கதை களம்
திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பது என படம் ஆரம்பித்து, ஒன்னே முக்கால் அடிகளை கொண்ட செய்யுள்களை எழுதி, அதை புத்தமாக தொகுக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
அதோடு அரசர் குமணன் சந்தித்து ஆசி வழங்குகிறார்
அவரது காதல் மனைவி வாசுகி. அவர் எழுதிய சில செய்யுள்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு எடுத்துச் சென்று அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக அவரது செய்யுள்கள் இல்லாததால் அதை மதுரை தமிழ்ச் சங்கம் நிராகரித்து விடுகிறது.
இந்நிலையில் குமணன் தம்பி பேராசைப்பட்டு குமணனை நாடு கடத்துகிறார் அவர் பதவி ஏற்ற பிறகு மக்களுக்கு வரிச்சுமை ஏற்றி வதைக்க தனது பணியை திருவள்ளுவர் தொடர்வதோடு, தனது படைப்பு தமிழ்ச் சங்கத்திற்கானது இல்லை, உலக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரங்களுக்கு மேலான செய்யுள்களை எழுதிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, சிறு ராஜ்ஜியங்களில் நடக்கும் சூழ்ச்சிகளால் நல்லாட்சி புரியும் மன்னர்கள் வீழ்த்தப்பட்டு, மக்களுக்கு இன்னல்களை கொடுப்பவர்கள் அரசர்களாக பதவி ஏற்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால், மக்களுக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க வேண்டும், என்று சிலர் விரும்புவதோடு, இது பற்றி திருவள்ளுவரிடமும் பேசுகிறார்கள். போரையும், உயிர் பலிகளையும் விரும்பாத திருவள்ளுவர் மக்களின் நலனுக்காக போர் மூலம் கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சி தருபவர்களை அரியணையில் அமர வைப்பதற்கான பணிகளிலும் ஈடுபடுகிறார்.
அவரது முயற்சிக்கு பகுதி என்ற தளபதி உதவியாக இருக்கிறார்
தன் காதல் மனைவியை பிரிந்து ஒரு திங்கள் கொங்குநாடு பயணப்படுகிறார் அங்கு பெரும் சாத்தனார் என்ற புலவரைசந்திக்கிறார். நடுநாட்டன் அரசவையில் சென்று மன்னன் நன்னனை சந்திக்கிறார். அந்த நாட்டு மீது குமணன் தம்பி இளங்குமணன்ப படை எடுத்து போர் தொடுக்க அதை திரு வள்ளுவர் தன் தளபதி உடன் எப்படி தடுத்தார் என்பதே கதை களம்
நடிகர் நடிகைகள்
கலைச்சோழன் – திருவள்ளுவராக வாழ்ந்து இருக்கிறார் அன்பு மனைவியிடம் காமத்துப்பால் பற்றி பேசுவதும் வாழ்க்கையில் ஒவ்வொரு அடிப்படைக்கும் ஒவ்வொரு குரலில் சொல்வதும் என அவர் சிரிப்பும் ஒரு நடிப்பும் இயல்பாக இருந்தது
தனலட்சுமி – வாசுகி
தமிழ் சினிமாவுக்கு அழகான உறவு வாசுதியாக புன்சிரிப்போடு நம்மை கவருகிறார்
வள்ளுவருக்கு ஏற்ற வாசுகியாக அருமையான நடிப்பை தந்திருக்கிறார் தனலட்சுமி.
குணாபாபு – பரிதி
என்ற வேளத்தில் குமணன் தளபதியாக வந்து அந்த நாட்டுக்காக உயிரை கொடுக்கும் தியாகமான நடிப்பு காதலுடன் பேசும் வார்த்தைகள் கண்ணியம் வீரம் கலந்த நடிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்.
பாடினி குமார் – பவளக்கொடி
என்ற வேடத்தில் அழகாக இருக்கிறார் பரிதியுடன் அவர் காதல் செய்யும் காட்சிகள் துடுக்காக பேசும் பேச்சுகள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்
மற்றும்
சுகன்யா – மாட்டத்தி
என்ற வேடத்தில்
சந்துரு – சங்கு மாறன் என்ற கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்கள்
ஓ.ஏ.கே.சுந்தர் – பாண்டிய மன்னன்
கம்பீரமாக வந்து போகிறார் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது
சுப்ரமணிய சிவா – நக்கீரர் காட்சி தந்துள்ளார்
கொட்டாச்சி – புலவர் பெருந்தலைச்சாத்தனார்.
வேடத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்
மற்றும்
அரவிந்த் ஆண்டவர் – குமணன் அருவி
ஆகவும்
ஆனந்தன் – மாடத்தி
யாகவும் நடித்திருக்கிறார்கள்
தந்தை இந்துமதி – மாடத்தி தாய்
கார்த்தி – நன்னன்
யாசர் – பரிதியின் தோழன்
ஹரிதா ஸ்ரீ – பவளக்கொடியின் தோழி )
என எல்லோருடைய கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இதில் எடுத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இசை மற்றும் பாடல்கள் – இசைஞானி இளையராஜா. படத்தின் பலமே இவர்தான்.
பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது இரண்டு பாடல்களை முத்து முத்தாக கொடுத்திருக்கிறார் இசைஞானி இசைஞானி தான் தி கிரேட்
ஒளிப்பதிவாளராக- எட்வின் பணி புரிந்து இருக்கிறார் பட்ஜெட் ஏற்ற ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது இயற்கை காட்சிகளை காட்டும் போதும் அறிவியல் காட்டும் போதும் நன்றாகவே உழைத்திருக்கிறார்
ஆடைவடிவமைப்பாளராக- சுரேஷ் குமார்
பணிபுரிந்துள்ளார் வாசுகி வள்ளுவருக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பு பாண்டிய மன்னனாக வரும் நல்ல வடிவமைப்பு பவள பிடிக்கும் ஆடை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது
இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார்.
வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.
தயாரிப்பு – ரமணா கம்யூனிகேஷன்ஸ்
தயாரிப்பு நிர்வாகம் – S. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
மக்கள் இடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் வாழ்த்துக்கள்
கதை, திரைக்கதை, வசனம் -எழுதிஇருக்கிறார் செம்பூர்.கே.ஜெயராஜ், ஒரு காவியத்தை அப்படியே கண் முன் வந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் எவ்வளவு சிரமப்பட்டு ஆதாரங்களை தேடி இருக்கிறார் என்பது புரிகிறது.
இயக்கம் – A.J.பாலகிருஷ்ணன்.
காமராஜர் மற்றும் தேசத்தந்தை காந்தி அவர்களைப் பற்றி எல்லாம் படம் எடுத்துவிட்டு இப்போது அய்யன் வள்ளுவரைப் பற்றி படமாக எடுத்திருக்கிறார் அவரது இந்த பணி பாராட்டுக்குரியது. வெட்டு, குத்து, என்று படம் எடுத்து இளைஞர்களை சீரழிக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு காவியமான படத்தை கொடுத்ததற்காக அவரை பாராட்டலாம்
வாழ்த்துக்கள் சார்
முல்லை வாசம் -என்றபாடலை பாடியவர் – ரஞ்சனி
அழகான குரல் வளம் இசைஞானி இசையில் இவரது குரல் ரசிக்க வைக்கிறது.
கொத்து கொத்து – பாடியவர் சஞ்சனா
பாடி இருக்கிறார் இந்த பாடலும் ரசிக்க வைக்கிறது
மொத்தத்தில் இந்த திருக்குறள் திரைப்படம் கொண்டாடப்பட வேண்டிய படம் தமிழர்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய படம் இளைஞர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் போட்டு காட்டி தமிழின் பெருமையை அய்யன் வள்ளுவன் பெருமையை இன்னும் உரக்க சொல்ல வேண்டிய படம் தமிழக அரசு இந்த படத்துக்கு மானியம் கொடுத்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நமது ஆசை🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
