ஃபீனிக்ஸ் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/5

இயக்குனர் அனல் அரசு “எழுதி இயக்கியுள்ள ஃபீனிக்ஸ் திரைப்படத்தை ஏ.கே .பிரேவ்மேன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் ராஜலட்சுமி அன்ல் அரசு தயாரித்துள்ளார். ஒரு வெற்றி படமாக அமைந்தது என்றே சொல்லலாம் படம் முழுக்க பர பரபரப்பாக போகிறது வாழ்த்துக்கள்

இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் சூர்யா விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார் , தேவதர்ஷினி ஜே. விக்னேஷ், மற்றும் அபி நட்சத்திரா, வர்ஷா, சம்பத் ராஜ் , முத்துக்குமார், திலீபன் , அஜய் கோஷ் , ஹரிஷ் உத்தமன் , மூணார் ரமேஷ் , நவீன், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ் , ஸ்ரீஜித் ரவி , ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

கதை களம்

வடசென்னையில் வாழும் கர்ணா,சூர்யா பாசமான அண்ணன் தம்பி கர்ணனை காதலிக்கும், கலை, இவர்கள் வாழ்க்கையில் வில்லனாக வருகிறார் எம் எல் ஏ கரிகாலன், அந்த ஏரியாவில் நடக்கும் குத்து சன்டை போட்டியில்,தன் மகன் தான் வெற்றி பெற வேண்டும் என்று சுய நலனுக்காக சிந்திக்க திறமை வாய்ந்த கர்ணன் வெற்றி பெற கரிகாலன் மகன் குற்றுயிராக,
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வர எம் எல் ஏ மனைவி மாயா தவறான வழியில் கர்ணனை கொலை செய்ய சொல்ல..

அதன் பிறகு என்ன நடந்தது?
சூர்யா தன் அண்ணனுக்காக செய்த சம்பவம் என்ன?

சூர்யாவை சிறையில் தீர்த்துக் கட்ட நினைத்த எம் எல் ஏ கும்பலை சூர்யா என்ன செய்தார் என்பதை செம பாஸ்ட் டாக, விறுவிறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குனர்

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம ஆக்சன் காட்சிகளில் அசத்தலாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் நமக்குள் ஏற்படுத்தி திரைக்கதையில் செம விறுவிறுப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் சார்!

சூர்யா விஜய் சேதுபதி

சூர்யா விஜய் சேதுபதி, இதற்கு முன் நானும் ரவுடி தான் மற்றும் சிந்துபாத் போன்ற படங்களில் குழந்தை நடிகராக தோன்றினார்,

இந்த படத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக அதிகம் அலட்டிக்கொள்ளாதஆக்ஷன் கலந்த காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு ஸ்டன்ட் இயக்குனரின் ஸ்டண்ட் இயக்கத்தில் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார் .

அவருக்கேற்ற கதையை தேர்வு செய்து நடித்ததில் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்

அண்ணனுக்காக வெகுண்டு எழுந்து கையில் ஆயுதம் எடுக்கும் போது ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்

படம் முழுக்க ஒரு வெறித்த பார்வை, எது நடந்தாலும் பார்த்து விடலாம் என்ற தைரியம்,

கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனமான,

நாங்க ஜெயிக்கறது தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் ஜெயிப்பேண்டா,
என்று வில்லனை போட்டு தள்ளும் போது பலத்த கைதட்டல் வெல்டன் சூர்யா உங்களுக்கு எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் வாழ்த்துக்கள்!

அபி நட்சத்திரா

இப்படத்தில் அயலி படத்தில் நடித்த அபினக்ஷத்ரா, கலை என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் காதலன் கருணா, மீது உயிரே வைத்திருக்கும் வடசென்னை பெண்ணாக அழகாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு நடந்த சம்பவம் பரிதாபமாக இருக்கிறது

மற்றும் வர்ஷா சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

விக்னேஷ்

காக்கா முட்டை படத்தில் நடித்த ஜே. விக்னேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கர்ணா ,என்ற கதாபாத்திரத்தில் குத்துச்சண்டை வீரராகவும், சூர்யாவின் அண்ணனாகவும் நன்றாக நடித்திருக்கிறார் சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, கொலை செய்யப்படும் போது பரிதாபத்தை பெற்று விடுகிறார்

அந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது இடைவேளைக்கு பின்னால் வரும் அந்த கதாபாத்திரம் நெஞ்சில் நிற்கும் வடிவமைப்பு ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்

வரலட்சுமி சரத்குமார்

வரலக்ஷ்மி சரத்குமார் , வடசென்னை எம்எல்ஏ கரிகாலன், மனைவியாக மாயா, என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டி இருக்கிறார். கடைசி வரை களத்தில் இறங்குவார் என்று பார்த்தால் மிரட்டும் தோணியிலேயே கதிகலங்க வைத்து விடுகிறார். சரியான தேர்வு சரியான மிரட்டல்

சம்பத் ராஜ்

சம்பத் ராஜ் , இந்தப் படத்தில் எம் .எல் .ஏ கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் வில்லனாக மக்களிடம் போலி முகமூடி அணிந்து கொண்டு வலம் வரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தன் மகனுக்கு கிடைக்க வேண்டிய கோப்பை விக்னேஷுக்கு கிடைத்துவிட்டது என்று வேட்டியை மடித்துக் கொண்டு வில்லத்தனத்தில் இறங்குகிறார் சூர்யாவால் கொலை செய்யப்படும் போது பரிதாபம்.

தேவ தர்ஷினி

தேவதர்ஷினி இந்த படத்தில் வட சென்னை வாழ் அம்மாவாக, சூர்யா ,விக்னேஷ் மீது பாசத்தை காட்டுவதும் அபி, மீது அன்பைப் பொழிவது சூரியா அடிபட்டு ஹாஸ்பிடல் கிடக்கும்போது பரிதவித்து கதறுவதும் தன் கண் முன்னாலேயே, தன் மகன் எதிரிகளால் வீழ்த்தும் போது அழுவது என்று அன்பான தாயாக மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்

மற்றும் முத்துக்குமார்,

எக்ஸ் எம்எல்ஏவாக சம்பத்துக்கு போட்டியாக வந்து படத்தில் சமபங்கு இடம் பிடித்து நடிப்பிலும் நல்லதொரு இடத்தை பிடித்திருக்கிறார் அவர்களும் காட்சிகளில் அவ்வளவு ரசிக்க வைக்கிறது சம்பத் வெட்டி வீழ்த்தப்படும் பொழுது அவர் நடனமாடும் அந்த ஒரு காட்சி அப்பாஸ் வாங்குகிறார்

திலீபன் ,

இந்த படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக கோச்சாக இருந்து சூர்யாவுக்கும் விக்னேஷுக்கும் பயிற்சி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கடைசிவரை சூர்யாவுக்கு பக்கபலமாக நிற்கிறார் நல்ல கதாபாத்திரம்

அஜய் கோஷ் ,

வரலட்சுமி சரத்குமார் அப்பாவாக சம்பத்தின் மாமனாராக வந்து உருட்டல் ,மிரட்டல் மந்திரியாக சரியான வில்லத்தனத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஹரிஷ் உத்தமன் ,

சூர்யாவின் கொலைக்கான காரணம் என்ன? எம்.எல்.ஏ வை ஏன் அவர் கொலை செய்தார்?
என்பதை கண்டுபிடிக்கும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியாக வந்து கடைசியில் காணாமல் போய்விடுகிறார். இடையிடையே நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.

மூணாறு ரமேஷ் ,

நரித்தனமிக்க காவல்துறை அதிகாரியாக எம்.எல்.ஏ.வின் ஏவல் துறை அதிகாரி வந்து சூர்யாவுக்கு சதிகளை பின்னும் இவரை போன்ற கருப்பு ஆடுகள் இன்னமும் காவல்துறையில் இருக்கிறார்கள். என்பதை ஞாபகப்படுத்துகிறார் நல்ல நடிப்பு

மற்றும்
நவீன், ‘அட்டி’ ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் நந்தா சரவணன், ஆடுகளம், முருகதாஸ் , , முருகதாஸ் ஸ்ரீ முருகதாஸ் NJ, பூவையார் மற்றும் பலர் துணை வேடங்களில் பல இளைஞர்கள்
நடித்துள்ளனர். சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்

இப்படத்தை இயக்குனரே ,

தனது பேனரில் ஏ.கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் மூலம் ராஜலட்சுமி அன்ல் அரசு தயாரித்துள்ளார்.
ஒரு நல்ல படம் தந்ததற்கு வாழ்த்துக்கள்

தொழில்நுட்பக் குழு

ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக சிறப்பான ஒளிப்பதிவு கொடுத்திருக்கிறார் ஜெயிலராகவும் நடித்திருக்கிறார். சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

எடிட்டராக பிரவீன் கே.எல் , கச்சிதமான இரண்டு மணி நேர படத்தைக் கொடுத்து மிகவும் விறுவிறுப்பாக பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார் படத்தொகுப்பு தான் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்

இசையமைப்பாளர்ரசாம் சி.எஸ் ஒரு மாஸ் ஹீரோவுக்கு போட வேண்டிய இசையை பி .ஜி .எம் கொடுத்து மிரட்டி இருக்கிறார் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது அந்த குத்து பாட்டு சும்மா பின்னி இருக்கிறார்.

அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு பணிபுரிந்து இருக்கிறார்

சண்டைக் காட்சிகள் ஆனால் பறக்கிறது சூர்யாவிடம் இருந்து இப்படி ஒரு சண்டை காட்சி எதிர்பார்க்கவில்லை அதற்கு ஆனால் அரசுதான் காரணம் பரபரப்பான விறுவிறுப்பான சண்டை காட்சிகள் ரத்தம் தெறிக்க தெறிக்க படம் பார்ப்பவர்களுக்கு ஒரு எதிரிகளை அடி என்று சொல்லும் அளவுக்கு சூடேற்றி இருக்கிறார் சண்டை பயிற்சியாளர்
அதோடு, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அணல் அரசு, ஆரம்பத்தில் இருந்து படம் ரெக்கை கட்டி பறக்கிறது, ஆரம்பத்தில் ஏற்படுத்திய அந்த டெம்போ குறையாமல்
கடைசி வரை இரண்டு மணி நேரம் பரபரப்பாக கொண்டு சென்றதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் வசனங்கள் சார்ப்பாக இருக்கிறது. திரைக்கதை தெளிவாக இருக்கிறது இடைவேளைக்கு பிறகு வரும் இந்த பிளாஸ்பேக் காட்சிகள் அதுவும் ரசிக்க வைக்கிறது மொத்தத்தில் அனல் அரசு இந்த படத்தின் மூலம் ஒரு மாஸ் ஹீரோவை இயக்கும் வல்லமை பெற்றவராக திகழ்கிறார்
இனி மாஸ் பட ஹீரோக்கள் இவரை இயக்குவதற்கு அழைக்கலாம்.

ஆர்ட் டைரக்டராக மதன் பணி புரிந்திருக்கிறார் அந்த ஜெயில் செட்டும் ,சூர்யாவின் வீடு ,குத்துச்சண்டை அரங்கம், எம் .எல்.ஏ வீடு, என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் பளிச்சென்று இருக்கிறது .

இந்த படத்தின் பாடல்களை விவேகா, மதன் கார்த்தி ,லோகன்,
வித்யா எழுதி இருக்கிறார்கள் பாடல்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

நடனப் பயிற்சியாளர்களாக பாபா பாஸ்கர், ஜானி மாஸ்டர், பணி புரிந்திருக்கிறார்கள் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று வரும் திரும்பும் பொழுது குத்தாட்டம் போட வைக்கும் அந்த பாடல் யார் ?அந்த நடனமாஸ்டர் ,
என்று கேட்கும் அளவுக்கு சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்

காஸ்ட்யூம் டிசைனராக
வாசுகி பாஸ்கரும ,
சத்யா வும்
சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள் கொலை செய்ய வரும் கொலையாளிகள் மற்றும் எம்.எல்.ஏ அவர் மனைவி இப்படி விதவிதமான உடைகள் கச்சிதமாக தேர்வு செய்து அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

காஸ்ட்யூம் ரங்கசாமி , ஒப்பனை பாஷா,

இப்படி அனைவரும் தங்கள் பங்குக்கு இந்த படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர் திரு ரியாஸ் அகமது அவர்கள்,
பாராஸ் ரியாஸ் அஹமது அவர்கள்
படத்தை நல்ல முறையில் கொண்டு போய் மக்களிடம் சேர்த்து இருக்கிறார்கள் பேசப்படும் அளவுக்கு படம் என்று இருக்கிறது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மொத்தத்தில் பீனிக்ஸ் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது சூர்யாவுக்கு முதல் படமே முத்தான படமாக அமைந்திருக்கிறது
இயக்குனர் அனல் அரசுக்கு முதல் படம் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது
இந்தப் படத்திற்காக உழைத்த அனைவரையும் கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது.
இந்த படம் வெற்றி பட்டியலில் 🌷🙏