கதை களம்
ஒடிசா வில் உள்ள மல்ஹங்கரி, மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் பழங்குடி மக்களான முனீஸ் காந்த், மற்றும் அருள்தாஸ், யாமினி சந்தர் ,இவர்களுடன் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களை அடிமைகளாக வைத்திருக்கும் ரிஷி ரித்விக், மற்றும் கருடன் ராம், இவர்கள் அந்த காட்டில் உள்ள வனபத்திரகாளியம்மனை வணங்க கூட விடாமல் அடித்து துன்புறுத்துகிறார்கள்
அப்படியே கதை தமிழ் நாட்டில் உள்ள பொள்ளாச்சியில் உள்ள சேத்துமடை ,எனும் கிராமத்தில் நாயகன் வேலு அவரது அப்பா, தங்கை, வளர்ப்பு யானை மணியன் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்த ஊரில் உள்ள குபேரன் இடம் கடன் வாங்கி கடன் பிரச்னைகள் கைமீறும் வேளையில் உடன்பிறப்பாக நினைத்து வளர்க்கப்படும் யானையை வைத்து சம்பாரிக்க நினைக்கிறார்கள். அதனால் யானைக்கு குபேரன் மதம் பிடிக்க வைத்து மணியனை, வேலுவிடமிருந்து பிரிக்கிறார்.
அதன் பிறகு வீட்டில் வளர்க்கப்பட்ட மணியன் , யானை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு மீட்க முடியாமல் தடுமாறுகிறார்கள். வேலுவும், அவன் அப்பா வெள்ளைச்சாமியும் ,
திடீரென வனஅதிகாரி முகாமில் இருந்த மணியன் காணாமல் போய்விட்டார் என்று சொல்ல அதை தேடி பயணப்படுகிறார் வேலு, காணாமல் போன யானையை வேலு எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படைத்தலைவனின் கதைக்களம்!
சண்முக பாண்டியன்
i: இப்படத்தில் சண்முக பாண்டியன்(வேலு) என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில், பறந்து வந்து அடிப்பதும், காலால் பன்ச் கொடுப்பதும் மாஸ். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பதை சண்முக பாண்டியன் நிரூபித்துவிட்டார்.
‘பொட்டு வெச்ச தங்கக்குடம்’ பாட்டில் இவரின் ஆக்ஷன் சீக்குவன்ஸ் அதிரடி.யாக அசத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பிய சண்முக பாண்டியன் பல காட்சிகளில் ஜொலிக்கிறார்.
சோகம் நன்றாக வருகிறது. சண்டை காட்சிகள் நன்றாக வருகிறது .மணியின் மீது இவர் காட்டும் பாசம் உருக வைக்கிறது.
வனப்பகுதியில், காட்டுக்குள் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். வெல்டன்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா
இவர் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார் மணியனை பிரிந்து பிறகு இவர் கண்களில் ஒரு சோகம், அதிகாரியிடம் கெஞ்சுவது ,மகனிடம் பணிந்து போக சொல்வது, என்று நன்றாகவே நடித்த்திருக்கிறார்
மற்றும் நடிகர் & நடிகைகள்
முனிஸ்காந்த், அருள் தாஸ் ,
பழங்குடி மக்களாக,
யாமினி சந்தர்
பொன்னி என்னும் கதாபாத்திரத்தில்
வந்து போகிறார்
கருடன் ராம்,(திலகன்) என்ற கதாபாத்திரத்தில் வனபத்ரகாளிக்கு ஆடு மாடு யானைகளை பலி கொடுக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். சண்டை காட்சிகளில் சண்முக பாண்டியன் உடன் அனல் தெறிக்க, மோதுகிறார்.
அவர் அறிமுகம் ஆகும் காட்சிகள் மிரட்டல் ஆக இருக்கிறது.
ரிஷி ரித்விக்,(கோப்ரா)
இன்று வேடத்தில் தன்னை எதிர்ப்பவர்களை மரத்தின் தூக்கு கயிற்றால் ஏற்றும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் சண்முக பாண்டியனுக்கு சரியான வில்லனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஏ. வெங்கடேஷ், (வெட்னரி டாக்டர்)
குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறார்
யூகி சேது(சரவணன்)
என்ற ரமணா தொடர்ச்சி தொடர்ச்சியான போலீஸ் வேடத்தில் சண்முக பாண்டியனுக்கு உதவி செய்கிறார் கேப்டனை அறிமுகப்படுத்தும் இவரது பாணியே தனி,
மற்றும் ஸ்ரீஜித் ரவி, லோகு NPKS, ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
இயக்குனர்
நல்ல கதைக்களத்தை இயக்குனர் தேர்வு செய்து இருக்கிறார்
நரபலி என்ற விஷயத்தை கையில் எடுத்து சமூக விழிப்புணர்வுடன் படம் இயக்கி இருக்கிறார்.
எந்த காம்பரமைஸ் செய்யாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை அமைத்திருக்கிறார்
நாயகனுக்கு இரண்டு பாட்டு, ஒரு ஓபனிங் சாங், என்று இல்லாமல் படம் ஒரே நேர்கோட்டில் செல்வதற்கு இயக்குனரின் புத்திசாலித்தனம் தான் காரணம் செண்டிமெண்ட் மிகவும் ஓவராக இருந்தாலும் படம் சலிப்படைய வைக்க வில்லை. வி.எஃப்.எக்ஸ், அருமையான இருக்கிறது. சண்டைக் காட்சிகள் அருமை. படத்தின் பாசிடிவ் கேப்டன் விஜயகாந்த் தான். அவரை இரண்டு நிமிடம் ஏஐ மூலம் கேமியோ காட்சியில்
காட்டப்பட்டு கேப்டன் கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குனர்.
சமுதாய விழிப்புணர்வு மிக்க ஒரு கதையை தேர்வு செய்து அதற்கான நடிகை, நடிகர் களை தேர்வு செய்து படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்
இசை ஞானி இளையராஜா
படத்தின் மிகப்பெரிய பாலம் இசைஞானி இளையராஜா, இரண்டு பாடல்கள் இரண்டும் தேனாக இருக்கிறது
பின்னணி ,இசை, மிரட்டல் ஆக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளுக்கு அருமையாக பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.
உன் முகத்தை என்ற பாடல், மற்றும் உசிரே ,என்ற பாடலும் ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு
சதீஷ் குமார்
சண்முக பாண்டியன்.
சண்டைக் காட்சிகளில், ஐந்து யானைகளுக்கு மத்தியில் சண்டை போடும் போது
ஒளிப்பதிவாளர் அபாரமாக படம் பிடித்திருக்கிறார்.
மணியன் என்ற யானை செய்யும் குறும்பு தனம்
. மழை பெய்யும் காட்சி ,
, அந்த பிரமாண்டமான பசுமையான பள்ளத்தாக்கு, மலைகள் ,காடுகள் எல்லாம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது
ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பாளர்கள்
ஜெகநாதன் பரமசிவம்
இணை தயாரிப்பாளர்
ராஜ் காளிதாஸ்
திரைக்கதை மற்றும் வசனங்களை
பார்த்திபன் தேசிங்கு எழுதியிருக்கிறார் வசனம் நச்சென்று இருக்கிறது திரைக்கதை சீராக இருக்கிறது.
படத்தொகுப்பாளர்
எஸ். பி. அஹமது
சீரான படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது.
ஆர்ட் டைரக்டர்களாக ராஜி, மற்றும் சண்முகம் பணிபுரிந்து இருக்கிறார்கள்
வன பத்திரகாளி அம்மன் சிலை, மற்றும் காவல் நிலையம் ,குபேரனின் வீடு, என எல்லா இடங்களிலும் இவர்கள் கைவண்ணம் நன்றாக தெரிகிறது.
மகேஷ் மேத்துவின்,
சண்டை பயிற்சி கேப்டனை நினைவுபடுத்துகிறது. சண்முக பாண்டியன் கேப்டன் போலவே ஸ்டெப் வைத்து சண்டை போடுகிறார் சண்டை காட்சிகள் மிரட்டல்.
அனன்யா பட் ,
உன் முகத்தை பார்க்காமல் என்ற பாடல் பாடியுள்ளார் பாடல் உருக வைக்கிறது.
லோகநாதன் காஸ்ட்யூம் வடிவமைப்பு செய்திருக்கிறார். பழங்குடி மக்களுக்கு எப்படி உடை பொருத்தமாக இருக்குமோ, அது போலவும், வில்லன்களுக்கு பொருத்தமான உடையும், சண்முக பாண்டியனுக்கு கச்சிதமான ஆடை வடிவமைப்பும், கஸ்தூரிராஜாவுக்கு கிராமத்து விவசாயியாக மண்பாண்டம் செய்பவராக நன்றாக ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார் நாயகி பழங்குடி பெண்ணாக படம் முழுக்க ஜாக்கெட் போடாமல் வருகிறார்
ஆடை வடிவமைப்பாளர் பெஸ்ட்
மற்றும் படத்திற்கு உழைத்த தயாரிப்பு நிர்வாகி, டி ஐ, மற்றும் கலர் கரெக்ஷன் செய்தவர்கள்,
உதவி இயக்குனர்கள்,
போன்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் அண்ட் சிவா
படத்தை நல்ல முறையில் பப்ளிசிட்டி செய்திருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இயக்குனர் நரபலி என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்து படத்திற்கான கதைக்களம் அமைத்திருக்கிறார். நரபலி புதிதான விஷயம் இல்லை என்றாலும். அதை சொன்ன விதம் நேர்த்தியாக இருக்கிறது. ரசிக்க வைக்கிறது. கேப்டனை காட்டிய விதம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் படைத்தலைவன் வெற்றி வாகை சூடுவான்💐
