தீப்பந்தம் திரை விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஈழத்தமிழர் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட
படம்” தீப்பந்தம் ”
.

ஈழத்தமிழர் வாழ்வியலையும் வரலாறையும் திரைப்படம் மூலம் ஆவணப்படுத்தும் இந்த முயற்சிக்கு மக்கள் ஆதரவு வேண்டும் என

கேட்டு கொண்டு இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஆரம்ப காட்சியில் சிவம் என்ற கதாபாத்திரம் ஒரு ஆவணத்தை தனது வண்டியில் வைத்துக் கொண்டு வருகிறார்.

மே 18 அன்று அந்த ஊரில் உள்ள ஒருவர் கஞ்சி குடிக்கிறார் ஒரு சிறுவன் என்னப்பா இதில் உப்பு சப்பு இல்லையே? என்று கேட்கிறார் சிவம் அவர்களை பார்க்கிறார் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அந்த பார்வையில் இருக்கிறது.

சிவம் நான்கு பேரை தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வருகிறார் அதில் ஒருவர் தன் காதலிக்கு கடலை போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார்.

இதனால் சிவம் அவர்கள் வீட்டு முன்னால் கல் எரிந்து, விட்டு தீப்பந்தம் கொளுத்தி அந்த டி.வி.எஸ் வண்டியை எரித்து விடுகிறார்கள்.

அதன் பிறகு சிவம் ஐயா, அந்த நான்கு பேரையும் விரட்டி விடுகிறார்.

அந்த நால்வரும் மன்னிப்பு கேட்பதற்காக அவரிடம் மீண்டும் வரும் போது அவர் கிணற்றில் இறந்து கிடக்கிறார்.

யார் அவரை கொலை செய்தது? சிவம் அய்யா யார்? என்ன நடந்தது?.
அவருடைய பிளாஷ்பேக் என்ன?
என்பதை அருமையாக சொல்லி இருக்கிறது இந்த படம்.

இயக்குநர் ராஜ் சிவராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்

ஈழத்து மக்களின் வலியை, வேதனையை அவர் கண்களில் சிவம் அய்யா, மூலம் அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

1970 இல் நடக்கும் அந்த பிளஷ்பேக் காட்சி அற்புதமாக இருக்கிறது கவித்துவமாக இருக்கிறது
தன் காதலி மேற்படிப்புக்காக கொழும்பு செல்கிறார் என்றவுடன் காதலன் குமார் ,
வேண்டாம் என்கிறார் அந்த காட்சிகளில் காதல் வலியை அற்புதமாக கடத்தி இருக்கிறார் .

ரவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஆவணங்களை பாதுகாப்பது அவசியம் என்ற காட்சியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

யாழ் நூலகம் எரந்து போனது உலகத் தமிழர்களுக்கு எவ்வளவு வேதனையான விஷயம் என்பதை புரிய வைத்திருக்கிறார்.

போகிற போக்கில் திலீபன் நினைவிடத்தை காட்டி நெஞ்சை பதறவைக்கிறார்.

நான்கு நண்பர்கள் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது.

பஞ்சமி அன்று ஒரு வீட்டில் கொலை நடந்து விட்டால் அவருக்கு வேண்டிய வர்கள்,
வேண்டாதவர்கள் வீட்டில் முடியை பிடுங்கி வந்து மண்ணில் போட்டு புதைக்க வேண்டும் என்ற ஒரு காமெடியான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.

ஈழத்து மண்ணில் இந்த படம் வெளியாக வேண்டும் என்று காட்சிகளை கவனமாக சொல்லி இருக்கிறார் அதில் அரசியலும் பேசி இருக்கிறார்.

இயக்குனர் சென்னையில் ஒரு முழு நீள திரைப்படத்தை பிரபல நடிகர்களை வைத்து இயக்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவராக இருக்கிறார்.

நல்ல கதை, நல்ல ட்விஸ்ட் ,நல்ல காமெடி ,நல்ல காதல் இப்படி எல்லாமே கலந்த ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

*இந்த படத்தில் கதாநாயகனாக சிவம் அய்யா வாக நடித்திருக்கும் தமிழருவி சிவகுமார்
அற்புதமாக நடித்திருக்கிறார்

தன் பார்வையாலே சில காட்சிகளில் நமக்கு ஈழத்து மக்களின் வலியை வேதனையை சொல்லி மனதில் இடம் பிடிக்கிறார்

ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு பின்னால் என்ன நடந்தது வரும் தலைமுறைகள் தெரிந்துகொள்ள அவசியமான அந்த ஆவணம் காப்பாற்றப்பட அவர் படம் முழுவதும் போராடுகிறார் அந்த போராட்டத்தில் வெற்றி அடைகிறார் புகழ் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் அவர் லட்சியத்திற்கு வெற்றி கிடைக்கிறது.

மற்றும் ஏழுமலைப்பிள்ளை மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், நஜாத்.கே, எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர்சினி, சபேசன், ஆர்.கே.கஜா உட்பட பலர் டித்துள்ளனர்
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

‘தீப்பந்தம்’. இப்படத்தின் கதையை பூவன் மதீசன் எழுதியிருக்கிறார். நீரோட்டமான தெளிவான கதை, திரைக்கதை ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகள் கவிதையாக இருக்கிறது ஈழத்துப் படம் என்றாலே போர் நடக்கும் காட்சிகள் தான் என்ற நிலை மாறி, இன்று 2025 இல் ஈழம் எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள்.

ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார்.
பாடல்களை வேலணையூர் சுரேஷ், கே.எஸ்.சாந்தகுமார், பூவன் மதீசன், அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை அருண் யோகதாசனும், கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும் கையாண்டுள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்கள் கொண்டாடுவார்கள் விரசமில்லாத
படமாக, வந்திருக்கிறது
அம்லுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ப்ளக்போர்ட் இன்டர்நேசனல் நிறுவனம் வழங்குகிறது. மே 31 ஆம் தேதி இலங்கை முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தமிழ் நாட்டில்
இப்படம் மாபெரும் வெற்றியடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🙏🌷

ஐம்பதுகளில் பிறந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை மையமாக கொண்டு இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. அவர் வாழ்க்கை வழியாக தமிழர் உரிமைப் போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியனவற்றையும் அதற்கான மூல காரணங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் திரைக்கதை அமைத்து, ஓர் உணர்வுப்பூர்வமான வாழ்வை ஆவணப்படுத்தியுளளனர்.

அதை திரைப்படங்களுக்கே உரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறார்கள்

இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நெருக்கம் கொடுக்கும் படைப்பாக இருக்கும். பாருங்கள்.

கடைப்படைப்பின் மூலம் புதியதொரு போராட்ட வடிவமாக வந்துள்ள இந்த படம் நிச்சயம் கொண்டாடுவார்கள் ரசிப்பார்கள்.

இந்தப் படத்தை உருவாக்கி தயாரித்து உலக மக்களிடம் கொண்டு சென்றுள்ள நமது தமிழ் ஈழத்து சொந்தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் 🙏🌷