.ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் திரை விமர்சனம்

ரேட்டிங் 4-7/5

பூமியின் மிகவும் ஆபத்தான இடத்திற்கு, அசல் ஜுராசிக் பார்க்கிற்கான தீவு ஆராய்ச்சி நிலையத்திற்கு, திறமையான செயல்பாட்டாளர்கள் குழுவை ஜோரா பென்னட் அழைத்து செல்கிறார்.. டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளைப் பெறுவதே அவர்களின் நோக்கம்,
அவற்றின் டிஎன்ஏ மனிதகுலத்திற்கு உயிர்காக்கும் நன்மைகளை வழங்க முடியும். மிகவும் ரகசியமான பயணம் என்று போகிறார்கள். அந்த பயணம் மேலும் மேலும் ஆபத்தானதாக மாறுகிறது .

பல வருடங்களாக மறைக்கப்பட்ட ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்குப் பிறகு வருகிறது. அங்கு மீதமுள்ள டைனோசர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அங்கு தன் இனத்தைப் பெருக்கி இருக்கிறது. அந்தச் சூழலில் இருக்கிற மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்துக்கு அதிசயிக்கத்தக்க உயிர்காக்கும் நன்மைகளைக் கொண்டுவரப்போகும் ஒரு மருந்தின் திறவுகோலைக் கொண்டிருக்கின்ற இதை தேடி நடிகர் ஜொனாதன் பெய்லி, தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி, லூமிஸாகவும் நடிகர் ஸ்கார்லெட், ஜோஹன்சன் என திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணர்களும்
ஜோரா பென்னட்டாகவுடன் போகிறார்கள்

.ரூபன் குடும்பம் எதிர்பாராத விதமாக கடல் டைனோசரால் தாக்கப்பட்டு நிலை குலைந்து போகிறார்கள் பிறகு பெய்லி குழுவினரால் காப்பாற்றப்பட்டு மீண்டும் எல்லோரும் பெரிய ஆபத்தை சந்தித்து ரூபன் விசுபெல்லா இவருடன் இளம் ஜோடிகள் நால்வரும்

ஒரு தீவில் சிக்கித் தவிக்கிறார்கள். அங்கு அவர்கள் பல தசாப்தங்களாக உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.
அதன்பிறகு ஆபத்திலிருந்து அவர்கள் தப்பினார்கள்?

டாக்டர் ஹென்றியும்,
பெய்லியும், அவர்கள் குழுவும் அந்த பேராபத்திலிருந்து தப்பினார்களா?
மரபணு சோதனையில் சேகரித்தது காப்பாற்றப்பட்டதா?

என்பதை பிரம்மாண்டமாகவும் ஆச்சரியப்படுத்தக்க வகையிலும் அருமையாக வழங்கி இருக்கிறது இந்த பட குழு!

இந்த கதையில் சீராகத் திரைக்கதை எழுதி படத்தை பிரமிக்க வைத்திருக்கிறார்
டேவிட் கோப்பின்,
அவரின் திரைக்கதை
வியக்க வைக்கிறது .
“மிஷன் ஸ்டோரியாகத் தொடங்கும் இது சில காரணங்களால் சர்வைவல் கதையாக மாறுகிறது. இருந்தாலும் அட்வென்சர் மற்றும் எமோஷனல் ஃபேமிலி கதை என இந்த இரண்டையும் சரியாக டேவிட் கையாண்டிருக்கிறார் கடல், நிலம் மற்றும் காற்று நீர் வீழ்ச்சி
என.
ஒவ்வொரு சூழலிலும் ஒரு பரபரப்பும் எமோஷனும், படம் பார்ப்பவர்கள் விழிகளை வியக்க வைக்கிறது.
பிரம்மாண்டத்தின் உச்சம்

180 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் 5 ஆண்டுகள் கழித்து நடைபெறுவது போலவும் படமாகப்பட்டுள்ளது

இது ஜுராசிக் வோர்ல்டு திரைப்படத் தொடரின் ஐந்தாவது படம்.
டைனோசர்கள் மீண்டும் பூமியில் உலாவரும் கதையைச் சொல்கிறது.

படத்தின் கதை டேவிட் கோப் எழுதியுள்ளார்
மிரட்டலான கதை, திரை, கதையில் பல இடங்களில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருக்கிறார்.

கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார்.
பிரம்மாண்ட மான
நீர்வீழ்ச்சி, ஹென்றி அதில் தொங்கிக்கொண்டு உயிருக்கு அபாயம் ஏற்படும் வகையில் நடித்திருக்கிறார்.
கடலுக்கு அடியில் இருந்து வரும் டைனோசர் கப்பலை தகர்த்தெறிவது,
கிளைமாக்ஸ் காட்சியில் எப்படி இவர்கள் தப்பிக்க போகிறார்கள் என்ற ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி
படத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்.

இசபெல்லா என்ற குழந்தை கிளைமாக்ஸ் காட்சியில் டைனோசர் இடம் இருந்து தப்ப கேட்டை திறக்கும் முயற்சிக்கும் போது அது வருகிறது பிரம்மாண்டமாக, அந்த இடத்தில் இந்த குழந்தை எப்படி தப்பிக்கும் என்ற அபாயகரமான உணர்வை தூண்டி இருக்கிறார்.

டங்கன் என்ற கதாபாத்திரம் அனைவரையும் காப்பாற்ற டைனோசர் இடமிருந்து தப்பி கடலுக்குள் ஓடும் போது அவர் இறந்து விட்டதாக எல்லோரும் சோகமாக செல்ல அவர் வேகமாக இதோ நான் இருக்கிறேன்
என்று ஒளியை ஊட்ட அந்த காட்சி அற்புதமாக இருக்கிறது .

இடைவேளைக்கு பிறகு காட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு காட்சியும், திகில் ஊட்டுகிறது .
அடுத்து என்ன நடக்கும் இவர்கள் தப்பிப்பார்களா? என்ற பயத்தை மூட்டி இருக்கிறார் இயக்குனர்.

குழந்தை இசபெல்லா குட்டி டைனோசர் கையில் வைத்துக்கொண்டு இதை நான் வீட்டில் கொண்டு போய் வளர்க்கிறேன் என்று சொல்வதெல்லாம் கலகலப்பான காட்சிகள்.

நாயகி பெய்லிபணத்துக்காக ஆசைப்பட்டு
டைனோசர்களின் மரபணுக்களை சேகரிப்பதற்காக வந்தாலும் முடிவில் ஹென்றி உடன் சேர்ந்து அதை மக்களுக்காக மக்கள் நலனுக்காக கொடுத்து விடுகிறேன் என்று சொல்லும் காட்சி கைதட்டுகிறார்கள்

ஜுராசிக் வேர்ல்ட் டொமோனியல் 450 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டு பல மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.

இந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபிரீத் திரைப்படம் 180 டாலரில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த படத்திற்கு இணையாக இருக்கிறது.
அந்த படங்களை எல்லாம் விட பல மில்லியன் டாலர்களை வசூல் செய்யும் என்பது உறுதி வெற்றியை நோக்கி பயணம்

ஒளிப்பதிவு வி. எப் எக்ஸ் காட்சிகளும்
படத்திற்கு பிரமாண்டத்தை தந்திருக்கிறது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் வெற்றி பட்டியலில் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளும் என்பது உறுதி

இப்படத்தில் ஜோனதன், பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன்
ஆகியோர் நடிப்பு நன்றாக இருக்கிறது