ஓஹோ எந்தன் பேபி திரை விமர்சனம்

100/சதவீதம் காதல் படமான “ஓஹோ எந்தன் பேபி படத்தை விஷ்ணு விஷாலின் சகோதரர் நாயகனாக நடிக்க” ஓஹோ எந்தன் பேபி”உருவாக்கி இருக்கிறார்கள்.

காதல் செய்தவர், காதலித்து கொண்டு இருப்பவர்கள், காதலிக்க போகிறவர்கள்
எல்லோரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று படமாக்கி இருக்கிறார்கள்..

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
நாயகன் ருத்ரா முதல் படத்திலேயே இளமை துள்ளலான நடிப்பை வழங்கி இருக்கிறார் வெல்டன்

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்பம்
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும்

இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார்
காதல் காமெடி ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் கொஞ்சம் கவர்ச்சி, என்று கலந்து கட்டி படத்தை கொடுத்திருக்கிறார்

வாங்க இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதை களம்

சின்ன வயதில்
அப்பா, அம்மா சண்டை போடுவதால் மனம் உடைந்து போகிறார் நாயகன் அஸ்வின், தன் சித்தப்பா முரளியிடம் என்னை சினிமா தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு போ என்கிறார் ஏனென்றால் அவர்(கருணாகரன் )சினிமா தியேட்டரில் மேனேஜராக இருக்கிறார் .

படம் பார்த்து அஸ்வினுக்கு திரைப்படங்கள் மீது ஈர்ப்பு வருகிறது தனக்கொரு காதலி வேண்டும் என்று தன் சித்தப்பாவிடம் கூறுகிறார் .
அதற்கு நான்கு கண்டிசன் போடுகிறார் அதைக் கேட்ட சித்தப்பாவான முரளி என்கிற கருணாகரன் வியந்து போகிறார்
பள்ளியில் ருத்ரா, ரவீனா என்கிற பெண்ணை பார்க்கிறார் கண்களும் கண்களும் பேசுகிறது ரவீனா இரவு மொட்டை மாடிக்கு வரச் சொல்கிறார் முத்தமிட சொல்கிறார் .

ரவீனா தன்னை காதலிக்கிறார் இன்று ருத்ரா நினைக்கிறார்
ஆனால் ரவீணா கிறிஸ்டோபர் என்கிற காதலனை காதலிக்கும் பெண்மணி இதனால் உடைந்து போகிறார் ருத்ரா.

அடுத்தபடியாக தன் நண்பன் ராஸ்ணா , அஞ்சலி, இருவரும் காதலிக்க அந்த பங்க்ஷனுக்கு
முழு வடிவம் கொடுத்த அஸ்வின் மீது அங்கு வந்த மீராவுக்குஅஸ்வினை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் இருவரும் காதலிக்கிறார்கள்

அதன் பிறகு மீரா தன் காதலன் அஸ்வின் இடம் இருக்கும் திறமையை கண்டறிந்து அவரை படம் இயக்குவதற்கு ஊக்கம் செய்கிறார்

இப்போது விஷ்ணு விஷாலிடம், நாயகன் அஸ்வின், ஒரு கதை சொல்லப் போகிறார் அங்கிருந்துதான் படம் ஆரம்பமாகிறது விஷ்ணு விஷால் இந்த காதலை கேட்டு முதல் பாதி நன்றாக இருக்கிறது இரண்டாம் பாதியில் என்ன செய்யப் போகிறாய்? உன் காதல் நிறைவேறுமா ஆகாதா? என்று கேட்கிறார் அப்போதுதான் கதை சூடு பிடிக்கிறது அதற்கு பின் என்ன நடந்தது அஸ்வின், மீரா, காதல் கைகூடியதா? விஷ்ணு விஷால் அஸ்வினுக்கு பட வாய்ப்பு கொடுத்தாரா? இயக்குனர் மிஸ்கின், அஸ்வின் அடுத்து பண்ண போகும் படத்திற்கு உதவி செய்தாரா?

அஸ்வின் அப்பா, அம்மா கஸ்தூரியும் ஒன்று சேர்ந்தார்களா? மீராவுக்கு இருக்கும் பிரச்சனையை சொத்துக்காக
ஆட்டையை போடும் அவர் மாமாவிடமிருந்து அஸ்வின் காப்பாற்றினாரா? என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.

இயக்குனர்

உணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ண குமார். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.
அஸ்வின்,மீரா
காதல் அழகாக சொல்லி . இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்!
அஸ்வின் ,மீரா,
ராஸ்னா, அஞ்சலி நால்வரும் ஓட்டலில் சாப்பிடும்போது
நடக்கும் காமெடி கலாட்டா
ருத்ரா ,மிதுலா- பால்யா படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘கோவா கலந்த!டெக்னிகல்
டூர் கோவா காட்சிகள் அழகாகவும் அற்புதமாகவும் காட்டி இருக்கிறார் இயக்குனர்

: ருத்ரா

1985களில் இளமையான கமலஹாசனை பார்த்ததை போல ஒரு உணர்வு ஏற்படுகிறது
அழகான முகம் துருதுரு என பார்வை அருமையான ஹேர் ஸ்டைல் எமோஷனல் கலந்து நடிப்பு என முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்குகிறார் ருத்ரா”ஆரம்பக் காட்சியிலேயே
விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்லும் பாணி ரசிக்க வைக்கிறது.
துடிப்பான இளமை அப்பா அம்மா சன்டை, தனக்கொரு காதலி வேண்டும் என்று சித்தப்பாவிடம் சொல்லும் அந்த அபிநயம்
நண்பர்களான ராஸ்னா, அஞ்சலியை சந்திக்கும்போதும், மீராவை சந்தித்தபின் காதல், ரவீணா, சந்தித்த பிறகு ஏக்கம் தன் அப்பா அம்மா இப்படி சண்டை போடுகிறார்கள் என்று இந்த கோபம் என நவரசங்களை கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் ருத்ரா .
எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது தமிழ் சினிமாவில் ஒரு ஒரு நல்ல நிலையில் உச்சத்தை எட்டி பிடிப்பார் என்ற நம்பிக்கை தெரிகிறது

விஷ்ணு விஷால்

படத்தின் மைய புள்ளி அவர்தான் நாயகன் ருத்ராவிடம், கதை கேட்பது மிஸ்கின் அவர்கள் படத்தில் நடித்து கொண்டே
நாயகன், நாயகி காதல் கை கூட எண்ணுவது,
எப்படியாவது இந்த காதலர்கள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் துடிப்பது
தன் மேனேஜர் இடம் தான் ஏன் அந்த காதலர் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லும் காரணம் பல இடங்களில் சூப்பராக படத்தை தூக்கி நிறுத்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடி இல்லை ,சண்டைக் காட்சிகள், இல்லை இருந்தாலும் படம் முழுக்க நிறைவாக காட்சி உண்டு மனதிற்கு நெருக்கமாக இருக்கிறார் விஷ்ணு விஷால்
படத்தில் நம்பிக்கை நட்சத்திரம் இவர் தான்
: நாயகி மிதுலா பாஸ்கர்

மீரா என்ற கதாபாத்திரத்தில் தன் மாமாவின் கொடுமையால், வயலன்ஸ் பிடிக்காது என்ற கதாபாத்திரத்தில்
அழகான தேவதையாக
அம்சமாக படம் முழுக்க வந்து காதல், கொஞ்சம் கவர்ச்சி, அதோட எமோஷனல் என கலந்த கட்டி நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். தன் காதலன் தன்னிடம் கோபம் காட்டும்போதெல்லாம் அவருடைய மாமாவை நினைத்து ஒப்பிட்டு பார்க்கும் அந்த கம்பேரிசன், தன் காதலன் தனக்கு சப்போர்ட் செய்ய மாட்டார் என்று அவர் துடிக்கும் துடிப்பு, மணி ப்பால் “சென்ற பிறகு அவருடைய நடிப்பு எல்லாமே சூப்பராக இருக்கிறது இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் மிதுலா பாஸ்கர் தான்
: மற்ற கலைஞர்கள்

நாயகனின் சித்தப்பாவாக
முரளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன் படம் முழுக்க நாயகனுக்கு துணையாக நின்று ஒரு அற்புதமான நடிப்பை கொடுத்து இருக்கிறார.
மிஸ்கின் இயக்கும் பொழுதெல்லாம் இந்த காட்சி ஓகே என்று அவரிடம் வாங்கி கட்டிக்கொண்டு அந்த காட்சி ஓகே ஆகும் பொழுது அவர் துள்ளி குதிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.
வெல்டன் சித்தப்பா

அடுத்து கீதா கைசா கைலாசம் “நாயகி மீராவின் ,அம்மாவாக வந்து நினைவுகள் தடுமாறி கஷ்டப்படும் போது மனதில் இடம் பிடிக்கிறார்
மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த கலைஞர்கள்

பாலாஜி சக்திவேல் ,
மற்றும் மேனேஜராக வரும் ரெடின் கிங்ஸ்லி,
சுஜாதா பாபு ,
நிவாசன் கிருஷ்ணன்,
அருண் ,
நாயகனின் அப்பாவாக வரும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பில் அசத்தி உள்ள
விஜய் சாரதி ,
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவராக குடும்பத்துக்கு அமைதியை தராத கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார்.

கஸ்தூரி
நாயகனின் அம்மாவாக வங்கி ஊழியராக கணவரின் கோபத்தை தாங்கிக் கொள்ளும் சராசரி குடும்பப் பெண்மணியாக நடித்திருக்கிறார். அவருடைய ரியல் கதாபாத்திரத்தை இந்த ரியல் கதாபாத்திரத்திற்கும் கொஞ்சம் பொருத்தம் இல்லை என்றாலும் நடிப்பு சிறப்பு
வைபவி புதிய வரவு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்.

இயக்குனர் மிஷ்கின்
அவர் வருகின்ற காட்சிகளில் கலகலப்பு உண்மையான இயக்குனர் மிஸ்கின் எப்படி இருப்பாரோ அப்படியே படத்திலும் காட்டி கலகலப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர்

: தொழில்நுட்ப கலைஞர்கள்

ஜென் மார்ட்டின் , இசையில்  பாடல்கள்   அருமை . பின்னணி இசையும்
அருமை

 செம  ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை அதுவும் கோவா காட்சிகள் செம. நாயகன், நாயகிகளையம்
கண்ணியமாக, கொஞ்சம் கவர்ச்சி யாகஅழகாக காட்டி இருக்கிறது கேமரா

.எடிட்டிங்
கச்சிதம் .இரண்டேகால் மணி நேரம் படம் ஓடுகிறது .
படம் சீராக செல்ல படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

சபாஷ்  டைரக்டர்
அனைவருக்கும்
எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய கதைக்கரு , கதைக்களம் . காமெடி  கலாட்டாக்களுக்கு பஞ்சம்   இல்லாத காதல் ரசனை

 நாயகிகள்  இருவரின் அழகு முகங்கள் ,    கண்ணிய  உடை என ஆடை வடிவமைப்பு அருமையான இருக்கிறது

: Lyrics : Ahique AR, Karthik Netha, Venu Selvan, Rising Rappe
Sound Design : Sync Cinema
Sound Mixing : Aravind Menon
Sound Engineer : Dheelapan, Sriram (SEED STUDIOS)
VFX : Resol FX
DI : Mango Post
Colourist : K. Arun Sangameshvar
Stills : Naren
Publicity Stills : VS Anantha Krishnan
Publicity Designer: Gopi Prasanna
Marketing & Promotions : DEC
Post Production Supervisor : Gunasekara M
Production Manager : Dass
Production Executive : Veerasangili Ramasamy
CFO : Pannerselvam
Production Controller

என்ன திரைக்குப் பின்னால் உழைத்த அத்தனை கலைஞர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

மக்கள் தொடர்பாளர்கள்
திரு.சுரேஷ்சந்த்ரா
அவர்கள்,
திரு அப்துல் நாசர் அவர்கள்
படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மொதத்தில் இந்த ஓஹோ எந்தன் பேபி ஓஹோ என்று
ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்கும் இப்படம் வெற்றி பட்டியலில்🌷