திருமதி& மிஸ்டர் (Mrs &mr) திரை விமர்சனம்

இது ஒரு காதல் அடல்ட் ,காமெடி திரைப்படம் . வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளார் மற்றும் ஜோவிகா ிஜய் குமார் தயாரிப்பாளர் ஆக களம் இறங்கி உள்ளார். தயாரிப்பு நிறுவனம் வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ்

கதைக்களம்

இந்தப் படம் 40 வயதுக்கு மேற்பட்ட மனைவி வித்யா அருண் ( வனிதா விஜயகுமார் ) திருமணம் செய்து கொண்டு குழந்தை பெறுவதா? என்ற குழப்பத்தில் போராடும் நாயகி யாக,
அந்த முடிவுகளால் வரும் சமூக அழுத்தங்கள் மற்றும் கணவன் ,மனைவி, மோதல்களை சொல்லி இருக்கிறார்கள். மேலும் அவரது கணவர் அருண் ( ராபர்ட் ) தனக்கு
குழந்தை வேண்டாம் என்று ஏன் சொல்கிறார் என்பதற்கு கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அற்புதமான டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள்

தாய்மையை உரக்க சொல்லும் இப்படம் பெண்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும்
படம் ஆரம்பம் பாங்காங் அழகான அற்புதமான அந்த நகரை காட்டி நம்மை ரசிக்க வைக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியும் ரசிப்பதற்கு இதமாக இருக்கிறது
படம் முடியும்போது ஹைதராபாத்தில் முடிவது போல காட்டி இருக்கிறார்கள்.

ராபர்ட், வனிதா விஜயகுமார் இருவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் நிறைய இருக்கிறது இளைஞர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.

ஷகிலா ,வனிதாவின் அம்மாவாக நடித்திருக்கிறார் நிறைய காட்சிகள் எமோஷனலாக அழுது நடித்திருக்கிறார்.

கணேஷ் கர் படம் முழுக்க சகுனியாக ராபர்ட் மனிதா விஜயகுமார் இருவரையும் பிரிப்பதிலேயே குறியாக இருக்கிறார்
அவர் வரும் காட்சிகள் காமெடியும் கலகலப்பு.

திருமதி &மிஸ்டர்
வனிதா விஜயகுமார்

வித்யா அருணாக வனிதா விஜயகுமார்
சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் பாங்காக்கில் கவர்ச்சி உடையில், கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கிறார். ராபர்ட் உடன் நெருக்கமான காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அதே சமயம் இந்தியாவுக்கு வந்து ஹைதராபாத்தில் தாய்மையின் உணர்வை காட்டி நடித்திருக்கிறார் .
பல காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்
தன் கணவனிடமிருந்து மட்டும்தான் தனக்கு குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தையும் அவரே இயக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள் தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றதொரு கதையை தேர்வு செய்து மக்களுக்கு கொடுத்ததற்காக அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளலாம்.
புதுமை என்றால் அது வனிதா விஜயகுமார் புரட்சி என்றால் அது வனிதா விஜயகுமார் என்று இந்த படத்தின் மூலமாக மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
மற்ற நடிகைகள் யாரும் ஏற்க தயங்கும் வேடத்தில் துணிச்சலாக நடித்ததற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தரும்
புனிதா விஜயகுமார் அவர்கள் உள்ளொன்று வைத்து வெளிவந்து பேசத் தெரியாதவர் அது போலவே படத்திலும் காட்டி இருப்பது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு கனெக்டிங் செய்துள்ளது.

ராபர்ட்

அருண் ஆக ராபர்ட்
பாடல் காட்சியில் சிறப்பாக நடனமாடி அசத்தியிருக்கிறார். ஊடல்காட்சியிலும்,
கூடல் காட்சியிலும், நாயகிக்கு நிகராக நடித்திருக்கிறார். மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் கணவராக அதற்காகத்தான் குழந்தையை வேண்டாம் என்று சொல்லும் இவரின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
நடனம், டயலாக் டெலிவரி, எமோஷனல், காமெடி கலகலப்பு, என அசத்தியிருக்கிறார் நாயகன் ராபர்ட்.

ஷகீலாவாக ஷகீலா

ஷகிலா என்றாலே கவர்ச்சி தான் என்ற நிலையை மாற்றி இந்த படத்தில் மகள் மீது பாசம் கொண்ட தாயாகவும் ,இந்த வயதிலும் தன்னால் திறம்பட நடிக்க முடியும் என்ற குணச்சித்திர வேடத்திலும்,
தெலுங்கு மொழியில் பேசி நன்றாக நடித்திருக்கிறார்
இனி இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு நிறைய அழைப்பு வரும்.
கிளைமாக்ஸ் காட்சி மகள் உயிருக்கு போராடும் பொழுது அழுது புலம்பும் அந்த தாயின் அன்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன்னை விரும்பும் பவர் ஸ்டார் இடமிருந்து விலகி ஓடுவதும்,
தன் ரசிகன் பழைய சகிலாவை எண்ணிக் கொண்டு தன்னிடம் நெருங்கி நெருங்கி வரும் பொழுதும் அவர் பதறிக் கொண்டு ஓடுவதும் சரியான காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் தியேட்டரில்.

மற்றும் இப்படத்திற்காக பணிபுரிந்த கலைஞர்கள்

ஆர்த்தி கணேஷ்கர்,
வனிதாவின் அந்த மேட்டருக்கு உதவி செய்யும் தங்கையாக நடித்திருக்கிறார்
ஷகிலா இவர் அழகைப் பற்றி பேசும்போது இவர் வியந்து போய் அவரை பார்ப்பது கலகலப்பு.
இந்நேரமும் ஏதாவது ஒன்று தின்று கொண்டு டயலாக் பேசி நடித்திருக்கிறார் ஆனால் இவர் வாய்ஸ் ஏன்? மாற்றப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை? ஆனால் இதுவும் அது சரியாக ரசிக்கவும்படி இருக்கிறது.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

கையில் ஒரு தாலியுடன் ஒரு ரோஜா பூவுடன் ஷகிலா வேண்டுமென்று 40 வருடமாக காத்திருக்கும் கண்ணா லட்டு திங்க ஆசையா இந்த பின்னணி இசை உடன்
இவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

அன்னலட்சுமியாக அம்பிகா,

சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்

ஸ்ரீமன்

படத்தின் மைய புள்ளியாக வருகிறார் இடைவேளைக்குப் பிறகு வனிதாவுக்கு அடைக்கலம் தந்து ராபர்ட் திருந்த வைக்க இவர் போடும் நாடகம் ரசிக்க வைக்கிறது
ஸ்ரீமன் வரும் காட்சிகள் படத்திற்கு கலகலப்பு.

கும்தாஜ் ,

கும்மென்று வருகிறார் வேலைக்காரி யாக
வேலைக்காரன் இவரை பழைய ஷகிலா ஆக நினைத்துக் கொண்டு கவர்ச்சி கட்ட வைத்து இடைவேளைக்கு பிறகு கவர்ச்சி காட்சிகளில் இவர் முதலிடம் பிடிக்கிறார்
மும்தாஜ் போல இல்லாவிட்டாலும், கும்தாஜ் கும்மென்று வருகிறார்.

கணேஷ்கர்,

படத்தின் வில்லன் இவர்தான் சகுனியாக ராபட்டையும் ,மனிதா விஜயகுமாரையும்,
பிரிக்க இவர் செய்யும் சூழ்ச்சி கலகலப்பை ஏற்படுத்துகிறது.
ராபர்ட் மாஸ்டருக்கும், கிரனுக்கும்,
சுபராத்திரி பாடல்
வாய்ப்பை வழங்கி படத்தில் சூடேற்றி விடுகிறார்.

ரங்கநாயகியாக பாத்திமா பாபு,
இவர் வரும் காட்சிகள் கலகலப்பு ஏற்படுத்துகிறது சமையல் நிபுணர் தாமுடன் சேர்ந்து சூப்பர் பிரியாணி செய்யும் போது கல கலப்பு.
லியோனல் மருத்துவராக வருகிறார்.

கிரண் ரத்தோட் ஐட்டம் நம்பராக சிவா ரரத்திரி ” பாடலில் சிறப்பு தோற்றம் தந்து
அசத்தி இருக்கிறார்
மற்றும்
மோகன் வைத்யா,
சமையல்காரர் தாமு,
ரவிகாந்த்,
விஜே ஷோபனா,
அணைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

இயக்குனர்

கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வனிதா விஜயகுமார்.
40 வயதில் குழந்தை வேண்டும் என்று அடம் பிடிக்கும் நாயகி, 45 வயதில் குழந்தையை பெற்று பிறகு பள்ளிக்கு அனுப்பி அதை திருமணம் செய்து கொடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் என்று சொல்லும் நாயகன், இவர்கள் இருவரின் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி எழுதி இருக்கிறார் வித்தியாசமான கதை ,அடல்ட் காமெடி, கவர்ச்சி காட்சிகள், என படம் முழுக்க நிரம்பி வழிகிறது தாய்மையின் சிறப்பையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வனிதா விஜயகுமார். வாழ்த்துக்கள் மேம் 🌷

தயாரிப்பாளர்
இளம் வயதிலேயே தயாரிப்பாளராக அம்மாவை, வைத்து படம் எடுத்து ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து இருக்கிறார் ஜோவிகா விஜயகுமார்,
அவர் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் மேலும் தொடர்ந்து படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்

ராஜபாண்டியன் ஒலிப்பதிவு பாங்காங் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும், அழகியல் வண்ணம் தெரிகிறது, வனிதா விஜயகுமார் வீடு, மற்றும் ஆர்த்தியின் ஜிம், என எல்லா இடங்களிலும் கேமரா புகுந்து கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது .
பாடல் காட்சியில் சுப ராத்திரி பாடலுக்கு ஒளிப்பதிவாளர் இளைஞர்களை உசுப்பேற்றி விட்டிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதமாக இருக்கிறது .
பவர் ஸ்டார் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணா லட்டு திங்க ஆசையா என்று வாய்ஸ் ஓசை போட்டு கலகலப்பை ஏற்படுத்துகிறார். இசையை தன் பங்குக்கு கொடுத்து இளைஞர்களை சூடேற்றி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.

பாலகுருவின், படத்தொகுப்பு இரண்டு மணி நேரம் 21 நிமிடம் கச்சிதமாக இருக்கிறது படம் விறுவிறுப்பாகவும் இளமையாகவும் கவர்ச்சியாகவும் செல்வதால் நேரம் போவதே தெரியவில்லை என்று இளைஞர்கள் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ராபர்ட் மாஸ்டர் தான் இந்த படத்துக்கு நடனம் அமைத்திருக்கிறார் அவரும் துள்ளலான நடனத்தை கொடுத்து ரசிக்க வைத்ததோடு சுபராத்திரி, பாடலுக்கு செம மூடு ஏற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார் வனிதாவுடன் பாடும் அந்த பாடல் காட்சிகளிலும், நடனம் ரசிக்க வைக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனராக நவராஜ்குமார் பணி புரிந்திருக்கிறார்.
மற்றும் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணி புரிந்தவர் அருமையான வேலைப்பாடு .
மற்றும் ஒப்பனையாளர், கொஞ்சம் எல்லோருக்கும் அதிகமான மேக்கப் என்றாலும் கவர்ச்சியான வேடத்தில் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு நல்ல மேக்கப் கொடுத்திருக்கிறார் .
ஆடை வடிவமைப்பாளர் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் இருவருக்கும் பொருத்தமான உடை தேர்வில் அசத்தியிருக்கிறார் .
மற்றும் இந்த படத்திற்காக திரைக்குப் பின்னால் உழைத்த தொழில் நுட்ப கலைஞர்கள்

Stills : Alex | Boomi
Publicity Design : TWENTY.ONE.G
SFX : Pragalanathan
Sound Mixing : Balachander
VFX / CG / DI studio : Sri Kalasa Studios
DI Colourist : Raghu Raman
Manager : Saravanan Ji
Post Production Design : Narreshkumar Babu

Music Label: Star Music

அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள் .

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்கள் இந்த படத்தை நல்ல முறையில் பப்ளிசிட்டி செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் .

மொத்தத்தில் தாய்மையின் சிறப்பை சொல்லும் இந்த திரைப்படம் பெண்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் குழந்தை பெற்று அதை வளர்த்து பெரியவர்களாக சமுதாய பொறுப்பில் உள்ளவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தையும் ,

கணவன், மனைவி ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பேசினால் அவர்களுக்குள் எந்த பிரிவும் வராது என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறது.

சில இடங்களில் அடல்ட் காமெடி, கொஞ்சம் ஆபாசமாக இருக்கிறது. இருந்தாலும் கதைக்கு தேவை என்பதால் அதை நாம் பெரிது படுத்த தேவையில்லை. நல்ல படம் மக்களிடம் போய் சேர வேண்டும் இதன் வெற்றிக்கு கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🌷🙏

ஜோவிகா விஜயகுமார் ,இந்த சின்ன வயதில் தன் உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் அவர் மேலும் பல படங்களை தயாரித்து நல்ல நடிகையாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம் .

அதேபோல நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் பல படங்களில் நடித்த அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார் வருங்காலத்திலும் இது போன்ற சிறந்த படங்களை கொடுப்பார் மேலும் படங்களை இயக்க வேண்டும் அவர் வளர வேண்டும் என்று கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🌷🙏