லன் அஜய் தேவ்

திருநங்கையை கொன்றவனை லாக்கப்பில் போடும்போது மேல் அதிகாரியை அவரை விடுவிப்பது கண்டு கலங்கிய போகும் காட்சி அருமை!

கிளைமாக்ஸ் காட்சி யில், தன் அப்பாவை கொன்றவனை, மகன் பழித்திருக்கும் இடம் கொஞ்சம் புதுமையாக யோசித்திருக்கிறார்.

காட்சிகளை,ரசித்து இயக்கி நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சார் 🌷

சுருதி நாராயணன்

கணவதி அம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் ஆரம்பக் காட்சியில் கர்ப்பிணியாக வந்து துடிப்பதும் கணவனை நான் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரை நீ சாகக்கூடாது என்று கட்டளை இடுவது பின் மீன் காரியாக வந்து போலீஸை சாய் ப்பது ,என்று அற்புதமாக நடித்திருக்கிறார்

சாய் தீனா

நாயகன் தாய்மாமாவாக ,வந்து பாண்டியன் கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் அவர் வரும் காட்சிகள் ஆரம்பத்திலும் சரி, முடிவிலும் சரி, நாயகனுக்கு பக்க பலமாக இருக்கிறார்

மற்றும் பாய் என்கிற ஏட்டாக டெல்லி கணேஷ், நடித்திருக்கிறார் முதிர்ந்த அனுபவம் கை கொடுக்கிறது .

சின்னத்திரையில் வலம் வரும் பிர்லா போஸ், தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நல்ல போலீசாக வந்து மனதில் இடம் பிடித்திருக்கிறார் .

கயல் என்னும் வி ஓ வாக திருநங்கை கயல் நடித்திருக்கிறார் அவர் வரும் காட்சி குறைவு என்றாலும் அனுதாபத்தில் அள்ளிக் கொள்கிறார் .

அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கேரளா அழகி பேசும் பேச்சும் சரி கொள்ளை அழகு. கணவனை ,கல்லா” என்று அழைக்கும் அந்த குறும்பும் சரி ரசிக்க வைக்கிறது. அவர் முடிவு பரிதாபமாக இருக்கிறது

குழந்தை நட்சத்திரம் அப்பா மீது அன்பு காட்டுவது ரசிக்க வைக்கிறது

மற்றும் கான்ஸ்டபிள் மகாவாக, விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா,அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது

காவலர்கள் ஜெகதீசன், தமிழ்ச்செல்வன், இந்த கதாபாத்திரங்களும் படத்தில் பேசும் வகையில் இருக்கிறது.

அஜய் தேவ் ஆக வில்லனாக நடித்தவர் ,மிரட்டி இருக்கிறார்

பிரணவ் தேவ் ,ஆக நடித்திருக்கும் வில்லன் கதாபாத்திரம் செம மிரட்டல் செம ஸ்டைலாக நடித்திருக்கிறார் .

சின்னத்திரை புகழ் நடிகை ஸ்ரீலேகா, நாயகனின் அம்மாவாக அருமையான பாசத்தை வழங்கி நன்றாக நடித்திருக்கிறார்

மற்றும் பிரவின் மஞ்ரேக்கர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

இயக்குனர்

கதை ,வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். நடித்தும் இருக்கிறார். படத்தை தயாரித்திருக்கிறார். ரங்கராஜ் .

ஒரு ஆக்சன் மசாலா படம்.

ஒரு விழிப்புணர்வு மிக்க படத்தை, விவசாயிகள் வேதனையை சொல்லும் படமாக, ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும். ஒரு கடமை தவறாத அதிகாரி எப்படி இருக்க வேண்டும். என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்கம் நன்றாக இருக்கிறது .
வசனம், ரசிக்க வைக்கிறது
பாடல்களும் அவரே எழுதியிருக்கிறார். வீரத்தமிழன் பாடல் எழுச்சிமிக்கதாக இருக்கிறது.

இசை

ஜோஸ் பிராங்க்ளின் இசை பாடல்கள் பின்னணி இசை எல்லாம் ரசிக்க வைக்கிறது
பாடல்களை நாயகன் ரங்கராஜ் எழுதியிருக்கிறார் விவசாய பாடல் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவாளர்

மனோஜ் ஒளிப்பதிவில்,

இரவு நேர காட்சிகள் திகில் ஊட்டும் வண்ணம் படப்பிடிப்பை எடுத்திருக்கிறார்
பாடல் காட்சியில் சிறப்பாக கேமரா விளையாடியிருக்கிறது.

படத்தொகுப்பு

படத்தொகுப்பு ரஞ்சித்; 2 மணி நேரம் 11 நிமிடம் சிறப்பாக இருக்கிறது . காட்சிகளை முதலில் வைத்துவிட்டு, பிறகு அதற்கு விளக்கம் சொல்வது போல செய்த படத்தொகுப்பு படத்திற்கு மிக பலமாக இருக்கிறது.

சண்டைக் காட்சிகளை பிரகாஷ் அமைத்திருக்கிறார் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம்.

ஒப்பனையாளராக கயல், பணிபுரிந்து இருக்கிறார்

மக்கள் தொடர்பாளர் நிகில்முருகன் அவர்கள் படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏

மொத்தத்தில் இந்த கட்ஸ்”கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது
தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள்🌷🙏