பிரித்திவிராஜ் ராமலிங்கம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வரும் சாந்த குமார், வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ததால் முதலாளி அவர் மாப்பிள்ளையான மானேஜர், குமாரை அடித்து விடுகிறார்.
அதன் பிறகு குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் முறை வாசல் செய்ய எதற்கு என்னிடம் பணம் கேட்கிறீர்கள் என்று தகராறு செய்கிறார்.
தன் பழைய கல்லூரி காதலியான கிருஷ்ணவேணியை தேடி சென்று நடு இரவில் கலாட்டா செய்கிறார் ஆடுகளம் முருகதாஸ் மைனா இருவரும் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்கள்.
போலீஸ் நிலையத்தில் அவரை வைத்து ,புரட்டி போட்டு அடிக்கிறார் காவல் அதிகாரி. அதன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் காவல் நிலையத்தில் வாக்கி டாக்கியும், போலீஸ் அதிகாரியின் சட்டையை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார் சாந்தகுமார் .
ஆட்டோ டிரைவரான காளி வெங்கட் சந்திக்கிறார் இருவரும் நண்பர் ஆகிறார்கள் பிறகு விரோதி ஆகிறார்கள்
குழந்தையுடன் செல்லும் தம்பதியர்களுக்கு அறிவுரை சொல் கிறார்.பிறகு தற்கொலைக்கு முயல்கிறார், வேலா ராம மூர்த்தியை சந்தித்த போது குடியிலிருந்து மீள்வதற்கான அந்த காரணம் அவருக்கு தெரிகிறது
இப்படி தன் மேனேஜர் வீடு தேடிப் போகும் ஒரு இரவில், சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் தான் இப்படம். ரசிக்கும் வகையில் முழுக்க காமெடி கலந்து, உணர்வுப்பூர்வமான, சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் தந்திருக்கிறார் இயக்குனர்
போதையில் இருந்துவெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் ‘குட் டே,
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் சாந்தகுமார் என்ற வேடத்தில் ஒரு குடிகாரனின் நடிப்பை நன்றாக செய்திருக்கிறார்
ஒரு இரவில் நடக்கும் கதை அதில் எத்தனை மனிதர்களை அவர் சந்திக்கிறார்
அதனால் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றம் மேனேஜர் அடித்ததால் அவமானம் தாங்க முடியாமல் அம்மாவுக்கும் மனைவிக்கும் பணம் அனுப்பிவிட்டு
வீட்டு உரிமையாளரிடம் பிரச்சனை செய்து போலீசில் சிக்கி இப்படி எல்லா உணர்வுகளையும் இயல்பான நடிப்பின் மூலம் அருமையாக வழங்கி இருக்கிறார்
தற்கொலை செய்து கொள்ள நினைப்பது, காளி வெங்கட் ,உடன்
குடித்துவிட்டு கலாட்டா செய்வது திருநங்கை ஜீவாவுக்கு ஐ லவ் யூ சொல்வது, மைனா வீட்டுக்குள் சென்று கலாட்டா செய்வது, மற்றும் கிளைமாக்ஸ் ல் குழந்தையை காப்பாற்றுவதும், என தன் இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் படம் முழுக்க ஒரு குடிகாரனோடு நாமும் பயணம் செய்தது போல் இருந்தது அவர் நடிப்பு !நடித்தது போல் இல்லை அவ்வளவு தத்துவமான நடிப்பு வெல்டன் இராமலிங்கம் சார்
ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்
காவல்துறை அதிகாரியாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் 24 வருட சர்வீஸ் சேவையில் இதுவரை யாரிடம் தொப்பி கூட கழட்டலா ஆணால் சட்டையை கழட்டி விட்டு அலைகிறேன் என்று சொல்லும் வசனம், மேலதிகாரியிடம் திட்டு, குழந்தை காணவில்லை என்றால் பதட்டம், குற்றவாளி தப்பிவிட்டான் என்று பதட்டம், இதற்கிடையில் சாந்தகுமார் செய்யும் லூட்டி இதற்கெல்லாம் சரியான தேர்வு விஜய் முருகன்
திரு நங்கை ஜீவா
ஒருபொறுப் புள்ள போலீஸ் அதிகாரியாக, நாயகனுக்கு உதவும் இடத்தில் நம் மனதில் இடம் பிடிக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சாந்தகுமார் சொல்லும் சொல்லுக்கு ஒரு அர்த்தம் உள்ளது என்று அந்த குழந்தையை தேடும் பொழுது இவர் நடிப்பு வெல்டன்
காளி வெங்கட்
முதலில் பணிவாக நாயகனை ஆட்டோவில் இருந்து இறங்கச் சொல்லி கேட்பதும் ,அவர் போலீஸ் என்று நினைத்துக் கொண்டு பம்முவது பிறகு
நாயகனை அடித்த மேனேஜரை
தேடிச் செல்ல இருவரும் குடித்துவிட்டு ஆட்டோவில் பறப்பது மேனேஜரை தேடிச் சென்று சார் வந்திருக்கிறார் என்று அலப்பறை செய்வதும், என காளி வெங்கட் குடிகாரன்
நடிப்பில் பட்டையை கலக்கியிருக்கிறார் நாயகனும் அவரும் சேர்ந்து செய்யும் லூட்டி ரசிக்க வைக்கிறது
மைனா & ஆடுகளம் முருகதாஸ்
நாயகனின் கல்லூரி தோழியாக மைனா, வரும் காட்சிகள் காவல் நிலையத்தில் சிரிக்க வைக்கிறது. ரசிக்க வைக்கிறது அவரது கணவர் ஆடுகளம் முருகதாஸ் மைணா மீது சந்தேகப்பட, சாந்தகுமாரை ஏன்டா இப்படி தொல்லை பண்றீங்க என்று சீறி கொண்டு வரும் காட்சிகளில் மைனா நடிப்பு நன்றாக இருக்கிறது ஆடுகளம் முருகதாஸ் சிறப்பாக செய்திருக்கிறார்
வேலா ராம மூர்த்தி
கதையின் முக்கிய திருப்பமாக பிணங்களை எரிக்கும் வெட்டியானாக, கடைசி காட்சியில் வந்து நாயகனின் மனதை மாற்றுகிறார் தன் வாழ்க்கையில் குடி எப்படி விளையாடியது
தன் மனைவியின் கிட்னி தான் தன் உயிரை காப்பாற்றியது என ஏழு வருடமாக மது அருந்துவதில்லை என்று சொல்லும் அந்த காட்சி குடிகாரர்களுக்கு
அற்புதமான காட்சி அற்புதமாக நடித்திருக்கிறார்
: இயக்குனர் அரவிந்தன்
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் போதை பிரச்சினையை ஒரு தனி மனிதன் படும் துன்பத்தை கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்
படத்தின் ஒவ்வொரு காட்சியும், குடிகாரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே இயல்பாக இயக்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சி மனதை உருக்கி விடுகிறது.
கதை எழுதி&உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் பூர்ணா ஜே.எஸ் மைக்கேல்
நல்ல கதை, நன்றாக வடிவமைத்திருக்கிறார்
ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதை விட்டு நிரந்தரமாக இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.
ஆடை வடிவமைப்பு ரங்கசாமி எல்லோருக்கும் கச்சிதமான உடைகளை தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசை இரண்டு பாடல்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது பின்னணி
இசை சூப்பர்
சங்கர் ஆர்ட் டைரக்டர் ஆக அருமையாக அரங்கம் அமைத்து இருக்கிறார் .
பாடல்கள் கார்த்திக் நேத்தா
ஒளிப்பதிவாளர் மற்றும் படத்தொகுப்பு
மதன் குணதேவ்,
சிறப்பாக பணி புரிந்திருக்கிறார் இரவு நேர காட்சிகளை அழகாக படம் பிடித்து படத்தை தொகுத்து இருக்கிறார்
*Executive Producer: Kovai V.Vijaya Kumar
Production Controller: Dhana Sekar*
மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் & சிவா
( Aim)
மொத்தத்தில் இந்த குட் டே’
குடியை மறந்தவர்களுக்கு,
என்றுமே குட்டே’ தான்
என்பதை சமூக சீர்திருத்த படமாக
வந்திருக்கிறது.
படத்தை வாங்கி வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் க்கும் 🙏🌷வாழ்த்துக்கள்
